Sunday, 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - VIRUCHAGAM

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
யோகம் உண்டு

‘தேளான் தோள் கொடுப்பான்’ என்ற முதுமொழிக்கேற்ப முழுமையாக உங்களை சரணாகதி அடைபவர்களை முன்னேற்றுபவர்களே! நெஞ்சுக்குள்  நீதிமன்றம் நடத்துபவர்களே! கவரிமானைப் போல கௌரவம் பார்க்கும் உங்களை பணத்தை காட்டி விலைக்கு வாங்க முடியாது. அப்படிப்பட்ட உங் களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.    

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்திருந்த ராகுபகவான் திக்கு திசையறியாது திண்டாட வைத்ததுடன், காரணகாரியமே இல்லாமல் பிரச்னைகளில்  சிக்க 
வைத்தாரே! ஒருநாள் சிரித்தால், மூன்று நாள் அழ வைத்தாரே! தலைவலி, நெஞ்சுவலி என சதா சர்வகாலமும் புலம்பித் தவிக்க வைத்தாரே! ராகுபகவான் இப்பொழுது ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டிற்கு வந்தமர்வதால் நோய் விலகும். முதுகுவலி,  கால்வலி என முடங்கிய நீங்கள், இனி முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். உங்கள் ஆலோசனையை எல் லோரும் ஏற்பார்கள். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். புண்ணிய நதிகளில் 
நீராடுவீர்கள். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் தன பூர்வபுண்யாதிபதியான விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். ஷேர் மூலம் பணம் வரும். பூர்வீகச்  சொத்து கைக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதுவீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.  தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை ராகுபகவான் செல்வதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

பூர்வீகச்  சொத்தை சீர்திருத்தம் செய்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெரிய பதவிகள் தேடிவரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் ராசிநாதனும் சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் மறைமுக  எதிர்ப்புகள் விலகும். திடீர் யோகம் உண்டாகும். 

பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை  வாங்குவது விற்பது லாபகரமாக முடியும்.   பிள்ளைகளிடம் பாசமாக பழகுவீர்கள். அவர்களை உயர்கல்வி, உத்யோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். உங்களின் உண்மை யான பாசத்தை உடன்பிறந்தவர்கள் இனி உணர்வார்கள். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். 

தந்தையுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.  தாயின் உடல்நிலை சீராகும். குலதெய்வக் கோயிலை எடுத்துக் கட்டுவீர்கள். நாடாளுபவர்களின் உதவி கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால்  ஆதாயம் உண்டு. சிறு விபத்துகள் வரக்கூடும். இயக்கம், சங்கம், டிரஸ்ட் இவற்றிலெல்லாம் கௌரவப் பதவிகள் தேடி வரும். 

கன்னிப் பெண்களே!  மனம் தெளிவாகும். மாணவர்களே! 
உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விளையாட்டில் பதக்கம் உண்டு. 

அரசியல்வாதிகளே! உங்கள் பலத்தை நிரூ பித்துக் காட்டி தலைமையிடத்தில் நல்ல பெயரெடுப்பீர்கள். அக்கம்-பக்க வீட்டாரிடம் உங்கள் குடும்ப விஷயங்களை சொல்லிக் 
கொண்டிருக்காதீர்கள்.  

வியாபாரிகளே! போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். லாபம் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளை செய்வீர்கள். ஏற்றுமதி-இறக்குமதியால் அதிக லாபம் வரும். 

உத்யோகஸ்தர்களே! உங் களை நம்பி முக்கிய பொறுப்புகளை, உங்கள் அதிகாரி ஒப்படைப்பார். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். கணினி துறையினரே! பெரிய  நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும். 

கலைஞர்களே! நல்ல வாய்ப்புகளெல்லாம் விலகிப்போனதே!  வேலைகளை திறம்பட செய்து கொடுத்தும் பணம் வராமல் தவித்தீர்களே! இனி புகழ் கூடும். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்து கொண்டு உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் இடையே சண்டை சச்சரவுகளையும் மனை விக்கு உடல் நலக்குறைவையும் அடுக்கடுக்காக தந்தாரே! காரியத்தடை, மன உளைச்சல், டென்ஷன் என தொல்லை தந்த கேது பகவான் இப்பொ ழுது உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியை கொடுப்பார். குடும்பத்திலி ருப்பவர்கள் இனி உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் அரைகுறை யாக நின்ற கட்டிடப் பணியைத் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உத்யோகத்தில் பதவி, சம்பளம் உயரும். நாடாளுபவர்கள் உதவுவார்கள். அதிகாரப் பதவிக்கு தேர்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் சப்தம விரயாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் அடிப்படை வசதிகளை மேம்ப டுத்துவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படு வீர்கள். தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை கேது செல்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய சிக்கல் களை தீர்ப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தை முன் னின்று நடத்துவீர்கள். வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். கேது 6ல் நிற்பதால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். புத்திசாலித்தனத்துடன் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். பிரிந்தி ருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். மனைவி வெகுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணங்களை இப்போது வாங்கிக் கொடுப்பீர் கள். குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மரியாதை கூடும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் பொருட்களை வாங்கி வைப்பீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். உத்யோகத்தில் உங்களை ஏளனமாக பார்த்த உயரதிகாரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திறமையாக செயல்படுவீர்கள். குறைகூறிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் இனி வலிய வந்து பேசுவார்கள். உங்களின் கடின உழைப்புக்காக பதவி உயர்வு, சம்பள உயர்வெல்லாம் உண்டு. இந்த ராகு-கேது மாற்றம் விரக்தி வேதனைகளிலிருந்து விடுவிப்பதுடன் அதிகாரம் ஐஸ்வர்யங்களில் திளைக்க வைக்கும்.
பரிகாரம்:
சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவிலுள்ள புகழ்பெற்ற ராகு-கேது தலமான காளஹஸ்திக்கு சென்று வாருங்கள். இறைவன் காளத்திநாதர் என்றும் அம்மை ஞானப்பூங்கோதை எனும் திருப்பெயரோடும் எழுந்தருளியுள்ளார்கள். அன்னதானம் செய்யுங்கள்.

