2014 RASI PALANGAL
SOURCE: www.dinakaran.com
கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பாராட்டுகள் குவியும்!
அன்பு நிறைந்த மனமும் ஆன்மிகப் பணி செய்வதில் ஆர்வமும் நிறைந்தவர்களே! கேது உங்கள் ராசியிலும் குரு மூன்றாம் இடத்தில் வக்ரமாகவும், சனி, ராகு 7ம் இடத்திலும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்களின் சுக ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் ரண, ருண, ரோக ஸ்தானமான கன்னிக்கும், கேது விரய ஸ்தானமான மீனத் திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி அஷ்டம ஸ்தானமான விருச்சிக ராசிக்குச் செல்கிறார்.உங்கள் ராசிக்குள்ள களத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், லாப ஸ்தானம் ஆகிய இடங்களை குரு பகவான் தனது அருட்பார்வையால் நிறைவு செய்கிறார். இதனால் உங்கள் பேச்சில் வசீகரமும் இனிமையும் வேதாந்த ரகசியங்களும் கலந்தே இருக்கும்.
உத்யோகஸ்தர்கள்: தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுப மங்களச் செலவுகளை செய்வார்கள். உங்களுக்குத் தேவையான அளவு பொருளாதாரமும் திருப்தியாக இருக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களால் வேத வாக்காக கருதப்படும். ஆதாய பலன்களைத் தரும். பார்க்கும் உத்யோகத்தில் முழு தன்னிறைவும் பாராட்டுகளும் கிடைக்கும்
வியாபாரிகள்: ஜூன் மாதத்திற்கு பின் தொழில் ஸ்தானத்தை குருபகவான் புண்ணிய பார்வையாக 7ம் பார்வை பார்க்கிறார். உணவுப் பொருட்கள், பர்னிச்சர் மற்றும் ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்வோர் அதிக லாபங்கள் பெறுவார்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள். விருதுகள் பாராட்டுகள் பெறுவார்கள். ஏற்றுமதி தொழில் செய்வோருக்கு வெளிநாட்டிலிருந்து நிறைய ஆர்டர்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் சம்பந்தமான தொழில் செய்வோர் அபிவிருத்தி அடைவார்கள். எதிரிகளால் இருந்த மனக் கவலைகள் நீங்கி விடும்.
மாணவர்கள்: கட்டிடக்கலை, விவசாயம், மெக்கானிக்கல் துறையைச் சார்ந்த மாணவர்கள் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள். உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற உயற்பயிற்சிகளையும், மன வலிமை பெற யோகா போன்றவைகளையும் மேற்கொள்வீர்கள். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுவீர்கள். விளையாட்டுகளில் வெற்றிகளை காண்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரும். மேற்படிப்பிற்கு தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருக்கும். ஜூன் மாதத்திற்குப் பின் ஆயுள் ஸ்தானம் சோதனைக்கு உள்ளாவதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
பெண்கள்: கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொண்டு தொழிலில் மேன்மை பெறுவார்கள். குறிப்பாக ஆடை வடிவமைப்பு, உணவுப் பண்டங்களை தயாரிப்போர், அழகு சாதனப் பொருட்கள் விற்பவர்கள் நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். குறித்த நேரத்தில் தடைகள் விலகி விடும். திருமணமான பெண்கள் கணவரோடு இருந்து வந்த மனப் பேதங்கள் விலகும்.
கலைத்துறையினர்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும். நல்ல வருமானம் கிடைக்கும். சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். உங்களின் சமயோஜித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவெடுப்பீர்கள். போதும் என்கிற மனநிறைவைப் பெறுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். உடன் பணிபுரிபவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்தாலும் அவர்களால் பெரிய நன்மைகள் உண்டாகாது. அனாவசியப் பேச்சுகளை தவிர்க்கவும். சினிமா சார்ந்த டெக்னீசியன்கள் நிறைய வேலை வாய்ப்பு பெறுவார்கள். மரத்தில் சிறபங்களை வடிவமைக்கும் கலைஞர்கள் புதிய முயற்சிகளினால் வரவேற்பு பெறுவர்.
அரசியல்வாதிகள்: தங்கள் செயல்களைச் சாதனைகளாக மாற்றிக் காட்டுவீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். தொண் டர்களின் ஆதரவுடன் புதிய செயல்களைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் ஏற்படும் இடையூறுகள் தானாகவே விலகி விடும். உங்கள் கருத்துக்களை அடுத்தவர்களிடம் திணிக்க முயல வேண்டாம். எதிரிகளின் சூழ்ச்சியால் இருந்த அவப்பெயர் நீங்கும். அரசாங்கம் மூலமாக தொழில் செய்பவர்கள் அரசு சார்ந்த அதிகாரிகளிடம் தகுந்த அனுசரணையுடன் நடந்து ஏற்றம் பெறுவார்கள். அரசியலில் புதிய பிரவேசம் நிகழ்த்த இருப்பவர்கள் சனிபகவானின் நல்லருளைப் பலமாகப் பெற்று மக்களிடம் நற்பெயர் பெறுவார்கள்
சிறப்பு பரிகாரம்: சனிக்கிழமை தோறும் முருகனுக்கு செவ்வரளிப் பூவால் மாலை கட்டி அர்ப்பணிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், திருத்தணி, விராலிமலை.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஷட் ஷண்முகாய நமஹ”.
அதிர்ஷ்ட கல்: மரகதப்பச்சை, சாளக்கிராமம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெள்ளை.
அதிர்ஷ்ட தெய்வம்: முருகன்.
மகிழ்ச்சி பெருகும்!
வசீகரப் பார்வையும் அழகான தோற்றமும் இனிமையான பேச்சும் கொண்டவர்களே! தனவாக்கு ஸ்தானத்தில் குரு வக்ரமாகவும், ஆறாம் ஸ்தானத்தில் சனி, ராகுவும், விரய ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் தைரிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் பஞ்சம ஸ்தானமான கன்னிக்கும், கேது லாப ஸ்தானமான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி கண்ட ஸ்தான விருச்சிக ராசிக்கு வருகிறார். மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மூத்த சகோதர, சகோதரி வழிசார்ந்த உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உரு வாக குரு தனது பார்வையை செலுத்துகிறார். இதனால் மனம் மகிழ்ச்சி கொள்ளும். குடும்ப அங்கத்தினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தரு வார்கள். ஒய்வுக்குக்கூட நேரமின்றி உழைப்பே பிரதானமாக செயல்படுவீர்கள்.
உத்யோகஸ்தர்கள்: சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் குறையும். உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்திருக்கும். இதனால் நற்பெயர் பெறுவீர்கள். மேலிடத்தின் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் புதிய உத்வேகம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் உண்டு. புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கடுமையாக உழைத்து பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்வீர்கள். முடங்கிய செயல்களை மீண்டும் செய்ய முனைவீர்கள். முட்டுக் கட்டைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள். அயல்நாடு சம்பந்தமான செயல்களிலும் ஈடுபடுவீர்கள். ஷேர் துறைகளின் மூலம் நல்ல ஆதாயத்தைக் காண்பீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, பிராணாயாமம் போன்றவற்றை கற்பீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை உண்டாகும்.
வியாபாரிகள்: நீர் சம்பந்தமான பொருட்கள், பீங்கான் பொருட்கள், இறைச்சி சம்பந்தமான தொழில் செய்வோருக்கு தகுந்த லாபங்கள் கிடைக்கும். தங்கும் விடுதிகள், சுற்றுலா பஸ்கள், சுற்றுலா கைடுகள் ஆகிய தொழில் செய்பவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பார்கள். தொழிலை அபிவிருத்தி செய்யத் தேவையான நிதி உதவிகளை வங்கிகளில் தாராளமாக பெறுவார்கள். விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவார்கள். உணவுப்பொருள் உற்பத்தி செய்பவர்கள் புதிய ஆர்டர்கள் பெற்று தொழில் வளர்ச்சி காண்பார்கள். நவரத்தின கற்கள், தங்கம், வெள்ளி விற்பவர்களுக்கு பொன்னான காலமிது. மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளை நடத்துபவர்கள் வசதிகளை ஏற்படுத்தி கூடுதல் வருமானம் பெறுவார்கள். விவசாயப் பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். கட்டுமான பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் சனியின் அருளால் வளம் பெறுவார்கள். தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்களை அடைப்பீர்கள். உங்கள் நிறுவனத்திற்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
மாணவர்கள்: இன்ஜினியரிங், கேட்டரிங் மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள். தேவையான செலவுகளுக்கு பொருளாதாரம் கிடைக்கும். நற்பெயர் பெறுவீர்கள். கல்விக்கு உதவும் வகையிலான சுற்றுலாக்களில் பங்கு பெறுவீர்கள். பேச்சில் இனிமையை சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் மட்டுமே ஆரோக்யம் பெற முடியும்.
பெண்கள்: குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த பொருளாதார தடங்கல்கள் விலகும். செழிப்பான பணப்புழக்கம் ஏற்படும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் தங்கள் பணிகளில் திறமையான நிர்வாகம் செய்து உயரதிகாரிகளிடம் நற்பெயரும், பதவி உயர்வும் பெறுவார்கள். இனிமையாக பேசுதலால் சமூகத்தில் புகழ்பெறும் வாயப்புகளும் நிறைய உண்டு. வீட்டை அலங்கரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
கலைத்துறையினர்: கலைஞர்கள் தங்கள் திறமையை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவார்கள். பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். தொழிலில் புதிய சாதனைகளை நிகழ்த்தி நற்பெயரும், பரிசும், பதக்கமும் பெறுவார்கள்.
அரசியல்வாதிகள்: சேவை செய்வதில் இருந்து வந்த மந்த நிலை மாறும். கோயில்களுக்கான திருப்பணிகளில் நிறைவான பொருளாதார பங்களிப்பை உறவினர் மற்றும் நண்பர்களிடம் நன்கொடையாகப் பெற்று தன் பங்கையும் இணைத்து திருப்பணிக்கு வழங்குவார்கள்.
சிறப்பு பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கு தேங்காய் தீபம் ஏற்றவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம், கஞ்சனூர், திருப்பதி.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் நமோ வாசுதேவாய".
அதிர்ஷ்ட கல்: மரகதப்பச்சை, சாளக்கிராமம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை.
அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாஜலபதி.
மதிப்பு உயரும்!
சூழ்நிலைக்கு ஏற்ப பெருந்தன்மையான குணத்தால் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வெற்றியை வசமாக்குபவர்களே! சுய ஸ்தானத்தில் குரு வக்ரமாகவும், பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி, ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் தன ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் சுக ஸ்தானமான கன்னிக்கும், கேது தொழில் ஸ்தான ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி ரண, ருண, ஸ்தானமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். அயராது பாடுபடும் உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். சோம்பேறித் தனத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். தாய்வழி உறவுகளில் சுமுகமான நிலைமை ஏற்படும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். செய்தொழிலில் தொடர்ந்து வளர்ச்சியைக் காண்பீர்கள். பிறரின் சொத்துகளை பராமரிக்கும் யோகமும் சிலருக்குக் கிடைக்கும். நெடுநாட்களாக செய்யாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்த னைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுப்பீர்கள்.
