Sunday, 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - MITHUNUM

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
பிரச்னைகள் தீரும்

‘ரெட்டையன் வார்த்தை வெட்டிக்காடு வரை’ என்ற பழமொழிக்கேற்ப உடைந்து  வருபவர்களுக்கு ஊன்று கோலாய் இருப்பவர்களே! நல்லது கெட்டது என்று 
நான்கையும் அறிந்து வைத்திருக்கும் அனுபவசாலிகளான உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014  வரையுள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும் கேதுவும் சேர்ந்து  என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணப் புழக்கத்தையும் பிரபலங்களின் நட்பையும் ஒருபுறம் தந்தாலும் மறுபுறம் வீண்  அலைச்சல், பகை, கடன் தொந்தரவு என்று கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல என்றாலும் உங்கள் யோகாதிபதியான சுக்கிரன் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து ஓர ளவு நல்லதையே செய்வார். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் விவாதம், சண்டை என வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் சந்தோஷம் நிலைக்கும்.  ஆனாலும் புத்தி ஸ்தானமான 5ம் வீட்டில் ராகு அமர்வதால் சந்தேகக் கண்ணுடன் எல்லோரையும் பார்ப்பீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் கருதி கொஞ்சம் சேமிக்கச் செய்வீர்கள். ஆனாலும் பிள்ளைகளுடன்  சண்டை, சச்சரவுகள் வந்து  போகும். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். 
 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சப்தம தசமஸ்தானாதிபதியுமான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் உங்களின் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும்.  சுப நிகழ்ச்சிகள், 
பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். மனைவியுடன் ஈகோ பிரச்னை, அவருக்கு ஹார்மோன் கோளாறு என்று வரக்கூ டும். உத்யோகத்தில் இடமாற்றங்களும் வேலைச்சுமையும் இருக்கும்.  
     
ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவினங்கள் கூடும். சொந்த பந்தங்களின் விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நெருங்கிய நண்பரை இழக்க நேரிடும். ஷேர் மூலம் பணம் வரும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். உங்கள் சஷ்டமலாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் சொத்து வாங்கு வது, விற்பதில் இழப்பு வரும். சகோதரர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். 

ரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். கமிஷன், புரோக்கரேஜ்  மூலம் திடீர் பணவரவு உண்டு. வாகன விபத்து ஏற்படக்கூடும். பிள்ளைகளுக்கு நல்ல நட்புச் சூழலை உருவாக்கிக் கொடுங்கள். மகனின் கல்வி, வேலை விஷயமாக நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரும்.  ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். 

கன்னிப் பெண்களே! தள்ளிப்போய் கொண்டிருந்த திருமணம் இனி கூடிவரும். உயர்கல்வியில்  தேர்ச்சியடைவீர்கள். மாணவர்களே! வகுப்பாசிரியர் பாராட்டுவார். தேர்வில் மதிப்பெண்களை குவிப்பீர்கள். கவிதை, ஓவியம், இசைப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும். 

அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சியினரை விமர்சித்துப் பேச வேண்டாம். அண் டை அயலாருடன் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். 

வியாபாரிகளே! பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்தி நவீன மயமாக்குவீர்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். இரும்பு,  உணவு, 
புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். 

உத்யோகஸ்தர்களே!  உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தேங்கிக் கிடந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்பொழுது கைக்கு வரும்.  

கணினி துறையினரே! சம்பள உயர்வுடன் புதிய சலுகைகளும் கிடைக்கும். 

கலைத்துறையினரே! வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்பு கிடைக்கும். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும் வீண் அலைச்சலையும் தூக்கமில்லாமலும் தவிக்க வைத்த  கேதுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமர்கிறார். வற்றிய பணப்பை நிரம்பும். கைமாற்றாக இருந்த கடனையும்  தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வி.ஐ.பிகள், தொழிலதிபர்களின் நட்பை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். மனைவி நெடு நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணம், ரத்தினங்களை வாங்கித் தருமளவிற்கு வசதியாக இருப்பீர் கள். இழுபறியான 
வழக்குகள் சாதகமாக முடியும். மூத்த சகோதரர் உதவுவார். அரைகுறையாக நின்றுபோன வீட்டை கட்டி முடித்து புது வீட்டில் புகுவீர்கள். பழைய பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாகத் தீரும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சேவகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கியில் லோன் கிடைக்கும். இளைய சகோத ரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிரிகள் நண்பர்களாவார்கள். அரசாங்க விஷயங்களில் வெற்றியுண்டு. உங்கள் பூர்வ புண்யாதிபதியும் விரயாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தோற்றப்பொலிவு கூடும். திருமண முயற்சிகள் கூடிவரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் உங்கள் கை ஓங்கும். வழக்கால் ஏற்ப ட்ட நெருக்கடிகள் நீங்கும். உடல் நலம் சீராகும். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மறைமுக எதிரிகள் அடங்குவார்கள். புதிய நண்பர்களால் ஆதாயமுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத் தை மாற்றியமைப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதா யம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். ராகு உங்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டாலும் கேது அவற்றை உடைத்துத் தள்ளி உயர வைப்பார்.
பரிகாரம்:
திருப்பாம்புரத்தில் அருளும் ஆதிசேஷன் வழிபட்ட பாம்புரேஸ்வரரையும் வண்டார் பூங்குழலியையும் தரிசியுங்கள். கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். வயதானவர்களுக்கு செருப்பும் குடையும் கம்பளியும் வாங்கிக் கொடுங்கள்.

