2014 Rasi palangal
Source: www.dinakaran.com
கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றவர்களே! நீங்கள். துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே! இந்த புத்தாண்டு பிறப்பின் போது புதன் உங்களின் சாதகமான வீடுகளில் செல்வதால் நீங்கள் சொல்லும் வார்த்தையை எல்லோரும் தட்டாமல் ஏற்றுக் கொள்வார்கள். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். இதுவரை கல்வியில் பின் தங்கியிருந்த பிள்ளைகள் இனி நன்றாகப் படிப்பார்கள். உங்கள் மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகளுக்கு புதிய கோணத்தில் தீர்வு காண்பீர்கள். இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் இனி அதிவேகமாக முடியும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கரைந்து கொண்டிருக்கிறதே என்கிற வருத்தம் நீங்கும் அளவுக்கு இனி சம்பாதிப்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைத்து அதன் மூலம் சில முன்னேற்றங்கள் இருக்கும். உங்கள் குடும்பத்திற்குள் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் யாவும் விலகும்.
உங்களின் பரம்பரைச் சொத்து நியாயமான முறையில் உங்களுக்கு வந்து சேரும். மேலும், தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வருடப் பிறப்பின் போது உங்கள் ராசிநாதனான செவ்வாய் 6ம் வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் மன உளைச்சல்கள் முற்றிலும் நீங்கும். நீங்கள் பேசும் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். உங்களின் உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. கடன்களையெல்லாம் பைசல் செய்வீர்கள்.
12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டு பிறகு காலதாமதாக தள்ளிப்போய் முடியும். கடுமையான பணிச்சுமை இருக்கும். ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 4ம் வீட்டிலேயே அமர்வதால் எப்படியாவது இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தை வழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்ப்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும்.
4.2.2014 முதல் 24.3.2014 வரை மற்றும் 16.7.2014 முதல் 14.10.2014 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாய் பலவீனமாவதால் ஆரோக்ய குறைவு, சிறுசிறு விபத்துகள், உடன்பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் மனக்கசப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் வந்து நீங்கும். 20.6.2014 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மன இறுக்கம் வந்து செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு பிரச்னைகளெல்லாம் வந்து நீங்கும்.
21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12ம் வீட்டிலும், ராகு 6ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற மனோ பயத்திலிருந்து வெளியே வருவீர்கள். எதையோ இழந்ததைப் போல் முகவாட்டத்துடன் காணப்பட்டீர்களே! இனி முகம் மலரும். உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைகளெல்லாம் கைக்கு வரும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.
ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். இந்தாண்டு முழுக்க சனி 7ல் நின்று கண்டகச் சனியாகவும், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகவும் வருவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகளும் வரக்கூடும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். மறதியால் விலை உயர்ந்த நகை, பணம், செல்போனை இழக்க நேரிடும்.
யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அநாவசியமாக மற்றவர்களின் விவகாரத்தில் தலையிட்டு நியாயம் பேசப்போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், நகச்சுத்தி, முடி உதிர்தல், அலர்ஜி வந்து நீங்கும். திடீரென்று அறிமுகமாகும் நபரை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம்.
வியாபாரிகளே! மற்றவர்களின் பேச்சை கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வாடிக்கை யாளர்களும் தேடி வருவார்கள். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். வர வேண்டிய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. துணி, சிமென்ட், செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள். சந்தை நிலவரங்கள் அறிந்து புது ஏஜென்சி எடுங்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.
உத்யோகஸ்தர்களே! கடுமையாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது. நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் வெற்றியை உறுதி செய்யலாம். ஆனாலும், உங்கள் உழைப்பை பயன்படுத்தி சிலர் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சம்பள உயர்விற்காக போராட வேண்டி வரும்.
கன்னிப்பெண்களே! தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய நண்பர்களின் நட்பால் உற்சாகம் உண்டு. காதல் எண்ணத்தை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கல்யாணம் தாமதமாகி முடியும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள். மாணவர்களே! கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். விரும்பியப் பாடப்பிரிவில் கூடுதல் செலவு செய்தும், சிலரின் சிபாரிசின் பேரிலும் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள்.
அரசியல்வாதிகளே! தலைமையின் கவனத்தைப் பெறுவீர்கள். தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள்.
கலைத்துறையினரே! கிடைக்கின்ற சாதாரண வாய்ப்பையும் வீணாக்காது தக்க வைத்துக் கொள்ளுங்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். இந்த 2014ம் ஆண்டு போராட்டமாக இருந்தாலும் உங்கள் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள்.
Source: www.dinakaran.com
கணித்தவர்: ‘ஜோதிட ரத்னா’ கே.பி.வித்யாதரன்
மேஷம்

பரிகாரம்:
மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள ஆனந்ததாண்டவபுரம் தலத்தில் அருளும் பஞ்சவடீஸ்வரரையும், கல்யாண சுந்தரி, பெரியநாயகியையும் தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.