உத்யோகஸ்தர்கள்: கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். இடமாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஊதிய உயர்வும் நன்றாக இருக்கும். கணவன் -மனைவி ஒற்றுமை மனமகிழ்வைத் தரும். ஆரோக்யத்தை அபிவிருத்தி பெறச் செய்யும் வகையில் குருவின் பார்வை உள்ளது. உத்யோகத்தில் திருப்தியும் நற்பெயரும் உண்டாகும்.
வியாபாரிகள்: பொருளாதாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே அமையும். புதிய வாகனங்களை வாங்கி அதன்மூலம் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து பலன் பெறுவீர்கள். கொள்முதலில் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளால் விளைச்சல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்து வீர்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான செலவுகள் குறையும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரணையுடன் நடந்துகொண்டால் மேலும் நன்மை அடையலாம். வாய்க்கால் வரப்புப் பிரச்னைகள் பெரிதாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகள்: மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும். உங்கள் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். வருமானத்திற்குக் குறைவு வராது என்றாலும் பொதுப் பணிகளுக்காக உங்கள் கைப்பணத்தைச் செலவழிக்கும் முன் யோசனை செய்து கொள்ளுங்கள். மற்றபடி எதிரிகளின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து வளர்ச்சியைக் காண்பீர்கள். கட்சியில் உங்கள் மதிப்பு உயரும். அதேசமயம் குறுகிய கண்ணோட் டத்தைத் தவிர்க்கவும்.
கலைத்துறையினர்: சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். இதனால் படிப்படியாக வளர்ச்சி அடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆனாலும், அனாவசியச் செலவுகளை செய்ய நேரிடும். சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
பெண்கள்: குடும்பத்தில் அனுகூலமான நிலைமையைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணமான பெண்கள் சந்தான பாக்கியம் அடையலாம். அழகு சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் பெண்கள் நிறைய வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை குருவருளால் மன மகிழ்வைத் தரும்.
மாணவர்கள்: பெற்றோரின் ஆதரவுடன் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். எனவே, அவர்களின் பழைய தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம். குருகுலக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் குருவை போற்றி நடந்து அவர் த ரும் கல்வியில் ஞான சிந்தனையுடன் செயல்பட்டு முதல்தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். அறிவியல் தொழில்நுட்ப மாணவர்களும் ஆரம்ப நிலை மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித் தருவர். யோகாசனப் பயிற்சியை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று பெயர் பெறுவார்கள்.
சிறப்பு பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு தேங்காய் நீராஞ்சன தீபம் ஏற்றவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம் மற்றும் வைஷ்ணவ திவ்ய தேசங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவே நமஹ".
அதிர்ஷ்ட கல்: மரகதப்பச்சை, சாளக்கிராமம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை.
அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாஜலபதி.
செல்வம் செழிக்கும்!
இதயம் என்னும் கடலிலிருந்து அமுதமொழி பேசி அனைவரையும் வசப்படுத் துபவரே! சுக ஸ்தானத்தில் சனியும் ராகுவும், தொழில் ஸ்தான த்தில் கேதுவும், விரய ஸ்தானத்தில் குரு வக்ர மாகவும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் சுய ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் தைரிய ஸ்தானமான கன்னிக்கும், கேது பாக்கிய ஸ்தானமான மீனத்திற்கும் பெயர்ச்சியா கிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தான விருச்சிக ராசிக்குச் செல்கிறார்.இந்த ஆண்டு நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும்.
சிறிய அளவு முயற்சிகள்கூட பெரிய பலனைத் தரும். திரு மணம் போன்ற சுப காரியங்கள் சுலபமாக நடக்கும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். உடல் உபாதைகளுக்கு மாற்று சிகிச்சை முறைகளை மேற்கொள்வீர்கள். அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேர்வார்கள். வருமானம் படிப்படியாக உயரும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்களின் போட்டியாளர்களை திடமான நம்பிக்கையுடன் வெற்றிகொள்வீர்கள். நூதனத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களின் செயல்களில் வேகத்துடன், விவேகத்தையும் கூட் டிக்கொள்வீர்கள்.
உத்யோகஸ்தர்கள்: மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். கடின உழைப்பை தாரக மந்திரமாகக் கொண்டு உழைக்கவும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகவும். சிலர் உங்களுடன் பகைமை பாராட்டுவார்கள். திட்டமிட்டபடி செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பழைய கடன்களை அடைத்த பிறகே புதிய கடன்களைப் பெற முயற்சி செய்யவும்.
வியாபாரிகள்: வாடிக்கையாளர்களின் வருகை நல்லமுறையிலேயே இருக்கும். ஆனாலும் புதிய முதலீடோ அல்லது விரிவாக்கலோ இருந்தால் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். விவசாயிகள் லாபத்தைக் காண்பீர்கள். பாசன வசதிகளுக்காக அதிக செலவு செய்ய நேரிட்டாலும் அதனால் நன்மையே ஏற்படும். கறவை மாடுகள் வாங்கி பால் வியாபாரம் செய்தும், மரங்கள் வளர்த்தும் லாபம் பெறுவீர்கள். புதிய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள்: பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். அதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவும், கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறி புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். ஆனாலும், மாற்றுக் கட்சியினர் உங்கள் பேச்சில் குறை காண முயல்வார்கள். எனவே அனாவசிய விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
கலைத்துறையினர்: சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். மற்றபடி உங்களின் பெயரும், புகழும் உயரும். சக கலைஞர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். சக கலைஞர்களுடன் நல்ல உறவை வைத்துக் கொள்வீர்கள். கடன் வாங்கி செலவழிக்கும் நிலை உண்டாகும். தொழில்ரீதியாக உங்களை புறந்தள்ள நட்புடன் பழகியவர்களே முயற்சி செய்வார்கள்.
பெண்கள்: மதிப்புக்கும், மரியாதைக்கும் குறைவு வராது. உங்களின் பிரார்த்தனைகள் வீண் போகாது. பண வரவு அதிகரிக்கும். குழந்தைகள் உதவிகரமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் நடத்துவதில் ஏற்பட்ட தடைகள் விலகும். உற்றார், உறவினர்களுடன் ஒற்றுமை தொடரும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சிறிது மந்த நிலை காண்பார்கள். அரசிடம் கேட்டிருந்த கடனுதவிகள் மற்றும் வரவேண்டிய நிலுவைத் தொகைகள் எளிதாகக் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இடைஞ்சல் செய்யும் நோக்குடன் சிலர் செயல்படுவார்கள். பணிச் சுமைகள் காரணமாக மனக்குழப்பம் உண்டாகி பின்னர் சரியாகும்.
மாணவர்கள்: படிப்பில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோரின் உதவியுடன் நன்றாகப் படித்து வெற்றி பெறுவீர்கள். சோம்பேறித்தனத் தை தள்ளி வைத்துவிட்டு ஆசிரியர் நடத்திய பாடங்களை அன்றைய தினமே படித்து மதிப்பெண்களை அள்ளுங்கள். உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொண்டு உடலையும், மனதையும் நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். மரு த்துவம், இன்ஜினியரிங் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனத்துடன் செயல்பட்டு தேர்ச்சி பெறுவார்கள். இது தொடர்பான கல்வி நிறைவு செய்தவர்கள் உடனடியாக வேலை வாய்ப்பு பெறுவார்கள். நண்பர்களால் உதவி உண்டு.
சிறப்பு பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு நெய் மற்றும் இலுப்பை எண்ணெய் கலந்து தீபம் ஏற்றவும். மல்லிகை மலரை ஒவ்வொரு பஞ்சமியன்றும் அம்மனுக்கு வழங்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: சமயபுரம், திருவேற்காடு, குலசேகரன்பட்டினம், திருக்குற்றாலம்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ".
அதிர்ஷ்ட கல்: முத்து, பிளாட்டினம், ஸ்படிகம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்.
அதிர்ஷ்ட தெய்வம்: மாரியம்மன்.
ஆரோக்யம் கூடும்!
தன் மனதிற்கு சரியெனப்பட்டதை செயல்வடிவமாக்கி தனி வழியே நடை போடுபவர்களே! தைரிய ஸ்தானத்தில் சனியும் ராகுவும், பாக்கிய ஸ்தானத்தில் கேதுவும், லாப ஸ்தானத்தில் குரு வக்ரமாகவும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் மோக்ஷ, விரய ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் தனஸ்தான கன்னிக்கும், கேது ஆயுள் ஸ்தானமான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி அர்த்தாஷ்டம சனியாக சுக ஸ்தானமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இந்த ஆண்டு உங்களின் கிரக நிலைகளை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் பொறுமையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனை த்தும் முழுமையாகக் கைகூடும். உங்களை வாட்டிய உடல் உபாதைகளும் நீங்கிவிடும்.
உத்யோகஸ்தர்கள்: அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சக ஊழியர்களிடம் உங்கள் மனதில் உள்ளவற்றைக் கூற வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்கிற நிலையில் இருப்பதே சிறப்பு. மற்றபடி அலுவலகரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்கள் திறமையில் குறைவு ஏற்படாது.
வியாபாரிகள்: முயற்சிகளுக்கேற்ற லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடை ஏற்பட்டாலும் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்த நினைக்க வேண்டாம். இருப்பதை நேர்த்தியாகச் செய்து முடிப்பதே சிறப்பு. புதிய கடன்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய நிலங்களை வாங்குவீர்கள். கணக்கு, வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு வங்கிகளிடம் சலுகைகளைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள்: கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். மற்றபடி முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். மேலிடத்தின் அனுகூல செயலபாட்டை தேவையான நேதத்தில் தடையின்றி பெறுவீர்கள். பிறருக்காக நடத்தித் தரவேண்டிய பணிகள் இந்த வருடம் நடக்கும். அடுத்தவர் செலவில் நீங்கள் உங்கள் தேவைகள் எதையும் பூர்த்தி செய்ய மாட்டீர்கள். மேலிடத்தில் எல்லா வகையிலும் உங்களுக்கு துணை நிற்பார்கள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
கலைத்துறையினர்: உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். ‘உழைப்பே உயர்வு' என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். ஒப்பந்தங்களை சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்தாலும் பண வரவுக்கு தாமதம் ஏற்படலாம். ஆனாலும், ரசிகர்களின் உற்சாகமான ஆதரவு உங்கள் மன வருத்தத்தைக் குறைக்கும் மருந்தாக அமையும். சினிமா, நாடகம், சின்னத்திரை ஆகியவற்றில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிகர், நடிகையர்கள் தங்களுக்குள்ள திறமையை நன்கு வளர்த்துக் கொள்வார்கள். புதிய வாய்ப்புகளையும் நிறைந்த பொருளாதாரத்தையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவார்கள்.