RAGHU-KETHU PEYARCHI - THULAM

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
சொத்து சேரும்

‘கோலோன் ஓயான்’ என்ற பழமொழிக்கேற்ப தொடங்கியதை முடிக்கும்வரை அதே சிந்தனையாக இருப்பீர்கள். மற்றவர்களின் மன ஓட்டத்தை அறிவதி லும் 
வல்லவர்கள். சுயநலமில்லாமல் சுற்றம், நட்புக்காக உழைப்பீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு ராகுவும் கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரையுள்ள காலகட்டத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்த ராகு ஏடாகூடமாக பேசவைத்து எல்லாவற்றிலும் சிக்க வைத்தார். பணம் பல வகையில் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் வந்து சேமிப்பை கரைத்ததே! குடும்பத்தில் கணவன்- மனைவிக்குள் நெருக்கத்தை குறைத்தார். இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் ஓரளவு பிரச்னைகள் குறையும். இனி இடம்,  பொருள், ஏவல் அறிந்து பேசும் வித்தையை கற்றுக் கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். ஆனால் ராசிக்குள் ராகு அமர்வதால் ஆரோக்யத்தில் இனி  நீங்கள் அதிக அக்கறை 
காட்ட வேண்டும். உங்கள் ராசிக்குள்ளேயே ஏற்கனவே சனிபகவானும் அமர்ந்து கொண்டிருப்பதால் யூரினரி இன்ஃபெக்ஷன்,  ஹார்மோன் கோளாறு, நீரிழிவு நோய் மற்றும் தலை, தோள்பட்டையில் வலி வந்துபோகும். மருத்துவரின் ஆலோசனையின்படி நடந்து கொள்ளுங்கள்.  போலி மருத்துவரிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்கள் ராசிநாதனான சுக்கிரனுக்கு ராகு நட்பு கிரகமாக வருவதால் அனைத்துப் பிரச்னைகளிலிருந் தும் நூலிழையில் காப்பாற்றப்படுவீர்கள். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் திருதிய சஷ்டமாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் தடைகள் நீங்கும். ஓரளவு பணமும் வரும். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏமாற்றங்கள், இழப்புகளை சந்திக்க வேண்டியது வரும். வழக்கை சுமுகமாக முடிக்க முயற்சிப்பீர்கள். 

சிலர் வீடு மாற வேண்டியது வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு மாற்றுவீர்கள்.  ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சுவாதி  
நட்சத்திரக்காரர்களுக்கு இக்காலகட்டத்தில் பிரிவு, விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மகான்கள், சித்தர்களின் 
ஜீவசமாதி சென்று வருவது நல்லது. 

உங்கள் தன சப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம்  வரும். 
சொத்துப் பிரச்னையை தீர்க்க புதுவழி கிடைக்கும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். வீடு கட்டும் முயற்சி பலிதமாகும். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மனைவிக்கு ரத்த சம்பந்தப்பட்ட நோய் வந்துபோகும். 

ராசியில் நிற்கும் ராகு சலிப்பையும் அலட்சியப் போக்கையும் உண்டாக்குவார். வெளி உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. காய்கறிகளை  அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நேரம் கடந்து சாப்பிட வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். 

கன்னிப்பெண்களே! பெற்றோருடன் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வது நல்லது. தள்ளிப்போன திருமணம் முடியும்.

மாணவர்களே! நினைவாற்றல் கூடும்.  வகுப்பறையில் 
முன்வரிசையில் வந்து அமருங்கள். விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும். கெட்ட நண்பர்களை தவிர்க்கப்  பாருங்கள். 

அரசியல்வாதிகளே! தலைமையைப் பற்றிக் குறை கூறவேண்டாம். 

வியாபாரிகளே! போட்டியாளர்கள் அதிகரிக்கத்தான் செய்வார்கள். பெரிய முதலீடுகளை தவிர்த்து இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள்.  வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. அரசு விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். புது ஆர்டர்கள், ஏஜென்சிகளை போராடிப் பெறுவீர்கள். 

உத்யோகஸ்தர்களே!  தடைபட்ட உரிமைகளும் சலுகைகளும் உடனே கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள்.  