RAGHU-KETHU PEYARCHI - MESHAM

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
வெற்றி பெறுவீர்கள்

ஆடோடு மோதேல் என்ற பழமொழிக்கேற்ப உங்களிடம் மோதுபவர்களுக்கு தக்க பதிலடி தராமல் விடமாட்டீர்கள். கண்ணைப் பார்த்துக் கருத்துக் களை பகிர்ந்து கொள்ளும் நீங்கள், கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காமல், கிடைத்த துரும்பை துடுப்பாக்கி கரையேறுவீர்கள். அப்படிப் பட்ட உங்களுக்கு இந்த ராகுவும் கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில்  என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். 

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் செய்ய விடாமல் நாலாபுறமும் பாடாய்ப்படுத்திய ராகுபகவான்  ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்வதால், திக்கு திசையறிந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். உங்களின் அறிவுத்திறனை மழுங்க வைத்த ராகுபகவான் இப்பொழுது உங்களுக்குள் ஒளிந்து கிடந்த திறமைகளை எல்லாம் வெளிக் கொண்டு வரப்போகிறார். தொட்டதுக்கெல்லாம் வீண் விவாதங்களும்  மன உளைச்சலும் டென்ஷனும் தானே மிஞ்சியது. அவையெல்லாம் இனி விலகும். உற்சாகத்துடன் எல்லா வேலைகளையும் முடித்துக் காட்டுவீர்கள்.  எந்த விஷயத்தையும் மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள்.

குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு இனி முக்கியத்துவம் தருவார்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும் என்றாலும் களத்திர ஸ்தான மான ஏழாம் வீட்டில் ராகு அமர்வதால் மனைவியுடன் சிறு வாக்குவாதங்கள் வந்து போகும். அதை பெரிதுபடுத்த வேண்டாம். மனைவி சுட்டிக் காட்டும்  கெட்ட பழக்கங்களை திருத்திக் கொள்ளுங்கள். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் யோகாதிபதியான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 
கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடு களைகட்டும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கனவுத் தொல்லை வந்து போகும். 

தாழ்வுமனப்பான்மை மற்றும் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள். வேற்றுமொழிக்காரர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு.  எண்ணெய் மற்றும் வாயுப் பதார்த்தங்களை தவிர்த்துவிடுங்கள். வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவ னம் செலுத்துங்கள். சகோதர வகையில் சின்னச்  இழப்புகளும் கருத்து 
மோதல்களும் வந்து போகும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிப்பீர்கள். 

அவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களை பெருமைப்படுத்துவார்கள். அரைகுறையாக நின் றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். நிரந்தர வேலையின்றி தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

கன்னிப் பெண்களே! சகஜமாகப் பேசியதால் பல இடங்களில் தர்மசங்கடத்திற்கு உள்ளானீர்களே! இனி இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவீர்கள்.  கசந்த காதல் இனிக்கும். மாதவிடாய்க் கோளாறு, மன இறுக்கம் விலகும். 

மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையா டும்போது சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருங்கள். 

அரசியல்வாதிகளே! தலைமையை விமர்சிக்காதீர்கள். சகாக்களுடன் மனக்கசப்பு  உண்டாகும். 

வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகளில் 
கவனம் தேவை. ரியல் எஸ்டேட், கட்டிட வகைகளால் ஆதாயமடைவீர்கள். 7ம் வீட்டில் ராகு வந்தமர்வதால் கூட்டுத் தொழிலில்  பங்குதாரர்களுடன் அவ்வப்போது வீண் விவாதங்கள் வரத்தான் செய்யும். கொஞ்சம் பொறுத்துப் போங்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். 

உத்யோகஸ்தர்களே! மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்து கொள்ளுங்கள். உங்களின் கடின உழைப்புக் கேற்றாற்போல பதவி உயர்வும் அடைவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். 

கணினி துறையினர்களே!  வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும் என்றா லும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கலைத்துறையினர்களே! போராடி வெற்றி பெறுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு கைத்தட்டலுடன் காசும் சேரும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்றுகொண்டு உங்களை பக்குவமில்லாமல் பேச வைத்த கேதுபகவான் இப்போது உங்கள் ராசியிலேயே 
வந்தமர்வதால் இனி சமயோசித புத்தியுடன் பேச வைப்பார். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்தித்த நீங்கள் இனி ஆக்கபூர்வமாக  செயல்படுவீர்கள். 