பெண்கள்: கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். ஆனாலும், கணவர் வழி உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆன்ம பலம் பெறவும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத் திடமிருந்து தேவையான சலுகைகளைப் பெறுவார்கள். சேமிப்பு செய்து பணத்தை குடும்பத்தின் சுப செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் தங்கள் உறவினர்கள் மூலம் நன்மை அடைவார்கள்.
மாணவர்கள்: உழைப்புக்கேற்ற மதிப்பெண்களை பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு நன்றாகவே அமையும். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். நடனம், இசைப் பயிற்சி பெறும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பயின்று தேர்ச்சி பெறுவார்கள். சிவில், ஓவியம் சம்பந்தமான பயிற்சி மாணவர்கள் புதிய யுக்திகளை அறிந்து நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மோட்டார், வாகனம், படகுகள், விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதார தேவைகள் எளிதாகக் கிடைக்கும்.
சிறப்பு பரிகாரம்: பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு நெய் மற்றும் தேன் கொடுக்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: சூரியனார் கோவில், பாபநாசம், திருவண்ணாமலை.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் நமோ பகவதே ஸ்ரீருத்ராய நமஹ".
அதிர்ஷ்ட கல்: மாணிக்கம், செம்பு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பிரவுன்.
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன், சூரியன்.
செயல்திறன் அதிகரிக்கும்!
எல்லோரும் தன்னைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரிடமும் வலியச் சென்று பேசி உதவும் தன்மை கொண்டவர்களே! தன, வாக்கு ஸ்தானத்தில் சனி, ராகுவும், ஆயுள் ஸ்தானத்தில் கேதுவும், தொழில் ஸ்தானத்தில் குரு வக்ரமாகவும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் லாப ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் சுய ஸ்தானமான கன்னிக்கும், கேது களத்திர ஸ்தான ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
சனீஸ்வர பகவான் 17.12. 2014 அன்று பெயர்ச்சியாகி தைரிய, வீரிய ஸ்தான விருச்சிக ராசிக்கு செல்கிறார். ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால் பதிக்க போராடிக் கொண்டிருந் தவர்கள் அரசுத் துறையிலிருந்து சலுகைகளைப் பெற குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். நேர் வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும். தொழிலில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். வேறு ஊருக்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும்.
உத்யோகஸ்தர்கள்: விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள்.
வியாபாரிகள்: புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும், நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். கடன் கொடுக்காமல் முடிந்தவரை தவிர்க்கவும். பழைய கடன்களை சீரிய முயற்சியின் பேரில் படிப்படியாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். விவசாயிகள் நூதன யுக்திகளைப் புகுத்தி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். வங்கிகளிட மிருந்தும், கூட்டுறவு சங்கங்களிடமிருந்தும் எதிர்பார்த்த கடன் மானியத்துடன் கிடைக்கும். மனச்சோர்வு நீங்கி, எதையும் சாதிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். கருப்பு நிற பயிர்களை உற்பத்தி செய்தால் மேலும் நன்மை அடையலாம்.
அரசியல்வாதிகள்: பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்படுவீர்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் உட்கட்சிப் பூசல்களில் சிக்கி மன வருத்தத்துக்கு ஆளாவீர்கள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்போது நன்றாக யோசிக்கவும். மற்றபடி தொண்டர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும்.
கலைத்துறையினர்: தேவைக்கேற்ப வருமானத்தைக் காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய கலைஞர்கள், நண்பர்கள் ஆவார்கள். புதிய சொத்துகளை வாங்குவீர்கள். வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்.
பெண்கள்: இந்த ஆண்டில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும். பொருளாதாரத்தில் சிறப்புகளை காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கௌரவத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட விரய செலவுகளை குறைப்பீர்கள். பணியாற்றும் பெண்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு மனநிறைவு பெறுவார்கள். ஆன்மிக எண்ணங்கள் வளர்ச்சி பெற்று புதிய சக்தியை உருவாக்கித் தரும். சமூகத்திலும் உறவினர்களிடமும் நற்புகழ் கிடைக்கும். வீட்டை அலங்காரம் செய்வதில் மனம் ஈடுபாடு கொள்ளும். ஆடை, ஆபரணச் சேர்க்கை நிச்சயம் உண்டாகும்.
மாணவர்கள்: பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அன்பு கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். உங்களின் முயற்சிகள் தடைகளைத் தகர்த்து தாமதமின்றி வெற்றி பெறும். விளையாட்டில் சாதனைகளைச் செய்வீர்கள். கணிதம், வருமான வரி, வரவு செலவு தணிக்கை, நிர்வாகம், ஓவியப் பயிற்சி பெறும் மாணவர்கள் சிறப்பாக படிப்பர். விளையாட்டுகளில் சாகசம் புரிவீர்கள். மாணவர்கள் புகழும் விருதும் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தெய்வ வழிபாடுகள் நல்வழிப்படுத்தும். தைரியமான செயல்கள் செய்யும் வாய்ப்பு உருவாகும். நண் பர்கள் உதவிகரமாய் இருப்பார்கள். உடல்நலத்தில் கவனம் வேண்டும். பெற்றோருடன் உறவு நிலை சுமுகமாய் இருக்கும்.
சிறப்பு பரிகாரம்: புதன் ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோயிலில் 11 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு.
செல்ல வேண்டிய தலம்: திருவெண்காடு, சபரிமலை, பாபநாசம் சொரிமுத்து ஐயனார்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் சம் ஸ்ரீசாஸ்தாயை நமஹ".
அதிர்ஷ்ட கல்: பச்சை, மரகதம், வைரம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட தெய்வம்: விநாயகர், ஐயப்பன்.
தடைகள் நீங்கும்!
சுய தேவைகளை விட்டுக்கொடுத்து அடுத்தவர் நலம் சிறக்க செயலாற்றி நற்பெயர் பெற்றுவருபவர்களே! சுய ஸ்தானத்தில் சனியும் ராகுவும், களத்திர ஸ்தானத்தில் கேதுவும், பாக்கிய ஸ்தானத்தில் குரு வக்ரமாகவும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்க தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் தொழில் ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் விரய ஸ்தானமான கன்னிக்கும், கேது ரண, ருண, ரோக ஸ்தான ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி வாக்குச் சனியாகி தனஸ்தான விருச்சிக ராசிக்குச் செல்கிறார். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவான சிந்தனைகள் குடிகொள்ளும். கடன் பிரச்னை தீர வழிகளைக் காண்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடைகள் தீர்ந்து மீண்டும் வேலைகள் துவங்கும்.
உத்யோகஸ்தர்கள்: நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். திட்டமிட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களைப்பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டாம். மேலும், உங்களின் கோரிக்கைகள் சற்று தாமதமாகப் பரிசீலிக்கப்படும். மற்றபடி அலுவலக ரீதியான பயணங்கள் அனுகூலமான பலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகள்: இந்த ஆண்டில் எதிர்பார்த்த லாபத்தைக் காண முடியாது. தீயவர்களை இனம் கண்டு அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. போட்டிகள் நியாயமற்றவையாக இருக்கும் என்பதால் வியாபாரத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. கூட்டாளிகள் உங்கள் முடிவுகளை ஆமோதிப்பதுபோல் தெரிந்தாலும் முதுகுக்குப் பின்னால் தவறாகப் பேசுவார்கள். இதனால் அவர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றபடி கொடுக்கல், வாங்கலில் நஷ்டங்கள் ஏற்படாது. விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள். கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான செலவுகளை செய்வீர்கள். கையிருப்புப் பொருட்கள் மீது அக்கறை காட்டவும். மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து கூடுதல் வருமானத்தைப் பெற முயல்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்வீர்கள்.
அரசியல்வாதிகள்: பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் உங்களை புதிய பதவிகள் தேடி வரும். எதிரிகள் உங்களிடம் அடங்கி நடப்பார்கள். மக்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவுக்குக் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
கலைத்துறையினர்: சிறப்பான புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் பெயரும், புகழும் உயரும். உங்களின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களுடன் நல்லுதவிகளைப் பெறுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். அனாவசிய பயணங்களை செய்ய வேண்டாம். சிறந்த சாதனை படைத்து பாராட்டுகளும் விருதுகளும் பெறுவார்கள். சாகசங்கள் நிகழ்த்தி பரிசு பெறுவார்கள். மனம் ஆன்மிக வழியை அதிகம் நாடும். பேசும் வார்த்தைகளில் அனல் வீசும். நற்செயல்கள் செய்வதினால் புகழ் பலம் பெறுவீர்கள். வீடு கட்டும் வாய்ப்புகளும் வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.
பெண்கள்: கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவும், சுற்றமும் அனுகூலமாக இருக்கும். அவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். விருந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தாய்வீட்டுச் சீதனம் வந்து சேரும். உங்கள் பெயரில் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் கை சேமிப்பை குடும்பச் சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ காரியங்களில் பங்கெடுக்கும் மார்க்கங்கள் நிரம்பவே உண்டு. சமூகத்திலும் குடும்ப உறவினர்களிடமும் தகுந்த புகழ் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கிடும் யோகபலன்கள் உண்டாகும்.
மாணவர்கள்: படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய பாடப் பிரிவுகளைப் பெற்று மகிழ்வீர்கள். விளையாட்டில் பரிசுக¬ளப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் சார்ந்த துறைகளில் மாணவர்கள் பணிபுரிவதற்கான தகுதியை பெறுவார்கள். பொதுவில் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். ஆயுள் பலம் பெறும். சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகள் மனநிறைவைத் தரும்.
சிறப்பு பரிகாரம்: வெள்ளிக் கிழமைதோறும் பச்சரிசி சாதம், வெல்லம், எள், நல்லெண்ணெய் கலந்து காக்கைக்கு வைக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு.
செல்ல வேண்டிய தலம்: கஞ்சனூர், திருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் லம் ஸ்ரீ கமலதாரிண்யை நமஹ".
அதிர்ஷ்ட கல்: வைரம், பிளாட்டினம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட தெய்வம்: லக்ஷ்மி.
லாபம் அதிகரிக்கும்!
நிதானத்தைக் கடைப் பிடித்து லட்சிய மனதுடன் செயல்பட்டு எதிலும் எளிதாக வெற்றி பெறுபவர்களே! கேது உங்கள் ரண, ருண, ரோக ஸ்தான ஆறாம் ராசியிலும் குரு ஆயுள்ஸ்தான இடத்தில் வக்ரமாகவும், சனி, ராகு 12ம் இடத்திலும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் ஆயுள் ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் லாப ஸ்தான கன்னிக்கும், கேது பூர்வ புண்ணிய ஸ்தான ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி சுய ஸ்தான விருச்சிக ராசிக்கு வருகிறார்.
உத்யோகஸ்தர்கள்: நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். திட்டமிட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களைப்பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டாம். மேலும் உங்களின் கோரிக்கைகள் சற்று தாமதமாகப் பரிசீலிக்கப்படும். மற்றபடி அலுவலக ரீதியான பயணங்கள் அனுகூலமான பலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும். புதிய பயிற்சிகளை மேற் கொள்வீர்கள்.