கணினி துறையினரே! சம்பள உயர்வுடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினரே! உங்கள் படைப்பாற்றலுக் கேற்ற நல்ல வாய்ப்புகள் வ ரும். சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்துப் போங்கள். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும் மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த கேது, இப்பொழுது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். இனி வீண் பயம் விலகும். பிரச்னைகளை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் ஆற்றல்  கிடைக்கும்.  மனைவியோடு 
விட்டுக்கொடுத்து போங்கள். தேவையில்லாத பயணங்கள் இனி இருக்காது. பலரையும் நம்பி ஏமாந்த நிலை மாறும். பிர பலங்களின் அறிமுகமும் கிடைக்கும். 
நன்றி மறந்தவர்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். சொத்துப் பிரச்னை, பங்காளி சண்டைக்காக  நீதிமன்றம் செல்ல வேண்டாம். அரசுக் 
காரியங்களில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் லாபாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் பணவரவு அதிக ரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆனால், முன்கோபத்தால் புது பிரச்னைகள் உருவாகும். மூத்த சகோதரர் அனுசரணையாக இருப்பார். புது முதலீடுகள் வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளும் எடுக்க வேண்டாம். உங்கள் ராசிநாதனும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் பணத் தட்டுப்பாடு குறையும். புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வீடு, மனை, வாகனம் வாங்கு வீர்கள். அசதி, சோர்வும் வந்து நீங்கும். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் சின்னச் சின்ன விபத்துகள் வந்து நீங்கும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். மனைவி வழியில் செலவுகள் அதிகரிக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை இப்பொழுது நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். நவீன வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களிடையே நிலவி வந்த மனஸ் தாபங்கள் விலகும். ராசிக்கு 7ம் வீட்டில் கேது அமர்வதால் வியாபாரத்தில் கூட்டுத் தொழிலை தவிர்க்கப் பாருங்கள். பங்குதாரர்களுடன் பகை வரும். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மாறும். உங்களின் நிர்வாகத்திறன் கூடும். உடன் பணிபுரிபவர்களால் நிம்மதியுண்டாகும். இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ராகு உங்களுக்கு ஆரோக்ய குறைவையும். முன்கோபத்தையும் தந்தாலும் கேதுவின் அனுக்கிரகத்தால் நினைத்ததை முடிக்கும் வல்லமையும் உண்டாகும்.
பரிகாரம்:
கும்பகோணத்தில் நகரின் மையத்திலேயே அமைந்துள்ள ஆதிசேஷன் வழிபட்ட ஈசனான நாகேஸ்வரரையும் பெரியநாயகியையும் தரிசியுங்கள். கோயில் திருப்பணிகளுக்கு உதவுங்கள்.

RAGHU-KETHU PEYARCHI - KANNI

Source: www.dinakaran.com


ராகுவின் பலன்கள்:
லாபம் அதிகரிக்கும்

‘கன்னி மகனை கைவிடேல்’ என்ற முதுமொழிக்கேற்ப பழகுவதற்கும், ஆபத்து நேரத்தில் ஓடிவந்து உதவுவதற்கும், உங்களைப்போல் வேறு யாருமி ல்லை. மற்றவர்கள் முயன்று முடியாது என ஒதுக்கித் தள்ளிய விஷயத்தை யதார்த்தமான அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். உங்கள் மன தின் ஓரத்தில் 
குழந்தைத்தனமும் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும். சாயாகிரகங்களான இந்த ராகுவும் கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரை யுள்ள காலகட்டத்தில் உங்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு வாழ்வில் முன்னேற்றங்களையும், மன தைரியத்தையும், பிரபலங்களின் நட்பையும்  கொடுத்து வந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி தவிர்க்க முடியாத செலவுகளும் அடுத்தடுத்து வரும். சிறுவேலைகள்கூட ஒரு முறைக்கு இரண்டு முறையாக அலைந்து முடிக்க வேண்டிவரும்.  வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால் பேச்சில் கவனம் தேவை; நீங்கள் நல்லதைச் சொல்லப்போய் அதை சிலர் வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். கூடுமானவரை யாரிடமும் கோபமாக பேச வேண்டாம். பேச்சில் இனிமை  சேர்த்துக்கொள்வது நல்லது. உங்களின் முன்கோபத்தால் சிலரின்  நட்பை இழக்க வேண்டியது வரும். ஆகவே தியானம் பழகுவது கோபத்தை கட்டுப்படுத்த உதவும். கண், காது, பல்வலி அதிகரிக்கும். மருத்துவரின்  ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சுக சப்தமாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் ஓரளவு பணம் வரும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடு களைகட்டும். சிலர் சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகள் தீரும். உத்யோகத்திலும் செல்வாக்கு கூடும்.   ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் ஆரோக்யம் பாதிக்கும். 

வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. கூடாப் பழக்க வழக்கங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு வரக்கூடும். பார்வைக் கோளாறு வந்துபோகும். உங்கள் திருதிய, அஷ்டமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் நிலம், வீடு வாங்குவது, விற்பதில் கவனம் தேவை.  மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மின்சார சாதனங்களை கவனமாகக் கையாளுங்கள்.

பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். நீங்கள் விரும்பியபடி வெளிநாட்டில் வேலை  பார்க்கும் 
வரன் வந்தமையும். மகனின் உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். 2ம் வீட்டில் ராகு நிற்பதால் வெளிவட்டாரத்தில்  யாரையும் தாக்கிப் 
பேச வேண்டாம். பேச்சில் இனிமை சேர்த்துக் கொள்ளுங்கள். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. குடும்பத்துடன் குலதெய்வக்  கோயிலுக்கு சென்று 
வாருங்கள். விலையுயர்ந்த தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள்.  

கன்னிப் பெண்களே! அலட்சியம், சோம்பல், பயம்  இவற்றிலிருந்து விடுபடுவீர்கள். கல்யாணமும் சிறப்பாக நடந்து முடியும். தவறானவர்களின் நட்பை ஒதுக்கி விடுங்கள். மாணவர்களே! உயர்கல்வியில்  கூடுதல் கவனம் செலுத்தி வெற்றி பெறுவீர்கள். 