குடும்பத்தினருடன் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் இனி நீங்கும். ராசிக்குள் கேது அமர்வதால் எதிலும்  சலிப்பு, டென்ஷன்,  தலைச்சுற்றல், சோர்வு, காய்ச்சல், தூக்கமின்மை வந்துபோகும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை ஏற்படும்.. வட்டிக்கு வாங்கிய கடனை எப்படி  அடைக்கப் போகிறோமோ என்ற பயம் வரும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் பிள் ளைகளால் கொஞ்சம் அலைச்சலும் செலவும் இருக்கும். படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு உங்களை விட்டுப் பிரிவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும். ஆரோக்யம் பாதிக்கும். உங்கள் தன-சப்தமாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் பணவரவு உண்டு. ஆனால் திடீர் செலவுகளால் சேமிப்புகள் கரையும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. வாகனம் வாங்குவீர்கள். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் யூரினரி இன்பெக்ஷன், தோலில் நமைச்சல், அலர்ஜியால் கட்டி வந்து போகும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி வரும். புதியவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். முக்கிய காரியங்கள் இரண்டு அல்லது மூன்றாவது முயற்சியில்தான் முடிவடையும். குறிப்பாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கால கட்டத்தில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரிகளே! பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் நிம்மதியுண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வரிகளை முறையாக செலுத்திவிடுவது நல்லது. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் காரசாரமான விவாதங்களை தவிர்த்துவிடுங்கள். உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரித்தாலும் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இந்த ராகு-கேது மாற்றம் அவ்வப்போது ஏமாற்றத்தையும் எதிர்பார்ப்புகளை அடைவதில் தடைகளை தந்தாலும் தொலைநோக்குச் சிந்தனையாலும் சம யோசித பேச்சாலும் தாக்குப்பிடிக்க வைக்கும்.
பரிகாரம்:
மயிலாடுதுறை மற்றும் சீர்காழிக்கு அருகேயுள்ள கீழப்பெரும்பள்ளம் எனும் தலத்தில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரை தரிசியுங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.

Friday, 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Meenam


சுற்றியிருக்கும் அழுக்குகளை தின்று சுத்தம் செய்யும் மீனைப்போல மற்றவர்களின் துன்பங்களை, துயரங்களை ஏற்றுக் கொள்ளும் சுமைதாங்கிகளே! போலியாக வாழாமல், ஆடம்பரத்திற்கும் ஆசைப்படாமல் இருப்பதை வைத்து சந்தோஷப்படும் நீங்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வீர்கள்.
உங்களின் லாப வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திட்டமிட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். 

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். பழைய நகைகளை விற்று புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். மனைவி வழியில் இருந்த மனப்போர் நீங்கும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வழக்கு சாதகமாகும். உங்கள் ராசியிலேயே இந்த ஆண்டு பிறப்பதால் மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொள்வீர்கள். 

ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். 
திட்டமிடாத வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டில் தொடர்வதால் எதிர்பார்த்த வகையில் உதவிகளும் திடீர் பணவரவும் உண்டு. ஆனால் செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். 


மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசு கூட இல்லையே என வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்னைகள் நீங்கும். எதிரும் புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். நவீனரக வாகனம் வாங்குவீர்கள்.

 
இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களை முயன்று தவறாக முடிக்க வேண்டி வரும். மனதைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். என்றாலும் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டிவரும். உதவி செய்வதாக வாக்கு கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவிற்கு வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்தமனத்தாங்கல் நீங்கும். வசதி, செல்வாக்குடன் உள்ள தவறானவர்களுடன் நட்புறவாட வேண்டாம்.  

    
செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும் போதிலிருந்து 22.6.2012 வரை 6ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் தொட்டது துலங்கும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிரபலங்களால் சில வேலைகள் முடிவுக்கு வரும். வீடு, மனை வாங்குவீர்கள். வெளிநாடு சென்று வருவீர்கள். சகோதரர்கள் பாசமழை பொழிவார்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். நாடாளுபவர்கள், அரசு அதிகாரிகளால் ஆதாயமடைவீர்கள். கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் காசு புரட்டி புது வீடு கட்டி குடி புகுவீர்கள்.    

 
வருடம் பிறக்கும்போது 3ம் வீட்டில் கேது நிற்பதால் திடீர் பணவரவு உண்டு. அண்ணன் பக்கபலமாக இருப்பார். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். பிதுர் வழிச் சொத்தை அடைவதிலிருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். 
9ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் தந்தையாருக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். சித்தர்கள், ஆன்மிகவாதிகளின் ஆசி கிட்டும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். 1.12.2012 முதல் உங்கள் ராசியில் 2ல் கேதுவும், 8ல் ராகுவும் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். 

வேலைச்சுமை அதிகரிக்கும். நண்பர்களால் வீண் அலைச்சல், மன உளைச்சல் வரக்கூடும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.
சனிபகவான் ராசிக்கு 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் முன்கோபம், பதட்டம், சிறு சிறு ஏமாற்றம், விரக்தி, வீண்பழி வந்து செல்லும். மனதில் இனம்புரியாத பயம் வந்துபோகும். குடும்பத்தில் அமைதியில்லையே என புலம்புவீர்கள். 

பண விஷயத்தில் கறாராக இருங்கள். நெருங்கியவர்களாக இருந்தாலும் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். திடீர் நண்பர்களை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். முன்யோசனை இல்லாமல் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். அரசு காரியங்கள் இழுபறியாகும். யோகா, தியானத்தில் ஈடுபடுவது நல்லது. சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் மனைவியுடன் வாக்குவாதம், வீண் சந்தேகம், விரக்தி, சோர்வு, களைப்பு வந்து நீங்கும். 


கன்னிப் பெண்களே! புதிதாக அறிமுகமாகுபவர்களை நம்ப வேண்டாம். முக்கிய முடிவுகளை பெற்றோரை கலந்தாலோசித்து எடுப்பது நல்லது. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். தூக்கமின்மை, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் வருட முற்பகுதியில் சிறப்பாக முடியும். மாணவர்களே! காலநேரத்தை வீணடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் கேள்வி கேட்க தயக்கம் வேண்டாம். கெட்ட நண்பர்களை ஒதுக்கித் தள்ளுங்கள். 