வியாபாரிகள்: இந்த ஆண்டில் எதிர்பார்த்த லாபத்தைக் காண முடியாது. தீயவர்களை இனம் கண்டு அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. போட்டிகள் நியாயமற்றவையாக இருக்கும் என்பதால் வியாபாரத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. கூட்டாளிகள் உங்கள் முடிவுகளை ஆமோதிப்பதுபோல் தெரிந்தாலும் முதுகுக்குப் பின்னால் தவறாகப் பேசுவார்கள். இதனால் அவர்களிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றபடி கொடுக்கல், வாங்கலில் நஷ்டங்கள் ஏற்படாது. விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள். கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான செலவுகளை செய்வீர்கள். கையிருப்புப் பொருட்கள் மீது அக்கறை காட்டவும். மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து கூடுதல் வருமானத்தைப் பெற முயல்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்வீர்கள்.
அரசியல்வாதிகள்: பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் உங்களை புதிய பதவிகள் தேடி வரும். எதிரிகள் உங்களிடம் அடங்கி நடப்பார்கள். மக்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவுக்குக் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிலை வந்து சேரும். உடனிருப்பவர்களால் அவ்வப்போது உங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். சிற்சில நேரங்களில் வம்புதும்புகள் வந்து சேரலாம். கவனம்தேவை. அதற்காக வீணான கோபமும் ஆத்திரமும் கொள்ள வேண்டாம். அதை சமாளிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களிடத்தில் உண்டு என்பதனை உணருங்கள்.
கலைத்துறையினர்: சிறப்பான புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் பெயரும், புகழும் உயரும். உங்களின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களுடன் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். அவர்களிடமிருந்து நல்லுதவிகளைப் பெறுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். அனாவசிய பயணங்களை செய்ய வேண்டாம். கலைத்துறையில் டெக்னிக்கல் துறையில் சார்ந்தவர்கள் மேன்மை அடைவர். பிற நாடுகளுக்குச் சென்று பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது. புகழ் பாராட்டு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். காத்திருந்து கடமைகளை சரியாக செய்பவர்களுக்கு வெற்றிக்கனி கிடைக்கும். வெளியூர் படப்பிடிப்புக்கு செல்லும்போது அலைச்சலும் அத ன்மூலம் வேலைப்பளுவும் மனதில் சோர்வும் ஏற்படும். சிலர் போட்டியாளர்கள் மூலம் சில பிரச்னைகள் சந்திக்க வேண்டி வரலாம்.
பெண்கள்: கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவும், சுற்றமும் அனுகூலமாக இருக்கும். அவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். விருந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தாய்வீட்டுச் சீதனம் வந்து சேரும். உங்கள் பெயரில் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
மாணவர்கள்: படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளைப் பெற்று மகிழ்வீர்கள். விளையாட்டில் பரிசுக¬ளப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.
சிறப்பு பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளுக்கு எலுமிச்சையில் விளக்கு ஏற்றி வழிபடவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், மதுரை, திருவொற்றியூர்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் ஸ்ரீ அம்பிகாயை நமஹ".
அதிர்ஷ்ட கல்: பவழம், ருத்ராக்ஷம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, மஞ்சள்.
அதிர்ஷ்ட தெய்வம்: முருகன், அம்பாள்.
முயற்சிகளில் வெற்றி!
அன்பையும் பண்பையும் உணர்வோடும் உயிரோடும் இணைத்து செயல்படுபவர்களே! கேது உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் ராசியிலும் குரு களத்திர ஸ்தான இடத்தில் வக்ரமாகவும், சனி ராகு 11ம் இடத்திலும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த் தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குரு பகவான் 18.6.2014 அன்று உங்கள் ஆயுள் ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானமான கன்னிக்கும், கேது சுகஸ்தான ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி விரய.ஸ்தானமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். செய்தொழிலில் உங்களை முன்னிலைப் படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும். எதிர்பாராத நபர்களிடமிருந்து நல்லாதரவு கிடைக்கும்.
உத்யோகஸ்தர்கள்: கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும் என்பதால் கவனமாக நடந்து கொள்ளவும். அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவும். பிரச்னைகளை வளரவிட வேண்டாம். ஊதிய உயர்வு சிறப்பாக அமையும். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயரை வாங்குவீர்கள்.
வியாபாரிகள்: வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முதலீடுகள் செய்வதற்கு பழைய முதலீடுகள் கைகொடுக்கும். போட்டிகள் சற்று கடுமையாக இருந்தாலும் அவற்றை சாதூர்யத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். விவசாயிகளுக்கு கொள்முதல் அதிகரித்தாலும் லாபம் குறைவாகவே கிடைக்கும். அதனால் உபரி வருமானத்தைப் பெருக்க காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றை பயிரிட்டு பலனடைவீர்கள். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.
அரசியல்வாதிகள்: சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும், புகழும் உயரும்.
கலைத்துறையினர்: விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். காலதாமதம் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்களை செய்வீர்கள். சக கலைஞர்களில் நம்பகமானவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் குறையும். பல நாட்களாக வராமல் இருந்த தொகை உங்கள் கையைத் தேடி வரும். புதிய தொழில் நுட்பத்தை அறிந்துகொள்வீர்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு பொருளாதாரத்தில் சிறந்த நிலைக்கு வரலாம்.
பெண்கள்: கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். சகோதர, சகோதரி உறவில் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. வாழ்வில் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடமாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். குழந்தைகளிடம் அன்புடன் பழகுங்கள். மேலும் அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் மனிதாபிமானத்துடன் பழகுங்கள். இதன்மூலம் மனக்கவலை மறைந்து மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். புதிய பொருட்கள் வந்து சேரும். ஆனால், அவற்றை நீண்ட நாட்கள் வைத்திருக்க அதன்மீது கவனம் தேவை. பழைய வீடு, வாகனங்கள் வந்து சேரும்.
மாணவர்கள்: நல்ல முறையில் படித்து மதிப்பெண்களை பெறுவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உற்சாகம் அடைவீர்கள். உங்களின் வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும். படிப்புக்குத் தேவையான பெருளாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆபத்தான இடங்களுக்குள் பிரவேசித்தல் ஆகாது. எதிர் கருத்துகள் கொண்டவர்கள் கூட அனுகூலமாக மாற நிலை உண்டு. அறச் செயல்களும் ஆன்மிக வழிபாடுகளும் உங்களை காத்து நிற்கும்.
சிறப்பு பரிகாரம்: சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும். ஊற வைத்த நாட்டு கொண்டைக் கடலையை (மூக்கடலை) உங்கள் கையால் கோர்த்து குருவிற்கு அர்ப்பணிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், திருவானைக்காவல்
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் சம் ஸ்ரீகுருவே நம:".
அதிர்ஷ்ட கல்: மஞ்சள் புஷ்பராகம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன், கிருஷ்ணர்.
பணவரவு அதிகரிக்கும்!
கடல்போல பரந்த மனப்பான்மை உள்ளத்துடன் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்பவர்களே! கேது உங்கள் சுகஸ்தானமான நான்காம் ராசியிலும், குரு ரண, ருண, ரோக ஸ்தான இடத்தில் வக்ரமாகவும், சனி, ராகு 10ம் இடத்திலும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்க தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குரு பகவான் 18.6.2014 அன்று உங்கள் களத்திர ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானமான கன்னிக்கும், கேது தைரிய வீர்ய ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி லாபஸ்தானமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இந்த வருடம் ஏற்கனவே இருக்கும் புகழுடன் புதிய புகழ் சேரும் மார்க்கமும் உண்டு.
வாகனத்தை இயக்கும்போது மட்டும் கவனமுடன் செயல்பட வேண்டும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் வி ரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும். உங்களின் பொருளா தாரத்தில் மேல் நிலையைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளை வெற்றியுடன் செயல்படுத்துவீர்கள். குடும்பத்தாருடன் கவலையில்லாமல் கலகலப்பாகப் பேசிப் பழகுவீர்கள். உற்றார், உறவினர்கள் பாசம் காட்டுவார்கள். சமுதாயத்தில் பிரபலமான குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும். ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வ ரும். குழப்பவாதிகளையும், அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள். அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளைப் பெறுவீர்கள்.
உத்யோகஸ்தர்கள்: இயந்திர வாழ்க்கை யிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பீர்கள். உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டு விலக்கி விடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் அலுவலக வேலைப்பளு கூடினாலும் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப உதவி செய்வார்கள்.
வியாபாரிகள்: ஓய்வில்லாமல் உழைத்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பீர்கள். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனக் கசப்புகளை சமாளித்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களைப் பெற்று கழனிகளை சீரமைப்பீர்கள். மானியங்கள் கிடைக்கும். புதிய விவசாயக் கருவிகளை வாங்குவீர்கள். விவசாய இடுபொருட்களுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். மனதிலிருந்த அச்சம் விலகும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். விவசாயக் கூலிகளை கௌரவமாக நடத்துவீர்கள்.
அரசியல்வாதிகள்: கட்சி மேலிடத்தின் ஆதரவு சில நேரங்களில் கூடுதலாக கிடைக்கும். ஆதரவு குறைந்த நேரங்களில் சற்று அடங்கிப் போகவும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன் போட வேண்டாம்.
கலைத்துறையினர்: வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். புதிய நண்பர்களால் பலன் அடைவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்புகள் உயரும்.
பெண்கள்: கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சீரிய முயற்சி செய்து சுப காரியங்களை நடத்துவீர்கள். உறவினர்கள் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். சமையல் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். வேலைக்குச்
செல்லும் பெண்கள் நீங்கள் விரும்பிய இடத்திற்கு பணி இடமாறுதலும், பதவி உயர்வும் கிடைக்கும்.
மாணவர்கள்: கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்காக போதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டினால் உடல் ஆரோக்யத்தை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருக்கும். எல்லோரும் நட்புடனே பழகுவர். ஆசிரியரிடம் மரியாதை சமச்சீராய் இருக்கும். வெளியூர் பிரயாணங்கள் அனுபவ பாடங்களை கற்றுத்தரும்.
சிறப்பு பரிகாரம்: வெற்றிலை மாலைக் கட்டி அனுமனுக்கு சூட்டவும். மல்லிகை மலரை பெருமாளுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்யவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு.
செல்ல வேண்டிய தலம்: திருப்பதி, நாமக்கல், திருநள்ளாறு.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் ஸம் ஸ்ரீசனீச்வராய நமஹ".
அதிர்ஷ்ட கல்: நீலக்கல், கார்னெட்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை.
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன், ஆஞ்சநேயர்.
பதவி உயரும்!
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நிறைந்த மனதுடன் வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ளும் சக்தி மிக்கவர்களே! கேது உங்கள் தைரிய, வீரிய ஸ்தான ராசியிலும் குரு பஞ்சம பூர்வ இடத்தில் வக்ரமாகவும், சனி, ராகு 9ம் இடத்திலும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் ரண, ருண, ரோக ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6. 2014 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானமான கன்னிக்கும், கேது தன, வாக்கு ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி தொழில் ஸ்தானமான விருச்சிக ராசிக்குச் செல்கிறார்.