அரசியல்வாதிகளே! தலைமைக்கு நெருக்கமாவீர்கள். 

வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க, நவீன விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள்.  லாபம் உயரும். பணியாளர் ஒத்துழைப்பார்கள்.  வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள். 

உத்யோகஸ்தர்களே! அலுவலகத்தில் இருந்து வந்த மோதல்போக்கு மறையும். பதவி உயர்வு உண்டு.  மேலதிகாரி உங்களின் ஆலோசனையையும்  ஏற்பார். 
சக ஊழியர்களால் மனஸ்தாபங்கள் வெடிக்கும். 

கணினி துறையிலிருப்பவர்களே! அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புது வாய்ப் புகள் வரும். சம்பளம் உயரும். 

கலைத்துறையினரே! தள்ளிப்போன புதிய வாய்ப்புகள் தேடி வரும். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் அமர்ந்து தந்தையாருக்கு உடல்நலக் குறைவையும் அவருடன் கருத்து மோதல்களையும் பணப்பற்றாக்குறையையும் தந்த கேது இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். இனி கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். அடிமனதில்  ஒருவித பயம் வரும். சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவிக்குள் சண்டை வந்து போகும். யூரினரி இன்ஃபெக் ஷன், பைல்ஸ் தொந்தரவு வரக்கூடும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் விரய ஸ்தானாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் ஆன்மி கத்தில் உங்கள் மனம் லயிக்கும். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களை அதிவேகமாக இயக்க வேண்டாம். உங்கள் தன பாக்யாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். திரு மணம் கூடி வரும். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளை பாக்யம் கிட்டும். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் ஆரோக்யத்தில் கூடுதலாக அக்கறை காட்டுங்கள். உணவு கட்டுப்பாடு தேவை. விபத்துகள் வந்து நீங்கும். எதிர்பாராத தொகை கைக்கு வரும். சிலர் உங்கள்மீது வீண் பழி சுமத்தி விமர் சித்தாலும் கலங்காதீர்கள். கேது 8ல் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். மற்றவர் விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைக்காதீர்கள். செல்போனில் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்க வேண்டாம். எட்டில் நிற்கும் கேது ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட் டையும் ஏற்படுத்துவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வேலையாட்களிடம் அதிகம் கண்டிப்பு காட்டாதீர்கள். உத்யோகத்தில் அதிக வேலைச்சுமையால், நேரந்தவறி வீட்டிற்குச் செல்ல நேரிடுவதால் குடும்பத்தில் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும். பிரச்னைகளை தவிர்க்க குடும்பத்தாருடன் விடுமுறையை செலவிடுங்கள். குடும்பத்தோடு குலதெய்வம் கோயிலுக்கு சென்று வாருங்கள். இந்த ராகு-கேது மாற்றம், சுற்றியிருக்கும் சொந்த பந்தங்களின் உள்மன ஓட்டங்களை உணர வைப்பதுடன், காலத்திற்கு தகுந்தாற்போல் உங்களை தயார்படுத்தவும் செய்யும்.
பரிகாரம்:
திருநெல்வேலியிலிருந்து மேற்கே 13 கி.மீ. தொலைவிலுள்ள கோடகநல்லூர் தலத்தில் காளத்தீஸ்வரர் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கும் ஈசனை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.




RAGHU-KETHU PEYARCHI - SIMMAM

Source: www.dinakaran.com

                                                                                                    












 ராகுவின் பலன்கள்:
வருமானம் உயரும்

‘சிம்மத்தாருடன் சினம் கொள்ளாதே’ என்ற பழமொழிக்கேற்ப கோபம் வந்துவிட்டால் சிங்கமாகச் சீறி அடுத்தவர்களை ஆடாய் அடக்குவீர்கள். சுருக்கென்று சுண்டி இழுக்கும் பேச்சுக்கு சொந்தக்காரர்களான நீங்கள், எந்த வேலையையும் உடனே முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு 2.12.2012 முதல் 
21.6.2014 வரையுள்ள காலகட்டங்களில் இந்த  ராகுவும் கேதுவும் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்திருந்த ராகுபகவான் உங்களை நாலாபுறமும் பந்தாடினாரே! தாயாருக்கு அறுவை சிகிச்சையை  தந்ததுடன், மனக்கசப்பையும் வீண் விவாதங்களையும் கொடுத்தாரே! இப்பொழுது ராசிக்கு 3ம் வீட்டிற்கு வந்தமர்வதால் எதிலும் வெற்றியுண்டாகும். முயற்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் யாவும் நீங்கும். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லைகளை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் ஈகோவால் இருந்த இடைவெளி குறையும். குழந்தை பாக்யம் கிட்டும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில்  வேலை கிடைக்கும். மகளுக்கு தள்ளிப்போய் கொண்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு கூடி வரும். தாயாருக்கு இருந்து வந்த சர்க்கரை நோய்,  மூட்டுவலி எல்லாம் குறையும். சோர்ந்த முகம் மலரும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியை  முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். விரைந்து முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வி.ஐ.பிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என உங்களின் நட்பு வட்டம் விரியும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். பெரிய நோய் இருக்குமோ என்ற பயம், கனவுத் தொல்லை, தூக்கமின்மை எல்லாமும் நீங்கும். இளைய சகோதர வகையில் சில நேரங்களில் மனஸ்தாபங்கள் வந்தாலும்  பாசம் குறையாது.  
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால்  
அடிமனதிலிருந்த பயம், கவலை விலகும். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு திருமணம் முடியும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான 
சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். 