வியாபாரிகளே! பெரிய முதலீடுகளில் இறங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள். மே, ஜூன் மாதங்களில் கணிசமாக லாபம் உயரும். வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். உணவு, இரும்பு, கட்டிட பொருட்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.  


உத்யோகஸ்தர்களே! என்னதான் இரவு பகலாக உழைத்தாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். விருப்பமில்லாத இடமாற்றம் உண்டு. ஜனவரி, பிப்ரவரி, மே, அக்டோபர், டிசம்பர் மாதங்களில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். சக ஊழியர்கள் குறை கூறும் அளவிற்கு நடந்து கொள்ளாதீர்கள். கணினி துறையினருக்கு வெளி மாநிலம், வெளி நாட்டில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.  
அரசியல்வாதிகளே! தலைமையைப்பற்றி சகாக்களிடம் குறைகூற வேண்டாம். 

முக்கிய பொறுப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. கலைத்துறையினரே! உங்களது படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சம்பளம் உயரும். ஆனால், கையில் காசு தங்காது.விவசாயிகளே! கூட்டுறவு வங்கியில் கடனுதவி கிடைக்கும். விளைச்சலை அதிகப்படுத்த தரமற்ற உரங்களை பயன்படுத்தி விடாதீர்கள். வீட்டில் நல்லது நடக்கும்.இந்தப் புத்தாண்டு முற்பகுதியில் திடீர் யோகத்தையும், பணவரவையும் தந்தாலும் மையப் பகுதியிலிருந்து வீண் அலைச்சலையும் செலவுகளையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகேயுள்ள எலவனாசூர் கோட்டை தலத்தில் அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரரை திங்கட் கிழமையில் வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Kumbam


மஞ்சளும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சில் நினைப்பதே போதும் என்றெண்ணும் நீங்கள், ஆர்ப்பாட்டம் அலங்காரம் இல்லாமல் அமைதியாக எதையும் சாதிப்பீர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு வாரி வழங்கும் நீங்கள் கொடுத்துச் சிவந்த கைகளையுடையவர்கள்.உங்கள் ராசிநாதன் சனிபகவான் 9ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை வரும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். 

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் இருக்கும். மகளின் கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் உயர்கல்வி, உத்யோகம் அமையும். நிலுவையிலிருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்கள், நண்பர்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். உங்களை தாழ்த்திப் பேசியவர்கள் திருந்துவார்கள். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 

புது வேலை அமையும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். ஆனால் தந்தைக்கு நெஞ்சு வலி, அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண்பது நல்லது. சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் இக்கால கட்டத்தில் வீண் விரயம், செலவு, ஏமாற்றம், பொருள் இழப்பு, மறைமுக அவமானம், தாழ்வு மனப்பான்மை வந்துசெல்லும். 

16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் கடினமாக உழைத்து இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். சுபச் செலவுகளும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும். ஆனால் எதிர்பார்த்த வகைகளில் பணம் வரும். லேசான தலைச் சுற்றல், சலிப்பு, முன்கோபம், சில காரியங்களில் தடைகள் வந்து செல்லும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகனுக்கு பல இடத்தில் வரன் பார்த்தும் நமக்கு ஏற்ற சம்பந்தம் இல்லையே என வருந்தினீர்களே! இனி நல்ல மணப்பெண் அமைவார். 

மகனின் கூடா நட்பு விலகும்.  பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை போராடி பைசல் செய்வீர்கள். மற்றவர்களின் அறிவுரைகளை முழுமையாக நம்பி அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் சிலர் உங்களுக்கு உதவ முன் வருவார்கள். ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்வதால் மன உளைச்சல், மறைமுக எதிர்ப்பு, வீண் விமர்சனம், மூட்டுவலி, சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும். 

தாயாருக்கு உடல் நலம் பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் உரசல்கள் வரும். எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். சிலர் வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். கடன் தொல்லைகளை நினைத்து வருந்துவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் சிலர் உங்களை தவறான போக்கிற்கு தூண்டுவார்கள். வாகனத்தில் செல்லும் போதும் சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். 

வருடத் தொடக்கத்திலிருந்து 22.6.2012 வரை 7ல் நிற்கும் செவ்வாயின் நேரடிப் பார்வை உங்கள் மீது விழுவதால் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை வலி வந்து நீங்கும். கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடல் உஷ்ணம் அதிகமாகும். உணவில் கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களின் துரோகங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். யாருக்கும் காரெண்டர் கையெழுத்திட வேண்டாம். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பிரபலங்களால் உதவி கிட்டும். 

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சகோதரர்கள் உங்களை தாமதமாகப் புரிந்து கொள்வார்கள்.  வருடம் பிறக்கும் போது 4ம் வீட்டில் கேது நிற்பதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும். தாய்வழி உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வீடு கட்ட முடிவெடுத்துவிட்டால் தேவைப்படும் பணத்தை கையில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். 10ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். 

வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் உதவியும் உண்டு. வேலைச்சுமை அதிகரிக்கும். வீண்பழியும் வரக்கூடும். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 3ல் கேதுவும் 9ல் ராகுவும் நுழைவதால் எதிலும் ஆர்வம் பிறக்கும். தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்து வந்த வீண் சந்தேகங்கள் நீங்கும். ஆனால் தந்தையாரின் உடல் நிலை பாதிக்கும். 


கன்னிப் பெண்களே! காதலில் ஏமாற வேண்டாம். கல்யாணம் தள்ளிப்போய் முடியும். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வேனல் கட்டி, முகப்பரு, தூக்கமின்மை வந்து நீங்கும். மாணவர்களே! அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். தெரியாதவற்றை ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 


வியாபாரிகளே! பெரிய அளவில் முதலீடுகளை போட்டு சிக்கிக் கொள்ளாமல், இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள். ஏப்ரல், மே மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். முடிந்த அளவுக்கு அதிக கடன் யாருக்கும்  தராமல் இருப்பது நல்லது. தேங்கிக் கிடந்த சரக்குகளை அதிரடி சலுகையால் விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களால் மறைமுகப் பிரச்னைகள் வந்து நீங்கும். 

ஜூன் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். ஹோட்டல், கெமிக்கல், இரும்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெருகும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் புதுத் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தை தவற விடாதீர்கள். உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். என்றாலும் மனந்தளர மாட்டீர்கள். 

மேலதிகாரி உங்களை தவறாக புரிந்து கொள்வார். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நன்கு படிப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். மே, ஜூன் மாதங்களில் வேற்றுநாட்டு நிறுவனங்கள் மூலம் புது வாய்ப்புகள் வரும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பளம், சலுகைகள் கூடும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கணினி துறையினருக்கு வேறு வாய்ப்புகள் வந்தாலும் கூட மாறாமல் இருப்பதே சிறந்தது.


அரசியல்வாதிகளே! இனி பரபரப்புடன் செயல்படுவீர்கள். தலைமை உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்கும். கலைத்துறையினரே! கிடைக்கிற வாய்ப்பு சின்னதாக, சாதாரணமானதாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அவ்வப்போது உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் வரும். விவசாயிகளே! வங்கிக் கடன் தள்ளுபடியாகும். நிலத்தகராறு தீர்வுக்கு வரும். மகசூலை பெருக்குவீர்கள்.இந்தப் புத்தாண்டு சமயோஜித புத்தியால் சாதிக்க வைப்பதுடன் வாழ்வின் நெளிவு, சுளிவுகளை கற்றுத் தருவதாக அமையும். 
பரிகாரம்:
திருச்சிக்கு அருகேயுள்ள குணசீலம் சீனிவாசப் பெருமாளை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Makaram


பழமையான வேர்கள் பலமாக இருந்தால்தான் புதிய இலைகளும் பூக்களும் காய்களும் கனியும் என்பதை அறிந்த நீங்கள், கோபுரத்தில் இருந்தாலும் அஸ்திவாரத்திற்கு அடிக்கடி நன்றி கூறுவீர்கள். உங்களுக்கு 3வது ராசியில் இந்தாண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் தவிடு பொடியாகும். பிரபல யோகாதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நிற்கும்போது இந்தாண்டு பிறப்பதால் அடிப்படை வசதிகள் பெருகும். இதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். 

தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அநாவசியச் செலவுகளை குறைப்பீர்கள். பிள்ளைகளை கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தோலில் நமைச்சல் நீங்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த வங்கியில் கடன் உதவி கிடைக்கும். சிலர் வீட்டை புதுப்பித்துக் கட்டுவார்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். 


அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வர வேண்டிய பூர்வீகச் சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 4ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இனம்புரியாத கவலைகள் வந்து போகும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். அவருக்கு கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். புதியவர்களை நம்பி, பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். 

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதிக்காதீர்கள். அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாவீர்கள். 
வாகனத்தை கொஞ்சம் கவனமாக இயக்குங்கள். விபத்துகள் நிகழக்கூடும்.  17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டிலேயே தொடர்வதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வறண்டிருந்த பணப்பை கொஞ்சம் நிரம்ப ஆரம்பிக்கும். மழலைச் செல்வம் உங்கள் இல்லம் நாடி வரும். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதை கூடும். 


மகளுக்கு ஏதோ ஒரு வகையில் தடைபட்டுக் கொண்டிருந்த திருமணம் இப்பொழுது கூடிவரும். மகன் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். சொத்து விஷயங்களிலிருந்து வந்த சிக்கல்களுக்கு அதிரடியான தீர்வு காண்பீர்கள். மூத்த சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வருடம் ஆரம்பிக்கும் போதிலிருந்து 22.6.2012 வரை 8ம் வீட்டிலேயே அமர்ந்திருக்கும் செவ்வாய் அவ்வப்போது அலைக்கழிப்பார். 

பழைய பிரச்னைகள் மீண்டும் தலைதூக்கும். குடும்பத்தில் வீண் சந்தேகம், மனைவியுடன் வாக்குவாதங்கள் வரக்கூடும். அடிக்கடி வாகனம் பழுதாகும். சாலைகளை கடக்கும்போது கவனம் தேவை.  சகோதர வகையில் கருத்து மோதல்கள் வெடிக்கும். மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள். சொத்து வாங்குவது, விற்பதில் தாய் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. 