இந்த வருடம் வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ புண்ணிய சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரயமானது. இந்த நிலை மாறப் போகிறது. குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் பழகவும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு மாட்டிக் கொள்ள நேரிடலாம். அசையாச் சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று லாபமடையும் ஆண்டாக இது அமைகிறது.
உத்யோகஸ்தர்கள்: பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். எனவே. பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாகப் பணியாற்றவும். அலுவலக த்தில் பல சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப ஒத்துழைப்பு தருவார்கள். அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுங்கள்.
வியாபாரிகள்: வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். வருமானம் நல்லபடியாக வரத்தொடங்கும். ஆனாலும் பழைய பாக்கிகளை சிரமத்துடன் வசூலிப்பீர்கள். மற்றபடி புதிய முயற்சிகள் பலனளிக்கும். மொத்த விலைக்கு பொருட்களை வாங்கும்போது அவற்றுக்கு சிறிது கூடுதல் பணம் கொடுக்க நேரிடும். எனவே சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விலையைக் கூட்டியோ குறைத்தோ பொருட்களை விற்பனை செய்யவும். விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களையும், ஊடு பயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல பலன்களை அடைவீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள். புதிய குத்தகைகளை நன்றாக யோசித்து எடுக்கவும். வங்கிக் கடன்கள் பெற தாமதமாகும் என்பதால் பொறுமையுடன் இருந்து கடன்களைப் பெற்று எதிர்காலத்திற்கு வித்திடவும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
அரசியல்வாதிகள்: தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்களின் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினர்: புதிய ஒப்பந்தங்கள் தானாகவே கிடைக்கும். அவற்றை முடித்துக் கொடுத்து நற்பெயர் வாங்குவீர்கள். மற்றபடி உங்கள் செயல்களை சீரிய முறையில் திட்டமிட்டுச் செய்யவும். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று எது முக்கியமோ அதை செய்ய முற்படுங்கள். உங்கள் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக் கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். இந்த ஆண்டு உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்துகொண்டிருக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் சில பயணங்களைச் செய்வீர்கள்.
பெண்கள்: கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் உற்றார், உறவினர்கள் அனுகூலமாக இருக்க மாட்டார்கள். அனாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும். தெய்வ வழிபாட்டில் மனதைச் செலுத்தி நிம்மதி அடையுங்கள். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணத்தைத் தவிர்க்கவும். நிர்வாகத்தாலும் உயரதிகாரிகளாலும் இடப்படும் கட்டளைகளை கவனமுடன் செயல்படுத்தி வேலையை செய்து முடிப்பீர்கள். அதனால் பதவி உயர்வு வந்து சேரும். தொழில் சிறக்க வேலை தெரிந்த மற்ற பெண்களையும் கூட்டு சேர்த்துச் கொள்ளலாம். கையில் நிறைவான பணம் கிடைக்கும். அனைத்து தரப்பினரிடமும் நற்பெயர் வாங்கும் வகையிலான செயல்களை செய்வீர்கள். உங்கள் பெயரில் வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. கணவனின் ஆயுள் பலம் அதிரிக்கும். மன அமைதியையும் செல்வ அனுகூலத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகளுக்கு நீங்கள் சேமித்து வைத்த பணத்தை கொடுத்து உதவுவீர்கள்.
மாணவர்கள்: படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கடுமையாக முயற்சி செய்து எல்லாத் தடைகளையும் உடைத்து வெற்றிவாகை சூடுவீர்கள். எதையும் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.
சிறப்பு பரிகாரம்: நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: திருநள்ளாறு, கும்பகோணம், திருத்தணி.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் ஸம் ஸ்ரீசனீச்வராய நமஹ".
அதிர்ஷ்ட கல்: நீலக்கல், வைரம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை.
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன், அம்பாள்.
SOURCE: www.dinakaran.com
கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்

பரிகாரம்:
முடிந்த வரை செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வலம் வரவும்.
|
ரிஷபம்

முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
|
மிதுனம்
சூழ்நிலைக்கு ஏற்ப பெருந்தன்மையான குணத்தால் விட்டுக் கொடுத்து வாழ்ந்து வெற்றியை வசமாக்குபவர்களே! சுய ஸ்தானத்தில் குரு வக்ரமாகவும், பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி, ராகுவும், லாப ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் தன ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் சுக ஸ்தானமான கன்னிக்கும், கேது தொழில் ஸ்தான ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி ரண, ருண, ஸ்தானமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். அயராது பாடுபடும் உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். சோம்பேறித் தனத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். தாய்வழி உறவுகளில் சுமுகமான நிலைமை ஏற்படும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். செய்தொழிலில் தொடர்ந்து வளர்ச்சியைக் காண்பீர்கள். பிறரின் சொத்துகளை பராமரிக்கும் யோகமும் சிலருக்குக் கிடைக்கும். நெடுநாட்களாக செய்யாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்த னைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுப்பீர்கள்.
உத்யோகஸ்தர்கள்: கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். இடமாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஊதிய உயர்வும் நன்றாக இருக்கும். கணவன் -மனைவி ஒற்றுமை மனமகிழ்வைத் தரும். ஆரோக்யத்தை அபிவிருத்தி பெறச் செய்யும் வகையில் குருவின் பார்வை உள்ளது. உத்யோகத்தில் திருப்தியும் நற்பெயரும் உண்டாகும்.
வியாபாரிகள்: பொருளாதாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே அமையும். புதிய வாகனங்களை வாங்கி அதன்மூலம் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து பலன் பெறுவீர்கள். கொள்முதலில் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளால் விளைச்சல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்து வீர்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான செலவுகள் குறையும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரணையுடன் நடந்துகொண்டால் மேலும் நன்மை அடையலாம். வாய்க்கால் வரப்புப் பிரச்னைகள் பெரிதாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகள்: மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும். உங்கள் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். வருமானத்திற்குக் குறைவு வராது என்றாலும் பொதுப் பணிகளுக்காக உங்கள் கைப்பணத்தைச் செலவழிக்கும் முன் யோசனை செய்து கொள்ளுங்கள். மற்றபடி எதிரிகளின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து வளர்ச்சியைக் காண்பீர்கள். கட்சியில் உங்கள் மதிப்பு உயரும். அதேசமயம் குறுகிய கண்ணோட் டத்தைத் தவிர்க்கவும்.
கலைத்துறையினர்: சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். இதனால் படிப்படியாக வளர்ச்சி அடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆனாலும், அனாவசியச் செலவுகளை செய்ய நேரிடும். சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
பெண்கள்: குடும்பத்தில் அனுகூலமான நிலைமையைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணமான பெண்கள் சந்தான பாக்கியம் அடையலாம். அழகு சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் பெண்கள் நிறைய வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை குருவருளால் மன மகிழ்வைத் தரும்.
மாணவர்கள்: பெற்றோரின் ஆதரவுடன் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். எனவே, அவர்களின் பழைய தவறுகளை பெரிதுபடுத்த வேண்டாம். குருகுலக் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் குருவை போற்றி நடந்து அவர் த ரும் கல்வியில் ஞான சிந்தனையுடன் செயல்பட்டு முதல்தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். அறிவியல் தொழில்நுட்ப மாணவர்களும் ஆரம்ப நிலை மாணவர்களும் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித் தருவர். யோகாசனப் பயிற்சியை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்கள் ஆர்வமுடன் செயல்பட்டு குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று பெயர் பெறுவார்கள்.
சிறப்பு பரிகாரம்: புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு தேங்காய் நீராஞ்சன தீபம் ஏற்றவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: ஸ்ரீரங்கம் மற்றும் வைஷ்ணவ திவ்ய தேசங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் ஸ்ரீ மஹாவிஷ்ணுவே நமஹ".
அதிர்ஷ்ட கல்: மரகதப்பச்சை, சாளக்கிராமம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை.
அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாஜலபதி.
பரிகாரம்:
முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
|
கடகம்
இதயம் என்னும் கடலிலிருந்து அமுதமொழி பேசி அனைவரையும் வசப்படுத் துபவரே! சுக ஸ்தானத்தில் சனியும் ராகுவும், தொழில் ஸ்தான த்தில் கேதுவும், விரய ஸ்தானத்தில் குரு வக்ர மாகவும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் சுய ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் தைரிய ஸ்தானமான கன்னிக்கும், கேது பாக்கிய ஸ்தானமான மீனத்திற்கும் பெயர்ச்சியா கிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தான விருச்சிக ராசிக்குச் செல்கிறார்.இந்த ஆண்டு நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும்.
சிறிய அளவு முயற்சிகள்கூட பெரிய பலனைத் தரும். திரு மணம் போன்ற சுப காரியங்கள் சுலபமாக நடக்கும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். உடல் உபாதைகளுக்கு மாற்று சிகிச்சை முறைகளை மேற்கொள்வீர்கள். அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேர்வார்கள். வருமானம் படிப்படியாக உயரும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்களின் போட்டியாளர்களை திடமான நம்பிக்கையுடன் வெற்றிகொள்வீர்கள். நூதனத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களின் செயல்களில் வேகத்துடன், விவேகத்தையும் கூட் டிக்கொள்வீர்கள்.
உத்யோகஸ்தர்கள்: மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். கடின உழைப்பை தாரக மந்திரமாகக் கொண்டு உழைக்கவும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகவும். சிலர் உங்களுடன் பகைமை பாராட்டுவார்கள். திட்டமிட்டபடி செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பழைய கடன்களை அடைத்த பிறகே புதிய கடன்களைப் பெற முயற்சி செய்யவும்.
வியாபாரிகள்: வாடிக்கையாளர்களின் வருகை நல்லமுறையிலேயே இருக்கும். ஆனாலும் புதிய முதலீடோ அல்லது விரிவாக்கலோ இருந்தால் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். விவசாயிகள் லாபத்தைக் காண்பீர்கள். பாசன வசதிகளுக்காக அதிக செலவு செய்ய நேரிட்டாலும் அதனால் நன்மையே ஏற்படும். கறவை மாடுகள் வாங்கி பால் வியாபாரம் செய்தும், மரங்கள் வளர்த்தும் லாபம் பெறுவீர்கள். புதிய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள்: பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். அதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவும், கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறி புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். ஆனாலும், மாற்றுக் கட்சியினர் உங்கள் பேச்சில் குறை காண முயல்வார்கள். எனவே அனாவசிய விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
கலைத்துறையினர்: சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். மற்றபடி உங்களின் பெயரும், புகழும் உயரும். சக கலைஞர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். சக கலைஞர்களுடன் நல்ல உறவை வைத்துக் கொள்வீர்கள். கடன் வாங்கி செலவழிக்கும் நிலை உண்டாகும். தொழில்ரீதியாக உங்களை புறந்தள்ள நட்புடன் பழகியவர்களே முயற்சி செய்வார்கள்.