அரசால் ஆதாயமுண்டு. புது முதலீடு செய்து வியாபாரம் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஷேர்  மூலம் பணம் வரும். பழைய பிரச்னைகள் தீரும்.   
                                                                                        
உங்கள் சுகாதிபதியும் பாக்யாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் குடும்ப  வருமானம் உயரும். பழைய சொத்து வந்து சேரும்.  பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோக, திருமண முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். புதிய பொறுப்புகள், பதவிகள் வரும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் ஒருபடி உயரும். வராது என்றிருந்த பணமெல்லாம் வந்து சேரும். இதுவரை தாய்வழி உறவினர்களால் இருந்து வந்த அலைச்சல்களும் செலவுகளும் நீங்கும். பேச்சில் தெளிவு பிறக்கும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். பால்ய  நண்பர்கள் உதவுவார்கள்.  

கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். பாதியிலேயே விட்ட படிப்பை மீண்டும் தொடர்வீர்கள். தோல் அலர்ஜி, ரத் தசோகை நீங்கும். 

மாணவர்களே! உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். 

அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தவிர்ப்பது நல்லது. தலைமை உங்களுக்கு முக்கியத்துவம் தரும். 

வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள். பழைய பாக்கிகளை இனி கறாராகப் பேசி வசூலியுங்கள். பற்று வரவு உயரும். ஷேர், மருந்து, கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்யோகஸ்தர்களே! உங்களை அலைக்கழித்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை  ஒப்படைப்பார். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். 

கணினி துறையினரே! அயல்நாடு செல்ல வாய்ப்பு அமையும். 

கலைஞர்களே! இனி பெரிய நிறுவனங்களிடமிருந்து புது வாய்ப்பு வரும். 
கேதுவின் பலன்கள்:
இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்திருந்த கேதுபகவான் எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய விடாமல் உங்களை தத்த ளிக்க 
வைத்தாரே! உத்யோகத்தில் அடிக்கடி இட மாற்றங்களையும் அவமானங்களையும் சந்திக்க வைத்தாரே! இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந் தமர்வதால் வேலைச்சுமை குறையும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் மாறும். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். தங்கையின்  கல்யாணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உத்யோகத்தில் நெடுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் இப்போது கிட்டும். இனி ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஒன்பதாம் இடத்தில் கேது அமர்வதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். அவ ருடன் கருத்து மோதல்கள் வந்துபோகும். கௌரவச் செலவுகள் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ராசிநாதனான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் உங்கள் ஆளு மைத் திறன் அதிகரிக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வாயுத் தொந்தரவால் லேசாக நெஞ்சுவலி வந்துபோகும். நடைப்பயிற்சி செய்யத் தவறாதீர்கள். உங்கள் திருதிய ஜீவன ஸ்தானாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்ப வருமானம் உயரும். வேலை கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். வீடு மாறுவீர்கள். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் பூர்வீகச் சொத்தை போராடி பெறுவீர்கள். செலவுகள் கட்டுப்படுத்த முடியாமல் போகும். தந்தையாருக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் வந்துபோகும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கேது ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் தந்தைவழிச் சொத்துகளை அடைவதில் அலைச்சல்களும் செலவுகளும் ஏற்படும். பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மரியாதை கூடும். சக ஊழியர்களால் நிம்மதி பிறக்கும். இந்த ராகு-கேது மாற்றத்தில் கேதுவால் இனந்தெரியாத பயமிருந்தாலும் ராகுவின் உதவியால் அதிரடி திட்டங்கள் தீட்டி வெற்றி வாகை சூடுவீர்கள்.
பரிகாரம்:
புதுக்கோட்டை அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள பேரையூர் எனும் தலத்தில் அருளும் நாகநாதரை தரிசியுங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.

RAGHU-KETHU PEYARCHI - KATAKAM

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
திறமைகள் வெளிப்படும்

‘நண்டானுக்கு இடம் கொடேல்’ என்ற பழமொழிக்கேற்ப அடிவாரத்தில் நுழைந்து கலசம் வரை ஆதிக்கம் செலுத்துபவர்களே!  நகைச்சுவையாகப்  பேசும் நீங்கள், பணம், பதவி பார்த்து பழக மாட்டீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும்  கேதுவும் சேர்ந்து என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து எல்லோரையும் பகையாளியாக்கி பாடாய்ப்படுத்திய ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்கா வது வீட்டில் வந்தமர்கிறார். ஐந்தாம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் குழந்தை இல்லாமல் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளை களின் பிடிவாத குணம் விலகும். அவர்களின் ஆழ்மனதில் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவீர்கள். பலரை நல்லவர்கள் என நம்பி ஏமாந்தீர்களே! இனி தரம் பார்த்து பழகுவீர்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட காரணமாக இருந்தவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். இழுபறியான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பக்குவமாகப் பேசி  தடைபட்ட காரியங்களையெல்லாம் முடிப்பீர்கள். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் வெடித்ததே! இனி 
சந்தோஷம் நிலைக்கும். வீட் டில் தாமதமாகிக் கொண்டிருந்த கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் முடியும். ராகு 4ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் வரும். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
சஷ்டம பாக்யாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் இழுபறியான வேலைகள்  உடனே முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்தபடி வீடு, மனை அமை யும். வங்கிக் கடன் 
கிடைக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் இக்காலகட்டத்தில் தாயாரின் உடல்நிலை  பாதிக்கும். சாலையை கடக்கும்போது கவனம் தேவை. 