ரிஷபம்சிறுசிறு விபத்துகளும் வந்து போகும். பயப்படாதீர்கள். பொதுவாகவே மிகவும் விலை மதிப்பு வாய்ந்த பொருட்களை வைத்துக் கொண்டு இரவுப் பயணங்களை மேற்கொள்ளாதீர்கள். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்புகளைக் கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசியத்தை மட்டும் செய்யப்பாருங்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சீக்கிரமாக முடியும். இந்தாண்டு முழுக்க சனி 6ம் வீட்டிலேயே நீடிப்பதால் எதிரிகள் அடங்குவார்கள். சிலபேர் நண்பர்கள் ஆவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடங்குவீர்கள். அதற்கான வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். சொத்துச் சேர்க்கையும் உண்டு. தந்தையாருடனான கருத்து மோதல்கள் நீங்கும். வெகுநாட்களாக அவருக்கு இருந்த நோய் விலகும். நீங்கள் காத்திருந்த அயல்நாடு செல்ல வேண்டிய விசா கிடைக்கும். சிலருக்கு புது வேலையும் கிடைக்கும். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். ஆனால், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 7ல் அமர்ந்து கண்டகச் சனியாக வருவதால் கணவன் -மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாழ்க்கைத் துணைக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், முதுகு மற்றும் மூட்டு வலி போன்றவை வந்து நீங்கும். 12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் பணவரவு உண்டு. திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 3ம் வீட் டிலேயே அமர்வதால் ஒரே நேரத்தில் பல்வேறு வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். தொடர்ச்சியான வேலைகளால் டென்ஷன் அதிகரிக்கும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்று குழம்புவீர்கள். இளைய சகோதர வகையில் மனத் தாங்கல் வரும். 20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 12ல் கேது தொடர்வதால் நீண்ட நாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோயிலுக்கு சென்று வருவீர்கள். அதுமட்டுமின்றி சொந்த ஊர் கோயில் கும்பாபிஷேகத்தையும் முன்னின்று நடத்துவீர்கள். இந்த காலகட்டங்களில் பொதுவாகவே தூக்கக் குறைபாடு இருக்கும். ராகுவும் ஜூன் 20ந் தேதி வரை 6ம் வீட்டில் நிற்பதால் மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டில் அமர்வதால் உங்களின் செல்வாக்கு கூடும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், ராகு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டியது வரும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். வியாபாரிகளே! நஷ்டங்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும். சந்தை நிலவரத்தை அறிந்து வைத்திருப்பீர்கள். நூதனமான முறையில் வியாபாரத்தை பெருக்குவீர்கள். அதற்கேற்ப முதலீடுகள் செய்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். பெயர் பலகையை நவீனமாக அமைப்பீர்கள். உங்களின் முக்கிய சாலைக்கு கடையை மாற்ற திட்டமிடுவீர்கள். வேற்று மொழிப் பேசுபவர்களால் அனுகூலம் உண்டு. அனுபவமிக்க வேலையாட்களை அமர்த்துவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், லெதர் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். பங்குதாரரை பகைத்துக் கொள்ளாதீர்கள். ஆனாலும், வெளிப்படையாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது நல்லது. உத்யோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை கூடும். இதுவரை பாரபட்சமாக நடந்து கொண்ட மேலதிகாரி இனி சரியானபடி நடந்து கொள்வார். பொறுப்புகள் கூடும் நேரம் இது. அதனால் வேலை பளுவும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசுவார்கள். அனைத்து அலுவலக கூட்டங்களிலும் உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். ஆனாலும், பணிகளை முடிப்பதில் தொய்வு வேண்டாம். சக ஊழியர்கள் உதவுவார்கள். இந்த வருடத்து இறுதிக்குள் பதவி உயர்விற்காக உங்களின் பெயர் பரிசீலிக்கப்படும். எதிர்பார்த்த சம்பளத்தோடு சலுகைகளும் சேர்ந்து கிடைக்கும். கன்னிப் பெண்களே! சாதுர்யமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். கல்வியில் கவனத்தோடு இருப்பீர்கள். காதல் இனிக்கும். ஆனாலும், பெற்றோரின் சொல்படி கேட்பீர்கள். உங்களின் ரசனைக்கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோரை தவறாகப் புரிந்து கொள்ள£தீர்கள். மாணவர்களே! புத்தக அறிவை விட பொது அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டுவீர்கள். கல்லூரியில் படிக்கும்போதே கனவு கண்ட நிறுவனத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பும் உருவாகும். மேலும், உயர் கல்வி பயில ஆசைப்படும் மாணவர்களுக்கு நல்ல கல்வி நிறுவனத்திலிருந்து உயர்கல்வி கற்கும் வாய்ப்பு அமையும். நல்லவர்கள் என்று நம்பிய சில நண்பர்களின் சுயரூபத்தை இப்பொழுது புரிந்து கொள்வீர்கள். நினைவாற்றலை அதிகப்படுத்திக் கொள்ள கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளே! சக போட்டிக் கட்சியினரைக் கூட அனுசரித்துப் போகும் மனப்பக்குவம் பெறுவீர்கள். அவர்களின் தந்திரமான காய் நகர்த்துதலை புரிந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்புகள் நீங்கும். அதனால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. கலைத்துறையினரே! இத்தனை நாள் நீங்கள் உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். மூத்த கலைஞர்களோடு நீங்கள் கொண்டிருந்த நல்ல நட்புறவால் சாதிப்பீர்கள். இந்த 2014ம் ஆண்டு உங்களின் விவேகத்தை அதிகப்படுத்தி செயலில் விரைவைக் கூட்டி வெற்றிக் கனியை தருவதாக அமையும்.
|
No comments:
Post a Comment