பெண்கள்: மதிப்புக்கும், மரியாதைக்கும் குறைவு வராது. உங்களின் பிரார்த்தனைகள் வீண் போகாது. பண வரவு அதிகரிக்கும். குழந்தைகள் உதவிகரமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் நடத்துவதில் ஏற்பட்ட தடைகள் விலகும். உற்றார், உறவினர்களுடன் ஒற்றுமை தொடரும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சிறிது மந்த நிலை காண்பார்கள். அரசிடம் கேட்டிருந்த கடனுதவிகள் மற்றும் வரவேண்டிய நிலுவைத் தொகைகள் எளிதாகக் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இடைஞ்சல் செய்யும் நோக்குடன் சிலர் செயல்படுவார்கள். பணிச் சுமைகள் காரணமாக மனக்குழப்பம் உண்டாகி பின்னர் சரியாகும்.
மாணவர்கள்: படிப்பில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோரின் உதவியுடன் நன்றாகப் படித்து வெற்றி பெறுவீர்கள். சோம்பேறித்தனத் தை தள்ளி வைத்துவிட்டு ஆசிரியர் நடத்திய பாடங்களை அன்றைய தினமே படித்து மதிப்பெண்களை அள்ளுங்கள். உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொண்டு உடலையும், மனதையும் நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். மரு த்துவம், இன்ஜினியரிங் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் படிப்பில் கவனத்துடன் செயல்பட்டு தேர்ச்சி பெறுவார்கள். இது தொடர்பான கல்வி நிறைவு செய்தவர்கள் உடனடியாக வேலை வாய்ப்பு பெறுவார்கள். நண்பர்களால் உதவி உண்டு.
சிறப்பு பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அம்மனுக்கு நெய் மற்றும் இலுப்பை எண்ணெய் கலந்து தீபம் ஏற்றவும். மல்லிகை மலரை ஒவ்வொரு பஞ்சமியன்றும் அம்மனுக்கு வழங்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: சமயபுரம், திருவேற்காடு, குலசேகரன்பட்டினம், திருக்குற்றாலம்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ".
அதிர்ஷ்ட கல்: முத்து, பிளாட்டினம், ஸ்படிகம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்.
அதிர்ஷ்ட தெய்வம்: மாரியம்மன்.
பரிகாரம்:
திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.
|
சிம்மம்
தன் மனதிற்கு சரியெனப்பட்டதை செயல்வடிவமாக்கி தனி வழியே நடை போடுபவர்களே! தைரிய ஸ்தானத்தில் சனியும் ராகுவும், பாக்கிய ஸ்தானத்தில் கேதுவும், லாப ஸ்தானத்தில் குரு வக்ரமாகவும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் மோக்ஷ, விரய ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் தனஸ்தான கன்னிக்கும், கேது ஆயுள் ஸ்தானமான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி அர்த்தாஷ்டம சனியாக சுக ஸ்தானமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இந்த ஆண்டு உங்களின் கிரக நிலைகளை வைத்துப் பார்க்கும்போது நீங்கள் பொறுமையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனை த்தும் முழுமையாகக் கைகூடும். உங்களை வாட்டிய உடல் உபாதைகளும் நீங்கிவிடும்.
உத்யோகஸ்தர்கள்: அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சக ஊழியர்களிடம் உங்கள் மனதில் உள்ளவற்றைக் கூற வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்கிற நிலையில் இருப்பதே சிறப்பு. மற்றபடி அலுவலகரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்கள் திறமையில் குறைவு ஏற்படாது.
வியாபாரிகள்: முயற்சிகளுக்கேற்ற லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடை ஏற்பட்டாலும் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்த நினைக்க வேண்டாம். இருப்பதை நேர்த்தியாகச் செய்து முடிப்பதே சிறப்பு. புதிய கடன்கள் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய நிலங்களை வாங்குவீர்கள். கணக்கு, வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு வங்கிகளிடம் சலுகைகளைப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள்: கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். மற்றபடி முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும். மேலிடத்தின் அனுகூல செயலபாட்டை தேவையான நேதத்தில் தடையின்றி பெறுவீர்கள். பிறருக்காக நடத்தித் தரவேண்டிய பணிகள் இந்த வருடம் நடக்கும். அடுத்தவர் செலவில் நீங்கள் உங்கள் தேவைகள் எதையும் பூர்த்தி செய்ய மாட்டீர்கள். மேலிடத்தில் எல்லா வகையிலும் உங்களுக்கு துணை நிற்பார்கள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
கலைத்துறையினர்: உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். ‘உழைப்பே உயர்வு' என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். ஒப்பந்தங்களை சரியான நேரத்தில் முடித்துக் கொடுத்தாலும் பண வரவுக்கு தாமதம் ஏற்படலாம். ஆனாலும், ரசிகர்களின் உற்சாகமான ஆதரவு உங்கள் மன வருத்தத்தைக் குறைக்கும் மருந்தாக அமையும். சினிமா, நாடகம், சின்னத்திரை ஆகியவற்றில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிகர், நடிகையர்கள் தங்களுக்குள்ள திறமையை நன்கு வளர்த்துக் கொள்வார்கள். புதிய வாய்ப்புகளையும் நிறைந்த பொருளாதாரத்தையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவார்கள்.
பெண்கள்: கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். ஆனாலும், கணவர் வழி உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆன்ம பலம் பெறவும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத் திடமிருந்து தேவையான சலுகைகளைப் பெறுவார்கள். சேமிப்பு செய்து பணத்தை குடும்பத்தின் சுப செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் தங்கள் உறவினர்கள் மூலம் நன்மை அடைவார்கள்.
மாணவர்கள்: உழைப்புக்கேற்ற மதிப்பெண்களை பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு நன்றாகவே அமையும். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். நடனம், இசைப் பயிற்சி பெறும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பயின்று தேர்ச்சி பெறுவார்கள். சிவில், ஓவியம் சம்பந்தமான பயிற்சி மாணவர்கள் புதிய யுக்திகளை அறிந்து நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மோட்டார், வாகனம், படகுகள், விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதார தேவைகள் எளிதாகக் கிடைக்கும்.
சிறப்பு பரிகாரம்: பிரதோஷம் தோறும் அபிஷேகத்திற்கு நெய் மற்றும் தேன் கொடுக்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: சூரியனார் கோவில், பாபநாசம், திருவண்ணாமலை.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் நமோ பகவதே ஸ்ரீருத்ராய நமஹ".
அதிர்ஷ்ட கல்: மாணிக்கம், செம்பு.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பிரவுன்.
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன், சூரியன்.
பரிகாரம்:
ஞாயிற்றுக் கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.
|
கன்னி
எல்லோரும் தன்னைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரிடமும் வலியச் சென்று பேசி உதவும் தன்மை கொண்டவர்களே! தன, வாக்கு ஸ்தானத்தில் சனி, ராகுவும், ஆயுள் ஸ்தானத்தில் கேதுவும், தொழில் ஸ்தானத்தில் குரு வக்ரமாகவும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் லாப ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் சுய ஸ்தானமான கன்னிக்கும், கேது களத்திர ஸ்தான ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
சனீஸ்வர பகவான் 17.12. 2014 அன்று பெயர்ச்சியாகி தைரிய, வீரிய ஸ்தான விருச்சிக ராசிக்கு செல்கிறார். ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால் பதிக்க போராடிக் கொண்டிருந் தவர்கள் அரசுத் துறையிலிருந்து சலுகைகளைப் பெற குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். நேர் வழியிலேயே எதையும் சாதித்துக் கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும். தொழிலில் புதிய திருப்பங்களைக் காண்பீர்கள். வேறு ஊருக்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும்.
உத்யோகஸ்தர்கள்: விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள்.
வியாபாரிகள்: புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும், நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். கடன் கொடுக்காமல் முடிந்தவரை தவிர்க்கவும். பழைய கடன்களை சீரிய முயற்சியின் பேரில் படிப்படியாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள். விவசாயிகள் நூதன யுக்திகளைப் புகுத்தி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். வங்கிகளிட மிருந்தும், கூட்டுறவு சங்கங்களிடமிருந்தும் எதிர்பார்த்த கடன் மானியத்துடன் கிடைக்கும். மனச்சோர்வு நீங்கி, எதையும் சாதிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். கருப்பு நிற பயிர்களை உற்பத்தி செய்தால் மேலும் நன்மை அடையலாம்.
அரசியல்வாதிகள்: பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்படுவீர்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் உட்கட்சிப் பூசல்களில் சிக்கி மன வருத்தத்துக்கு ஆளாவீர்கள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்போது நன்றாக யோசிக்கவும். மற்றபடி தொண்டர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். பயணங்களால் நன்மை உண்டாகும்.
கலைத்துறையினர்: தேவைக்கேற்ப வருமானத்தைக் காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய கலைஞர்கள், நண்பர்கள் ஆவார்கள். புதிய சொத்துகளை வாங்குவீர்கள். வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும்.
பெண்கள்: இந்த ஆண்டில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும். பொருளாதாரத்தில் சிறப்புகளை காண்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கௌரவத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட விரய செலவுகளை குறைப்பீர்கள். பணியாற்றும் பெண்கள் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு மனநிறைவு பெறுவார்கள். ஆன்மிக எண்ணங்கள் வளர்ச்சி பெற்று புதிய சக்தியை உருவாக்கித் தரும். சமூகத்திலும் உறவினர்களிடமும் நற்புகழ் கிடைக்கும். வீட்டை அலங்காரம் செய்வதில் மனம் ஈடுபாடு கொள்ளும். ஆடை, ஆபரணச் சேர்க்கை நிச்சயம் உண்டாகும்.
மாணவர்கள்: பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அன்பு கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். உங்களின் முயற்சிகள் தடைகளைத் தகர்த்து தாமதமின்றி வெற்றி பெறும். விளையாட்டில் சாதனைகளைச் செய்வீர்கள். கணிதம், வருமான வரி, வரவு செலவு தணிக்கை, நிர்வாகம், ஓவியப் பயிற்சி பெறும் மாணவர்கள் சிறப்பாக படிப்பர். விளையாட்டுகளில் சாகசம் புரிவீர்கள். மாணவர்கள் புகழும் விருதும் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தெய்வ வழிபாடுகள் நல்வழிப்படுத்தும். தைரியமான செயல்கள் செய்யும் வாய்ப்பு உருவாகும். நண் பர்கள் உதவிகரமாய் இருப்பார்கள். உடல்நலத்தில் கவனம் வேண்டும். பெற்றோருடன் உறவு நிலை சுமுகமாய் இருக்கும்.
சிறப்பு பரிகாரம்: புதன் ஹோரைகளில் பெருமாள் அல்லது விநாயகர் அல்லது சாஸ்தா கோயிலில் 11 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மரிக்கொழுந்தை அர்ப்பணிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு.
செல்ல வேண்டிய தலம்: திருவெண்காடு, சபரிமலை, பாபநாசம் சொரிமுத்து ஐயனார்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் சம் ஸ்ரீசாஸ்தாயை நமஹ".
அதிர்ஷ்ட கல்: பச்சை, மரகதம், வைரம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்.
அதிர்ஷ்ட தெய்வம்: விநாயகர், ஐயப்பன்.