சின்னச் சின்ன விபத்துகள் வந்துபோகும். சில கூடா பழக்கங்கள் உங்களை நெருங்கக் கூடும்.  புதிய நண்பர்களுடன் கவனமாக இருங்கள். வீடு மாற வேண்டியது வரும். உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் தசம ஸ்தானாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான்  செல்வதால் வீண் செலவுகளிலிருந்து மீள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உய ரும். புது சொத்து வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயர்வு உண்டு. வழக்கு சாதகமாகும்.     சகோதர, சகோதரிகளிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 

கர்ப்பிணிப் பெண்களே! நெடுந்தூரப் பயணங்கள் வேண்டாமே! லேசாக  தலைச்சுற்றல் வரும் என்பதால் மாடிப்படி ஏறி இறங்கும்போது கவனம் தேவை. 

கன்னிப் பெண்களே! யாரையும் எளிதில் நம்பாதீர்கள். காதல் விவகா ரத்தில் பெற்றோருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வீர்கள். 

மாணவர்களே!  மறதி, மந்தம் நீங்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சி சம்பந்தமாக வேலைச்சுமை அதிகரிக்கும். கௌரவப்  பதவிகள் தேடி வரும்.  

வியாபாரிகளே! போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தைப் பெருக்குவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூல் செய்யுங்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, சிமென்ட்,  புரோக்கரேஜ், மருந்து வகைகளால் இரட்டிப்பு லாபம் உண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப்  பாருங்கள். 

உத்யோகஸ்தர்களே! யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சக ஊழியர்களையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். 

கணினி துறையிலிருப்பவர்களே! அதிக சம்பளத்துடன் அயல்நாட்டில் வேலை கிடைக்கும். 

கலைத்துறையினரே! நெடுநாட்களாக காத்திருந்ததற்கேற்ப புது வாய்ப்புகள் வந்தமையும். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களை தந்த கேதுபகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வ தால் எதிலும் ஒரு பதட்டம், டென்ஷன் இருக்கும். எடுத்த வேலையை நான்கைந்து முறை அலைந்து முடிக்க வேண்டியது வரும். மூத்த சகோதரருடன்  இருந்த கருத்து மோதல்கள் விலகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் பெரு மையடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிக்க முடியாதபடி செலவுகளும் தொடரும். தங்கையின் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.  நாடாளுபவர்கள், தொழிலதிபர்களின் நட்பு கிட்டும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் தனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் யதார்த்தமாகப் பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். கண், காது, பல்வலி வந்துபோகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தந்தையாருடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரும். வேலைச்சுமை அதிகரிக்கும். தூக்கம் குறையும். சுக லாபாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். தாய்வழி உறவினர்களால் உதவியுண்டு. வேலை கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். மூத்த சகோதரர் வகையில் ஆதாயமுண்டு. கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். ஆனால் திடீர் செலவுகளால் திணறுவீர்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிர்ப்புகளும், இட மாற்றங்களும் வரும். சொத்து வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். நெருங்கிய உறவினரை இழக்க வேண்டி வரலாம். ஆன்மிகத்தில் ஆழமாகச் செல்வீர்கள். வேற்று மொழியினர் உதவுவார்கள். நெருங்கிய உறவினர்களால் கொஞ்சம் செலவுகளும் அலைச்சலும் வரும். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் செய்யாதீர்கள். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியது வரும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்தி விடுங்கள். முரண்டுபிடித்த பங்குதாரர்கள் இனி உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சின்ன அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த ராகு-கேது மாற்றம் வேலைச்சுமையையும் விரும்பியதை அடைவதில் தாமதத்தைத் தந்தாலும் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற சூட்சுமத்தை உணர வைக்கும்.
பரிகாரம்:
காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகேயுள்ள மகாகாளேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். இது ராகு-கேது பூஜித்த தலமாகும். தந்தையி ழந்த பிள்ளைக்கு முடிந்த உதவியைச் செய்யுங்கள்.

RAGHU-KETHU PEYARCHI - MITHUNUM

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
பிரச்னைகள் தீரும்

‘ரெட்டையன் வார்த்தை வெட்டிக்காடு வரை’ என்ற பழமொழிக்கேற்ப உடைந்து  வருபவர்களுக்கு ஊன்று கோலாய் இருப்பவர்களே! நல்லது கெட்டது என்று 
நான்கையும் அறிந்து வைத்திருக்கும் அனுபவசாலிகளான உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014  வரையுள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும் கேதுவும் சேர்ந்து  என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணப் புழக்கத்தையும் பிரபலங்களின் நட்பையும் ஒருபுறம் தந்தாலும் மறுபுறம் வீண்  அலைச்சல், பகை, கடன் தொந்தரவு என்று கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல என்றாலும் உங்கள் யோகாதிபதியான சுக்கிரன் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து ஓர ளவு நல்லதையே செய்வார். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் விவாதம், சண்டை என வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் சந்தோஷம் நிலைக்கும்.  ஆனாலும் புத்தி ஸ்தானமான 5ம் வீட்டில் ராகு அமர்வதால் சந்தேகக் கண்ணுடன் எல்லோரையும் பார்ப்பீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் கருதி கொஞ்சம் சேமிக்கச் செய்வீர்கள். ஆனாலும் பிள்ளைகளுடன்  சண்டை, சச்சரவுகள் வந்து  போகும். அவர்களின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். 
 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சப்தம தசமஸ்தானாதிபதியுமான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் உங்களின் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும்.  சுப நிகழ்ச்சிகள், 
பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். மனைவியுடன் ஈகோ பிரச்னை, அவருக்கு ஹார்மோன் கோளாறு என்று வரக்கூ டும். உத்யோகத்தில் இடமாற்றங்களும் வேலைச்சுமையும் இருக்கும்.  
     
ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவினங்கள் கூடும். சொந்த பந்தங்களின் விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நெருங்கிய நண்பரை இழக்க நேரிடும். ஷேர் மூலம் பணம் வரும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். உங்கள் சஷ்டமலாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் சொத்து வாங்கு வது, விற்பதில் இழப்பு வரும். சகோதரர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். 

ரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். கமிஷன், புரோக்கரேஜ்  மூலம் திடீர் பணவரவு உண்டு. வாகன விபத்து ஏற்படக்கூடும். பிள்ளைகளுக்கு நல்ல நட்புச் சூழலை உருவாக்கிக் கொடுங்கள். மகனின் கல்வி, வேலை விஷயமாக நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரும்.  ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். 

கன்னிப் பெண்களே! தள்ளிப்போய் கொண்டிருந்த திருமணம் இனி கூடிவரும். உயர்கல்வியில்  தேர்ச்சியடைவீர்கள். மாணவர்களே! வகுப்பாசிரியர் பாராட்டுவார். தேர்வில் மதிப்பெண்களை குவிப்பீர்கள். கவிதை, ஓவியம், இசைப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும். 

அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சியினரை விமர்சித்துப் பேச வேண்டாம். அண் டை அயலாருடன் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். 

வியாபாரிகளே! பழைய சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்தி நவீன மயமாக்குவீர்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். இரும்பு,  உணவு, 
புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். 

உத்யோகஸ்தர்களே!  உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தேங்கிக் கிடந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்பொழுது கைக்கு வரும்.  

கணினி துறையினரே! சம்பள உயர்வுடன் புதிய சலுகைகளும் கிடைக்கும். 

கலைத்துறையினரே! வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்பு கிடைக்கும். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும் வீண் அலைச்சலையும் தூக்கமில்லாமலும் தவிக்க வைத்த  கேதுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமர்கிறார். வற்றிய பணப்பை நிரம்பும். கைமாற்றாக இருந்த கடனையும்  தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வி.ஐ.பிகள், தொழிலதிபர்களின் நட்பை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். மனைவி நெடு நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணம், ரத்தினங்களை வாங்கித் தருமளவிற்கு வசதியாக இருப்பீர் கள். இழுபறியான 
வழக்குகள் சாதகமாக முடியும். மூத்த சகோதரர் உதவுவார். அரைகுறையாக நின்றுபோன வீட்டை கட்டி முடித்து புது வீட்டில் புகுவீர்கள். பழைய பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாகத் தீரும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சேவகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோபலம் அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கியில் லோன் கிடைக்கும். இளைய சகோத ரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிரிகள் நண்பர்களாவார்கள். அரசாங்க விஷயங்களில் வெற்றியுண்டு. உங்கள் பூர்வ புண்யாதிபதியும் விரயாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். தோற்றப்பொலிவு கூடும். திருமண முயற்சிகள் கூடிவரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் உங்கள் கை ஓங்கும். வழக்கால் ஏற்ப ட்ட நெருக்கடிகள் நீங்கும். உடல் நலம் சீராகும். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். வேற்று மதத்தவர்கள் உதவுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். மறைமுக எதிரிகள் அடங்குவார்கள். புதிய நண்பர்களால் ஆதாயமுண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத் தை மாற்றியமைப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதா யம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். ராகு உங்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டாலும் கேது அவற்றை உடைத்துத் தள்ளி உயர வைப்பார்.
பரிகாரம்:
திருப்பாம்புரத்தில் அருளும் ஆதிசேஷன் வழிபட்ட பாம்புரேஸ்வரரையும் வண்டார் பூங்குழலியையும் தரிசியுங்கள். கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து பேரளம் வழியாக இத்தலத்தை அடையலாம். வயதானவர்களுக்கு செருப்பும் குடையும் கம்பளியும் வாங்கிக் கொடுங்கள்.

RAGHU-KETHU PEYARCHI - MESHAM

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
வெற்றி பெறுவீர்கள்

ஆடோடு மோதேல் என்ற பழமொழிக்கேற்ப உங்களிடம் மோதுபவர்களுக்கு தக்க பதிலடி தராமல் விடமாட்டீர்கள். கண்ணைப் பார்த்துக் கருத்துக் களை பகிர்ந்து கொள்ளும் நீங்கள், கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காமல், கிடைத்த துரும்பை துடுப்பாக்கி கரையேறுவீர்கள். அப்படிப் பட்ட உங்களுக்கு இந்த ராகுவும் கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில்  என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம். 

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் செய்ய விடாமல் நாலாபுறமும் பாடாய்ப்படுத்திய ராகுபகவான்  ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமர்வதால், திக்கு திசையறிந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். உங்களின் அறிவுத்திறனை மழுங்க வைத்த ராகுபகவான் இப்பொழுது உங்களுக்குள் ஒளிந்து கிடந்த திறமைகளை எல்லாம் வெளிக் கொண்டு வரப்போகிறார். தொட்டதுக்கெல்லாம் வீண் விவாதங்களும்  மன உளைச்சலும் டென்ஷனும் தானே மிஞ்சியது. அவையெல்லாம் இனி விலகும். உற்சாகத்துடன் எல்லா வேலைகளையும் முடித்துக் காட்டுவீர்கள்.  எந்த விஷயத்தையும் மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள்.

குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு இனி முக்கியத்துவம் தருவார்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும் என்றாலும் களத்திர ஸ்தான மான ஏழாம் வீட்டில் ராகு அமர்வதால் மனைவியுடன் சிறு வாக்குவாதங்கள் வந்து போகும். அதை பெரிதுபடுத்த வேண்டாம். மனைவி சுட்டிக் காட்டும்  கெட்ட பழக்கங்களை திருத்திக் கொள்ளுங்கள். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் யோகாதிபதியான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 
கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடு களைகட்டும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதியில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கனவுத் தொல்லை வந்து போகும். 

தாழ்வுமனப்பான்மை மற்றும் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள். வேற்றுமொழிக்காரர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு.  எண்ணெய் மற்றும் வாயுப் பதார்த்தங்களை தவிர்த்துவிடுங்கள். வாகனம் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவ னம் செலுத்துங்கள். சகோதர வகையில் சின்னச்  இழப்புகளும் கருத்து 
மோதல்களும் வந்து போகும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிப்பீர்கள். 

அவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களை பெருமைப்படுத்துவார்கள். அரைகுறையாக நின் றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். நிரந்தர வேலையின்றி தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

கன்னிப் பெண்களே! சகஜமாகப் பேசியதால் பல இடங்களில் தர்மசங்கடத்திற்கு உள்ளானீர்களே! இனி இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவீர்கள்.  கசந்த காதல் இனிக்கும். மாதவிடாய்க் கோளாறு, மன இறுக்கம் விலகும். 

மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விளையா டும்போது சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருங்கள். 

அரசியல்வாதிகளே! தலைமையை விமர்சிக்காதீர்கள். சகாக்களுடன் மனக்கசப்பு  உண்டாகும். 

வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி உங்களின் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகளில் 
கவனம் தேவை. ரியல் எஸ்டேட், கட்டிட வகைகளால் ஆதாயமடைவீர்கள். 7ம் வீட்டில் ராகு வந்தமர்வதால் கூட்டுத் தொழிலில்  பங்குதாரர்களுடன் அவ்வப்போது வீண் விவாதங்கள் வரத்தான் செய்யும். கொஞ்சம் பொறுத்துப் போங்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். 

உத்யோகஸ்தர்களே! மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்து கொள்ளுங்கள். உங்களின் கடின உழைப்புக் கேற்றாற்போல பதவி உயர்வும் அடைவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். 

கணினி துறையினர்களே!  வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும் என்றா லும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கலைத்துறையினர்களே! போராடி வெற்றி பெறுவீர்கள். உங்களின் படைப்புகளுக்கு கைத்தட்டலுடன் காசும் சேரும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்றுகொண்டு உங்களை பக்குவமில்லாமல் பேச வைத்த கேதுபகவான் இப்போது உங்கள் ராசியிலேயே 
வந்தமர்வதால் இனி சமயோசித புத்தியுடன் பேச வைப்பார். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்தித்த நீங்கள் இனி ஆக்கபூர்வமாக  செயல்படுவீர்கள். 

குடும்பத்தினருடன் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் இனி நீங்கும். ராசிக்குள் கேது அமர்வதால் எதிலும்  சலிப்பு, டென்ஷன்,  தலைச்சுற்றல், சோர்வு, காய்ச்சல், தூக்கமின்மை வந்துபோகும். பெரிய நோய் இருப்பது போன்ற பிரமை ஏற்படும்.. வட்டிக்கு வாங்கிய கடனை எப்படி  அடைக்கப் போகிறோமோ என்ற பயம் வரும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் பிள் ளைகளால் கொஞ்சம் அலைச்சலும் செலவும் இருக்கும். படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு உங்களை விட்டுப் பிரிவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும். ஆரோக்யம் பாதிக்கும். உங்கள் தன-சப்தமாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் பணவரவு உண்டு. ஆனால் திடீர் செலவுகளால் சேமிப்புகள் கரையும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. வாகனம் வாங்குவீர்கள். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் யூரினரி இன்பெக்ஷன், தோலில் நமைச்சல், அலர்ஜியால் கட்டி வந்து போகும். சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டி வரும். புதியவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். முக்கிய காரியங்கள் இரண்டு அல்லது மூன்றாவது முயற்சியில்தான் முடிவடையும். குறிப்பாக அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கால கட்டத்தில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரிகளே! பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் நிம்மதியுண்டு. புது ஏஜென்சி எடுப்பீர்கள். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வரிகளை முறையாக செலுத்திவிடுவது நல்லது. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் காரசாரமான விவாதங்களை தவிர்த்துவிடுங்கள். உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமை அதிகரித்தாலும் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இந்த ராகு-கேது மாற்றம் அவ்வப்போது ஏமாற்றத்தையும் எதிர்பார்ப்புகளை அடைவதில் தடைகளை தந்தாலும் தொலைநோக்குச் சிந்தனையாலும் சம யோசித பேச்சாலும் தாக்குப்பிடிக்க வைக்கும்.
பரிகாரம்:
மயிலாடுதுறை மற்றும் சீர்காழிக்கு அருகேயுள்ள கீழப்பெரும்பள்ளம் எனும் தலத்தில் அருள்பாலிக்கும் நாகேஸ்வரரை தரிசியுங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.