கேது உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளின் பொறுப்பில்லா தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்களின் போக்கிலேயே அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. தாய்வழி உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் வெடிக்கும். பூர்வீகச் சொத்துக்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது நல்லதல்ல. ராகு உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் அமர்வதால் பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி பெறுவீர்கள். 

வரவேண்டிய பணம் கைக்கு வரும். உடன்பிறந்தவர்களுக்காக எவ்வளவு செய்தும் நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்று அவ்வப்போது வருந்தினீர்களே! அந்த நிலை மாறும். பாசமாக நடந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.  1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 4ல் கேதுவும் 10ல் ராகுவும் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும்.  வீண் அலைச்சல், டென்ஷன், காரிய தாமதம், வாகன விபத்துகள் வந்துபோகும். 


சனிபகவான் உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் தொடர்வதால் உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். நட்பு வட்டம் விரியும். புது பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். பொது விழாக்களை தலைமையேற்று நடத்துவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். ஆனால், சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்வதால் இக்காலகட்டத்தில் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். 

வேலைச்சுமை, அலைச்சல் அதிகரிக்கும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.கன்னிப் பெண்களே! வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாந்தீர்களே, இனி அந்த அவல நிலை மாறும். காதல் கைகூடும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். கல்வியில் உயர்வு உண்டு. கலை, இலக்கியம், இசையில் ஆர்வம் பிறக்கும். மாதவிடாய்க் கோளாறு, தொண்டை வலி, சளித் தொந்தரவு நீங்கும். மாணவர்களே! சோம்பல் நீங்கி இனி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அதிகாலையில் எழுந்து படியுங்கள். 

நினைவாற்றல் பெருகும். கெட்ட பழக்கங்களிலிருந்தும், கெட்ட நண்பர்களின் சகவாசங்களிலிருந்தும் விடுபடுவீர்கள். அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வியாபாரிகளே! முன்பு இருந்த போராட்டம், தடைகள் நீங்கி இப்போது மனநிறைவுடன் காணப்படுவீர்கள். மார்ச், மே மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக செயல்படுவீர்கள். சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் லாபம் இரட்டிப்பாகும். பெரிய நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் இறங்கி அதிக லாபம் ஈட்டுவீர்கள். 

உணவு, ஷேர், சிமென்ட், செங்கல், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பிரச்னை தந்த பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகஸ்தர்களே!  மே, டிசம்பர் மாதங்களில் புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. மேலதிகாரியிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகி நட்புறவாடுவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அலுவலக சூட்சுமங்களை விரல் நுனியில் வைத்திருப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 

கணினி துறையினருக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வரும். அரசியல்வாதிகளே! பதவி உயர்வு உண்டு. மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள். சகாக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். 
விவசாயிகளே! வங்கிக் கடன் கிடைக்கும். காய், கனி, கிழங்கு வகைகளால் லாபம் பெருகும்.  இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை ஏமாற்றினாலும் மையப் பகுதியில் இருந்து உங்களை ஏற்றத்தில் உயர்த்தி விடுவதாக அமையும்.
பரிகாரம்:
சென்னை-திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜரை பௌர்ணமி திதியில் வணங்குங்கள். சாலைப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Dhanus


ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல என்பதுபோல வாழ்க்கையில் துன்பங்கள் வந்த போதும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே! அமைதியை விரும்பும் நீங்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் சாதிப்பீர்கள். உங்களின் சுக வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் மனதிலிருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களை கட்டும். பழைய சொந்தங்கள் தேடி வரும்.  சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். 

ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். தங்க ஆபரணம், விலைஉயர்ந்த ஆடை வாங்குவீர்கள். தடைபட்ட வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதன் சாதகமாக இருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொத்தை எதிர்பார்த்த விலைக்கு விற்று, புது சொத்து வாங்குவீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். 

தாயாரின் உடல் நலம் சீராகும்.  16.5.2012 வரை உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் குரு அமர்ந்திருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வந்துசேரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். கோயில் கோயிலாக அலைந்தும் நமக்கு ஒரு வாரிசுகூட இல்லையே என வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். மகளுக்கு வெகுநாட்களாக தேடி அலைந்த வரன் பார்க்கும் படலம் இப்பொழுது முடியும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாய்மாமன் வகையில் உதவிகள் கிடைக்கும். 


17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் சென்று மறைவதால் வீண்பழி, டென்ஷன், விரயம், விரக்தி, மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம், ஈகோ பிரச்னைகள் வந்துபோகும். பணத்தட்டுப்பாட்டை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். 


சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். புகழ் பெற்ற வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யாருக்காகவும் பைனான்ஸில் பணம் வாங்கித் தரவேண்டாம். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். உங்களின் கையெழுத்திட்ட வங்கிக் காசோலையையும் சொத்துப் பத்திரத்தையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள். 


22.6.2012 வரை செவ்வாய் 9ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் தொட்ட காரியம் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். சகோதரிக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். தந்தையார் சில நேரங்களில் கோபப்படுவார். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதுச் சொத்து வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதிய வாகனத்தில் வலம் வருவீர்கள். 


வருடம் பிறக்கும் போது ராகு 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் மறைமுக லாபம் உண்டு. மின்சார, சமையலறை சாதனங்கள் பழுதாகும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்.  திடீர் பயணங்களும் அலைச்சல்களும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் அலட்சியம் காட்டாதீர்கள். 