பரிகாரம்:
புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும்.
|
துலாம்
சுய தேவைகளை விட்டுக்கொடுத்து அடுத்தவர் நலம் சிறக்க செயலாற்றி நற்பெயர் பெற்றுவருபவர்களே! சுய ஸ்தானத்தில் சனியும் ராகுவும், களத்திர ஸ்தானத்தில் கேதுவும், பாக்கிய ஸ்தானத்தில் குரு வக்ரமாகவும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்க தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் தொழில் ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் விரய ஸ்தானமான கன்னிக்கும், கேது ரண, ருண, ரோக ஸ்தான ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி வாக்குச் சனியாகி தனஸ்தான விருச்சிக ராசிக்குச் செல்கிறார். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவான சிந்தனைகள் குடிகொள்ளும். கடன் பிரச்னை தீர வழிகளைக் காண்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில் இருந்த தடைகள் தீர்ந்து மீண்டும் வேலைகள் துவங்கும்.
உத்யோகஸ்தர்கள்: நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். திட்டமிட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களைப்பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டாம். மேலும், உங்களின் கோரிக்கைகள் சற்று தாமதமாகப் பரிசீலிக்கப்படும். மற்றபடி அலுவலக ரீதியான பயணங்கள் அனுகூலமான பலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகள்: இந்த ஆண்டில் எதிர்பார்த்த லாபத்தைக் காண முடியாது. தீயவர்களை இனம் கண்டு அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. போட்டிகள் நியாயமற்றவையாக இருக்கும் என்பதால் வியாபாரத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. கூட்டாளிகள் உங்கள் முடிவுகளை ஆமோதிப்பதுபோல் தெரிந்தாலும் முதுகுக்குப் பின்னால் தவறாகப் பேசுவார்கள். இதனால் அவர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றபடி கொடுக்கல், வாங்கலில் நஷ்டங்கள் ஏற்படாது. விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள். கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான செலவுகளை செய்வீர்கள். கையிருப்புப் பொருட்கள் மீது அக்கறை காட்டவும். மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து கூடுதல் வருமானத்தைப் பெற முயல்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்வீர்கள்.
அரசியல்வாதிகள்: பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் உங்களை புதிய பதவிகள் தேடி வரும். எதிரிகள் உங்களிடம் அடங்கி நடப்பார்கள். மக்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவுக்குக் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
கலைத்துறையினர்: சிறப்பான புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் பெயரும், புகழும் உயரும். உங்களின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களுடன் நல்லுதவிகளைப் பெறுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். அனாவசிய பயணங்களை செய்ய வேண்டாம். சிறந்த சாதனை படைத்து பாராட்டுகளும் விருதுகளும் பெறுவார்கள். சாகசங்கள் நிகழ்த்தி பரிசு பெறுவார்கள். மனம் ஆன்மிக வழியை அதிகம் நாடும். பேசும் வார்த்தைகளில் அனல் வீசும். நற்செயல்கள் செய்வதினால் புகழ் பலம் பெறுவீர்கள். வீடு கட்டும் வாய்ப்புகளும் வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.
பெண்கள்: கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவும், சுற்றமும் அனுகூலமாக இருக்கும். அவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். விருந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தாய்வீட்டுச் சீதனம் வந்து சேரும். உங்கள் பெயரில் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் கை சேமிப்பை குடும்பச் சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ காரியங்களில் பங்கெடுக்கும் மார்க்கங்கள் நிரம்பவே உண்டு. சமூகத்திலும் குடும்ப உறவினர்களிடமும் தகுந்த புகழ் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கிடும் யோகபலன்கள் உண்டாகும்.
மாணவர்கள்: படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய பாடப் பிரிவுகளைப் பெற்று மகிழ்வீர்கள். விளையாட்டில் பரிசுக¬ளப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் சார்ந்த துறைகளில் மாணவர்கள் பணிபுரிவதற்கான தகுதியை பெறுவார்கள். பொதுவில் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். ஆயுள் பலம் பெறும். சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகள் மனநிறைவைத் தரும்.
சிறப்பு பரிகாரம்: வெள்ளிக் கிழமைதோறும் பச்சரிசி சாதம், வெல்லம், எள், நல்லெண்ணெய் கலந்து காக்கைக்கு வைக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு.
செல்ல வேண்டிய தலம்: கஞ்சனூர், திருப்பதி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் லம் ஸ்ரீ கமலதாரிண்யை நமஹ".
அதிர்ஷ்ட கல்: வைரம், பிளாட்டினம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு.
அதிர்ஷ்ட தெய்வம்: லக்ஷ்மி.
பரிகாரம்:
வெள்ளிக் கிழமை தோறும் குலதெய்வப் பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.
|
விருச்சிகம்
நிதானத்தைக் கடைப் பிடித்து லட்சிய மனதுடன் செயல்பட்டு எதிலும் எளிதாக வெற்றி பெறுபவர்களே! கேது உங்கள் ரண, ருண, ரோக ஸ்தான ஆறாம் ராசியிலும் குரு ஆயுள்ஸ்தான இடத்தில் வக்ரமாகவும், சனி, ராகு 12ம் இடத்திலும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் ஆயுள் ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் லாப ஸ்தான கன்னிக்கும், கேது பூர்வ புண்ணிய ஸ்தான ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி சுய ஸ்தான விருச்சிக ராசிக்கு வருகிறார்.
உத்யோகஸ்தர்கள்: நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். திட்டமிட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களைப்பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டாம். மேலும் உங்களின் கோரிக்கைகள் சற்று தாமதமாகப் பரிசீலிக்கப்படும். மற்றபடி அலுவலக ரீதியான பயணங்கள் அனுகூலமான பலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும். புதிய பயிற்சிகளை மேற் கொள்வீர்கள்.
வியாபாரிகள்: இந்த ஆண்டில் எதிர்பார்த்த லாபத்தைக் காண முடியாது. தீயவர்களை இனம் கண்டு அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. போட்டிகள் நியாயமற்றவையாக இருக்கும் என்பதால் வியாபாரத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. கூட்டாளிகள் உங்கள் முடிவுகளை ஆமோதிப்பதுபோல் தெரிந்தாலும் முதுகுக்குப் பின்னால் தவறாகப் பேசுவார்கள். இதனால் அவர்களிடம் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றபடி கொடுக்கல், வாங்கலில் நஷ்டங்கள் ஏற்படாது. விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள். கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான செலவுகளை செய்வீர்கள். கையிருப்புப் பொருட்கள் மீது அக்கறை காட்டவும். மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து கூடுதல் வருமானத்தைப் பெற முயல்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்வீர்கள்.
அரசியல்வாதிகள்: பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் உங்களை புதிய பதவிகள் தேடி வரும். எதிரிகள் உங்களிடம் அடங்கி நடப்பார்கள். மக்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவுக்குக் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். பணத்தை இழக்க நேரிடலாம். நம்பிக்கையானவர்களிடம் மட்டும் பணத்தைக் கொடுப்பது நல்லது. உயர்பதவிகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல நிலை வந்து சேரும். உடனிருப்பவர்களால் அவ்வப்போது உங்கள் வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். சிற்சில நேரங்களில் வம்புதும்புகள் வந்து சேரலாம். கவனம்தேவை. அதற்காக வீணான கோபமும் ஆத்திரமும் கொள்ள வேண்டாம். அதை சமாளிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களிடத்தில் உண்டு என்பதனை உணருங்கள்.
கலைத்துறையினர்: சிறப்பான புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் பெயரும், புகழும் உயரும். உங்களின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களுடன் ஒற்றுமையாகப் பழகுவீர்கள். அவர்களிடமிருந்து நல்லுதவிகளைப் பெறுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். அனாவசிய பயணங்களை செய்ய வேண்டாம். கலைத்துறையில் டெக்னிக்கல் துறையில் சார்ந்தவர்கள் மேன்மை அடைவர். பிற நாடுகளுக்குச் சென்று பணியாற்ற வாய்ப்பு இருக்கிறது. புகழ் பாராட்டு கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட வேண்டாம். காத்திருந்து கடமைகளை சரியாக செய்பவர்களுக்கு வெற்றிக்கனி கிடைக்கும். வெளியூர் படப்பிடிப்புக்கு செல்லும்போது அலைச்சலும் அத ன்மூலம் வேலைப்பளுவும் மனதில் சோர்வும் ஏற்படும். சிலர் போட்டியாளர்கள் மூலம் சில பிரச்னைகள் சந்திக்க வேண்டி வரலாம்.
பெண்கள்: கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவும், சுற்றமும் அனுகூலமாக இருக்கும். அவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். விருந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தாய்வீட்டுச் சீதனம் வந்து சேரும். உங்கள் பெயரில் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
மாணவர்கள்: படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளைப் பெற்று மகிழ்வீர்கள். விளையாட்டில் பரிசுக¬ளப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.
சிறப்பு பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளுக்கு எலுமிச்சையில் விளக்கு ஏற்றி வழிபடவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், மதுரை, திருவொற்றியூர்.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் ஸ்ரீ அம்பிகாயை நமஹ".
அதிர்ஷ்ட கல்: பவழம், ருத்ராக்ஷம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, மஞ்சள்.
அதிர்ஷ்ட தெய்வம்: முருகன், அம்பாள்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோயிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.
|
தனுசு
அன்பையும் பண்பையும் உணர்வோடும் உயிரோடும் இணைத்து செயல்படுபவர்களே! கேது உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் ராசியிலும் குரு களத்திர ஸ்தான இடத்தில் வக்ரமாகவும், சனி ராகு 11ம் இடத்திலும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த் தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குரு பகவான் 18.6.2014 அன்று உங்கள் ஆயுள் ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானமான கன்னிக்கும், கேது சுகஸ்தான ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி விரய.ஸ்தானமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். செய்தொழிலில் உங்களை முன்னிலைப் படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும். எதிர்பாராத நபர்களிடமிருந்து நல்லாதரவு கிடைக்கும்.
உத்யோகஸ்தர்கள்: கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும் என்பதால் கவனமாக நடந்து கொள்ளவும். அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவும். பிரச்னைகளை வளரவிட வேண்டாம். ஊதிய உயர்வு சிறப்பாக அமையும். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயரை வாங்குவீர்கள்.
வியாபாரிகள்: வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முதலீடுகள் செய்வதற்கு பழைய முதலீடுகள் கைகொடுக்கும். போட்டிகள் சற்று கடுமையாக இருந்தாலும் அவற்றை சாதூர்யத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். விவசாயிகளுக்கு கொள்முதல் அதிகரித்தாலும் லாபம் குறைவாகவே கிடைக்கும். அதனால் உபரி வருமானத்தைப் பெருக்க காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றை பயிரிட்டு பலனடைவீர்கள். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.
அரசியல்வாதிகள்: சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும், புகழும் உயரும்.
கலைத்துறையினர்: விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். காலதாமதம் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்களை செய்வீர்கள். சக கலைஞர்களில் நம்பகமானவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் குறையும். பல நாட்களாக வராமல் இருந்த தொகை உங்கள் கையைத் தேடி வரும். புதிய தொழில் நுட்பத்தை அறிந்துகொள்வீர்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு பொருளாதாரத்தில் சிறந்த நிலைக்கு வரலாம்.
பெண்கள்: கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். சகோதர, சகோதரி உறவில் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. வாழ்வில் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடமாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். குழந்தைகளிடம் அன்புடன் பழகுங்கள். மேலும் அவர்களிடம் கோபத்தைக் காட்டாமல் மனிதாபிமானத்துடன் பழகுங்கள். இதன்மூலம் மனக்கவலை மறைந்து மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். புதிய பொருட்கள் வந்து சேரும். ஆனால், அவற்றை நீண்ட நாட்கள் வைத்திருக்க அதன்மீது கவனம் தேவை. பழைய வீடு, வாகனங்கள் வந்து சேரும்.
மாணவர்கள்: நல்ல முறையில் படித்து மதிப்பெண்களை பெறுவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உற்சாகம் அடைவீர்கள். உங்களின் வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும். படிப்புக்குத் தேவையான பெருளாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. ஆபத்தான இடங்களுக்குள் பிரவேசித்தல் ஆகாது. எதிர் கருத்துகள் கொண்டவர்கள் கூட அனுகூலமாக மாற நிலை உண்டு. அறச் செயல்களும் ஆன்மிக வழிபாடுகளும் உங்களை காத்து நிற்கும்.
சிறப்பு பரிகாரம்: சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும். ஊற வைத்த நாட்டு கொண்டைக் கடலையை (மூக்கடலை) உங்கள் கையால் கோர்த்து குருவிற்கு அர்ப்பணிக்கவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்தூர், திருவானைக்காவல்
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் சம் ஸ்ரீகுருவே நம:".
அதிர்ஷ்ட கல்: மஞ்சள் புஷ்பராகம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன், கிருஷ்ணர்.
பரிகாரம்:
ஞாயிறு, வியாழக் கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.
|
மகரம்
கடல்போல பரந்த மனப்பான்மை உள்ளத்துடன் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்பவர்களே! கேது உங்கள் சுகஸ்தானமான நான்காம் ராசியிலும், குரு ரண, ருண, ரோக ஸ்தான இடத்தில் வக்ரமாகவும், சனி, ராகு 10ம் இடத்திலும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்க தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குரு பகவான் 18.6.2014 அன்று உங்கள் களத்திர ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6.2014 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானமான கன்னிக்கும், கேது தைரிய வீர்ய ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி லாபஸ்தானமான விருச்சிக ராசிக்கு செல்கிறார். இந்த வருடம் ஏற்கனவே இருக்கும் புகழுடன் புதிய புகழ் சேரும் மார்க்கமும் உண்டு.
வாகனத்தை இயக்கும்போது மட்டும் கவனமுடன் செயல்பட வேண்டும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் வி ரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும். உங்களின் பொருளா தாரத்தில் மேல் நிலையைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளை வெற்றியுடன் செயல்படுத்துவீர்கள். குடும்பத்தாருடன் கவலையில்லாமல் கலகலப்பாகப் பேசிப் பழகுவீர்கள். உற்றார், உறவினர்கள் பாசம் காட்டுவார்கள். சமுதாயத்தில் பிரபலமான குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும். ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வ ரும். குழப்பவாதிகளையும், அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள். அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளைப் பெறுவீர்கள்.
உத்யோகஸ்தர்கள்: இயந்திர வாழ்க்கை யிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பீர்கள். உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டு விலக்கி விடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் அலுவலக வேலைப்பளு கூடினாலும் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப உதவி செய்வார்கள்.
வியாபாரிகள்: ஓய்வில்லாமல் உழைத்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பீர்கள். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனக் கசப்புகளை சமாளித்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களைப் பெற்று கழனிகளை சீரமைப்பீர்கள். மானியங்கள் கிடைக்கும். புதிய விவசாயக் கருவிகளை வாங்குவீர்கள். விவசாய இடுபொருட்களுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். மனதிலிருந்த அச்சம் விலகும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். விவசாயக் கூலிகளை கௌரவமாக நடத்துவீர்கள்.
அரசியல்வாதிகள்: கட்சி மேலிடத்தின் ஆதரவு சில நேரங்களில் கூடுதலாக கிடைக்கும். ஆதரவு குறைந்த நேரங்களில் சற்று அடங்கிப் போகவும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன் போட வேண்டாம்.
கலைத்துறையினர்: வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். புதிய நண்பர்களால் பலன் அடைவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்புகள் உயரும்.
பெண்கள்: கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சீரிய முயற்சி செய்து சுப காரியங்களை நடத்துவீர்கள். உறவினர்கள் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். சமையல் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். வேலைக்குச்
செல்லும் பெண்கள் நீங்கள் விரும்பிய இடத்திற்கு பணி இடமாறுதலும், பதவி உயர்வும் கிடைக்கும்.
மாணவர்கள்: கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்காக போதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டினால் உடல் ஆரோக்யத்தை வளர்த்துக் கொள்வீர்கள். தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருக்கும். எல்லோரும் நட்புடனே பழகுவர். ஆசிரியரிடம் மரியாதை சமச்சீராய் இருக்கும். வெளியூர் பிரயாணங்கள் அனுபவ பாடங்களை கற்றுத்தரும்.
சிறப்பு பரிகாரம்: வெற்றிலை மாலைக் கட்டி அனுமனுக்கு சூட்டவும். மல்லிகை மலரை பெருமாளுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்யவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு.
செல்ல வேண்டிய தலம்: திருப்பதி, நாமக்கல், திருநள்ளாறு.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் ஸம் ஸ்ரீசனீச்வராய நமஹ".
அதிர்ஷ்ட கல்: நீலக்கல், கார்னெட்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெள்ளை.
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன், ஆஞ்சநேயர்.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் அனுமன் கோயிலை வலம் வரவும்.
|
கும்பம்
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நிறைந்த மனதுடன் வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொள்ளும் சக்தி மிக்கவர்களே! கேது உங்கள் தைரிய, வீரிய ஸ்தான ராசியிலும் குரு பஞ்சம பூர்வ இடத்தில் வக்ரமாகவும், சனி, ராகு 9ம் இடத்திலும் இருக்கிறார்கள். 6.3.2014 அன்று குரு வக்ர நிவர்த்தியாகி நேர்கதியில் சஞ்சரிக்கத் தொடங்குகிறார். சனி 3.3.2014 அன்று வக்ர சஞ்சாரம் பெற்று 21.7.2014 அன்று வக்ர நிவர்த்தியாகிறார். குருபகவான் 18.6.2014 அன்று உங்கள் ரண, ருண, ரோக ஸ்தான ராசிக்கு பெயர்ச்சியாகிறார். 20.6. 2014 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானமான கன்னிக்கும், கேது தன, வாக்கு ராசியான மீனத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனீஸ்வர பகவான் 17.12.2014 அன்று பெயர்ச்சியாகி தொழில் ஸ்தானமான விருச்சிக ராசிக்குச் செல்கிறார்.
இந்த வருடம் வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ புண்ணிய சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரயமானது. இந்த நிலை மாறப் போகிறது. குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் பழகவும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு மாட்டிக் கொள்ள நேரிடலாம். அசையாச் சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று லாபமடையும் ஆண்டாக இது அமைகிறது.
உத்யோகஸ்தர்கள்: பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். எனவே. பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாகப் பணியாற்றவும். அலுவலக த்தில் பல சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப ஒத்துழைப்பு தருவார்கள். அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுங்கள்.
வியாபாரிகள்: வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். வருமானம் நல்லபடியாக வரத்தொடங்கும். ஆனாலும் பழைய பாக்கிகளை சிரமத்துடன் வசூலிப்பீர்கள். மற்றபடி புதிய முயற்சிகள் பலனளிக்கும். மொத்த விலைக்கு பொருட்களை வாங்கும்போது அவற்றுக்கு சிறிது கூடுதல் பணம் கொடுக்க நேரிடும். எனவே சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விலையைக் கூட்டியோ குறைத்தோ பொருட்களை விற்பனை செய்யவும். விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களையும், ஊடு பயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல பலன்களை அடைவீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள். புதிய குத்தகைகளை நன்றாக யோசித்து எடுக்கவும். வங்கிக் கடன்கள் பெற தாமதமாகும் என்பதால் பொறுமையுடன் இருந்து கடன்களைப் பெற்று எதிர்காலத்திற்கு வித்திடவும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
அரசியல்வாதிகள்: தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்களின் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினர்: புதிய ஒப்பந்தங்கள் தானாகவே கிடைக்கும். அவற்றை முடித்துக் கொடுத்து நற்பெயர் வாங்குவீர்கள். மற்றபடி உங்கள் செயல்களை சீரிய முறையில் திட்டமிட்டுச் செய்யவும். எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று எது முக்கியமோ அதை செய்ய முற்படுங்கள். உங்கள் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக் கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். இந்த ஆண்டு உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்துகொண்டிருக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் சில பயணங்களைச் செய்வீர்கள்.
பெண்கள்: கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் உற்றார், உறவினர்கள் அனுகூலமாக இருக்க மாட்டார்கள். அனாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும். தெய்வ வழிபாட்டில் மனதைச் செலுத்தி நிம்மதி அடையுங்கள். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணத்தைத் தவிர்க்கவும். நிர்வாகத்தாலும் உயரதிகாரிகளாலும் இடப்படும் கட்டளைகளை கவனமுடன் செயல்படுத்தி வேலையை செய்து முடிப்பீர்கள். அதனால் பதவி உயர்வு வந்து சேரும். தொழில் சிறக்க வேலை தெரிந்த மற்ற பெண்களையும் கூட்டு சேர்த்துச் கொள்ளலாம். கையில் நிறைவான பணம் கிடைக்கும். அனைத்து தரப்பினரிடமும் நற்பெயர் வாங்கும் வகையிலான செயல்களை செய்வீர்கள். உங்கள் பெயரில் வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. கணவனின் ஆயுள் பலம் அதிரிக்கும். மன அமைதியையும் செல்வ அனுகூலத்தையும் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகளுக்கு நீங்கள் சேமித்து வைத்த பணத்தை கொடுத்து உதவுவீர்கள்.
மாணவர்கள்: படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். கடுமையாக முயற்சி செய்து எல்லாத் தடைகளையும் உடைத்து வெற்றிவாகை சூடுவீர்கள். எதையும் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். விளையாட்டில் வெற்றி பெறுவீர்கள்.
சிறப்பு பரிகாரம்: நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு.
செல்ல வேண்டிய தலம்: திருநள்ளாறு, கும்பகோணம், திருத்தணி.
சொல்ல வேண்டிய மந்திரம்: "ஓம் ஸம் ஸ்ரீசனீச்வராய நமஹ".
அதிர்ஷ்ட கல்: நீலக்கல், வைரம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை.
அதிர்ஷ்ட தெய்வம்: சிவன், அம்பாள்.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.
|
No comments:
Post a Comment