கேது 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். காற்றோட்டம், குடிநீர் வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த வீட்டிலிருந்து எல்லா வசதிகளும் நிறைந்த வீட்டிற்கு குடிபுகுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைத்து அயல்நாடு சென்று வருவீர்கள். 

ஹிந்தி, தெலுங்கு மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். ஆனால், 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 11ம் வீட்டில் ராகுவும் 5ல் கேதுவும் நுழைவதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். மகளின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். 
சனிபகவான் உங்களின் லாப வீட்டில் தொடர்வதால் திடீர் யோகம், பணப்புழக்கம் அதிகரிக்கும். இனி திட்டமிட்டு செயல்படுவீர்கள். சொத்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பைசல் செய்வீர்கள். 

வழக்கு சாதகமாகும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேச சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆனால் 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சனிபகவான் வக்ரமாகி அமர்வதால் இக்கால கட்டத்தில் உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். கன்னிப் பெண்களே! தள்ளிப்போய்க் கொண்டிருந்த கல்யாணம் இனி விமரிசையாக முடியும். ஆடை அணிகலன்கள் சேரும். 

பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உடல் உஷ்ணத்தால் வயிற்று வலி, சைனஸ் தொந்தரவு வந்து நீங்கும். மாணவர்களே! வகுப்பில் பின் வரிசையிலிருந்து முன் வரிசைக்கு வருவீர்கள். பிணக்கு தந்த கணக்குப் பாடத்தில் மதிப்பெண் கூடும். கூடாப் பழக்கம் விலகும். எதிர்பார்த்த பாடப் பிரிவில் உயர் கல்வியைத் தொடர்வீர்கள். வியாபாரிகளே! முன்பின் அனுபவம் இல்லாத துறையில் மற்றவர்களை நம்பி இறங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள். 

சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடு செய்வது நல்லது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புது வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். ரியல் எஸ்டேட், பதிப்பகம், இரும்பு, துரித உணவு வகைகளால் லாபம் பெறுவீர்கள். ஏப்ரல் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து போவார்கள்.


உத்யோகஸ்தர்களே! எதற்கெடுத்தாலும் உங்களை குறை சொல்லுவதற்கென்றே ஒரு கூட்டம் இருந்ததே! இனி உங்களின் மதிப்பு மரியாதை கூடும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். ஏப்ரல் மாதத்தில் அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும். வருடம் முழுக்க வேலைச்சுமை  இருந்துக் கொண்டேயிருக்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். கணினி துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயரும். 

அரசியல்வாதிகளே, தொகுதிக்குள் உங்களுக்கு நல்ல மதிப்பு உண்டு. மேலிடம் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும். 
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்பு என்றில்லாமல் கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். வீண் வதந்திகள் வரக்கூடும். 

உங்களின் படைப்புகளுக்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். விவசாயிகளே, வரப்பு, வாய்க்கால் பிரச்னையெல்லாம் முடிவுக்கு வரும். உற்பத்தியை இரட்டிப்பாக்குவீர்கள். தானிய வகைகளால் ஆதாயமுண்டு. இந்தப் புத்தாண்டு வாடி வதங்கியிருந்த உங்களுக்கு தைரியத்தை தந்து வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும். 
பரிகாரம்:
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பாதையிலுள்ள திருமுக்கூடலில் அருளும் பெருமாளை துவாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

New Year Rasi Palan - 2012 - Vrichigam


பணத்திற்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காத உங்களை, பகடைக் காயாக உருட்டினாலும் கொண்ட கொள்கையிலிருந்து மாறுபட மாட்டீர்கள். நீதி நியாயத்திற்காக குரல் கொடுக்கும் நீங்கள், அடிபட்டவர்களை அரவணைப்பீர்கள். தளராத தன்னம்பிக்கையால் தடைகளையும் படிக்கட்டுகளாக்கி பயணிப்பவர்களே!சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் எதையும் சமாளித்து வெற்றி பெறும் நெஞ்சுறுதி பிறக்கும். இயலாத காரியங்களையும் இங்கிதமான பேச்சால் முடித்துக் காட்டுவீர்கள். 


பிரபலங்கள் உதவுவார்கள். செலவுகள் உங்களை தொடர்ந்து வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பிள்ளைகளை அவர்களின் எண்ண ஓட்டத்திலேயே சென்று பிடிப்பது நல்லது. அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் வீடுமாற வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். உங்கள் ராசிநாதனான செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும் போதிலிருந்து 22.6.2012 வரை 10ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் புதிய பொறுப்பும் பதவியும் தேடி வரும். 


வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். ஒரு சொத்தை விற்று பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீர்வுக்கு வரும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதர, சகோதரிகள் உதவியாக இருப்பார்கள். மனைவிவழி உறவினர்களால் உதாசீனப்படுத்தப்பட்டீர்களே! இனி மாமனார், மாமியார், மச்சினர் போன்றோர் மதிப்பார்கள். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். உங்களை அழுத்திக் கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மை விலகும். 16.5.2012 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் பழி, ஏமாற்றம், அலைச்சல், டென்ஷன், வேலைச்சுமை, செரிமானக் கோளாறு என வந்து நீங்கும். 

உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாமே. என்னதான் திட்டமிட்டு செயல்பட்டாலும் எந்த காரியமானாலும் இரண்டு மூன்று முறை அலைந்துதான் முடிக்க வேண்டிவரும். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். தங்க 
ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். 

அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை கொடுத்து முடிப்பீர்கள். சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டிவரும். 
உறவினர்கள், நண்பர்களுடன் கொஞ்சம் இடைவெளிவிட்டு பழகுவது நல்லது. ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் நுழைவதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். சோர்ந்து கிடந்த நீங்கள் உற்சாகமாவீர்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும். பாதியிலேயே நின்றுபோன வேலைகள் முழுமையடையும். வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். 

கணவன்-மனைவிக்குள் இருந்த சந்தேகம், ஈகோ பிரச்னைகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிட்டும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். மகளுக்கு இருந்த கூடாப் பழக்கம் விலகும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். தாயாருக்கு இருந்த நெஞ்சு வலி நீங்கும். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்னை தீரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப்போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். 


வருடம் பிறக்கும் போது ராசிக்குள் ராகு நிற்பதால் தலைவலி, மயக்கம், குமட்டல், நாக்கில் கசப்பு என வந்து நீங்கும். சில சமயங்களில் முன்கோபத்தால் எடுத்தெறிந்து பேசுவீர்கள். நேரம் கிடைக்கும் போது யோகா, தியானம் செய்யத் தவறாதீர்கள். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. 7ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி சண்டை வரும். உங்கள் இருவருக்குள் பிரச்னையை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். 

மற்றவர்கள் சொல்வதை கேட்டு மனைவி, மனைவிவழி உறவினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்கு 6ல் கேதுவும் 12ல் ராகுவும் நுழைவதால் மன தைரியம் கூடும். பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. அரசு அதிகாரிகள் நண்பராவார்கள். 
சனிபகவான் ராசிக்கு 12ம் வீட்டில் விரயச் சனியாக தொடர்வதால் வருங்காலத்தைப் பற்றிய பயம் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்னையை எவ்வாறு சமாளிக்கப் போகிறோமோ என்று கவலைப்படுவீர்கள். 

பணவரவு ஓரளவு இருக்கும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிடைக்கும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களை இயக்குவதில் கவனம் தேவை. 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. வேலை கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள்.கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தால் முடங்கிப் போனீர்களே, இனி காதல் கைகூடும். தோலில் நமைச்சல், தேமல் நீங்கும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்பீர்கள். வேலை கிடைக்கும். கண்ணுக்கழகான கணவர் வந்தமைவார். போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள்.


மாணவர்களே! ஏனோ தானோ என்று படிக்காமல் இனி ஆர்வத்துடன் படிப்பீர்கள். கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். வகுப்பறையில் ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரிகளே! வட்டிக்கு வாங்கி புதிய முதலீடு போட்டு நஷ்டப்பட்டீர்களே! உங்களுக்கு பின்னால் தொழில் தொடங்கியவர்கள் கூட முன்னேற்றமடைந்தார்களே! இனி உங்களின் மாறுபட்ட அணுகு
முறையால் லாபமீட்டுவீர்கள். 

ஜனவரி, ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் லாபம் அதிகரிக்கும். மருந்து, கமிஷன், வாகன உதிரி பாகங்களால் ஆதாயமுண்டு. வாடிக்கையாளர்களை கவர புது சலுகைகளை அறிவிப்பீர்கள். ஆகஸ்ட் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையாட்களின் தொந்தரவு குறையும். கூட்டுத் தொழிலில் பிரச்னைகள் ஓயும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.உத்யோகஸ்தர்களே! ஓடி ஓடி உழைத்தும் உங்களை உதாசீனப்படுத்தியதுடன், கெட்டப் பெயரும்தானே மிஞ்சியது. 

இனி அந்த அவலநிலை மாறும். மேலதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்பார். ஜூன், ஜூலை மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். சக ஊழியர்களுடன் இருந்த மனப்போர் நீங்கும். கணினி துறையினருக்கு விரும்பிய இடத்திற்கு டிரான்ஸ்பர் கிடைக்கும்.  அரசியல்வாதிகளே! சிலர் உங்களைப் பற்றி  தவறான வதந்திகளை மேலிடத்திற்கு கொண்டு செல்லக்கூடும். விழிப்புடன் இருங்கள். 
கலைத்துறையினரே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். கிசுகிசுக்கள் ஓயும். 


போராடி படைப்புகளை வெளியிடுவீர்கள்.
விவசாயிகளே, கூட்டுறவு வங்கியில் லோன் கிடைக்கும். பழைய கடனை அரசு தள்ளுபடி செய்யும். நெல், கரும்பு உற்பத்தியால் லாபமடைவீர்கள். 
இந்தப் புத்தாண்டு முனகிக் கொண்டிருந்த உங்களை முழக்கமிட வைப்பதுடன், வாழ்வின் இரண்டாவது அத்தியாயத்தை தொடங்குவதாகவும் அமையும்.
பரிகாரம்:
மயிலாடுதுறை-கும்பகோணம் பாதையில் உள்ள திருவாடுதுறை தலத்தில் அருளும் கோமுக்தீஸ்வரரையும் திருமூலர் ஜீவசமாதியையும் சனிக்கிழமையன்று வணங்கி வாருங்கள். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்.