Tuesday, 1 October 2013

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Mithunam

மிதுனம்: எதிர்நீச்சல் போட்டால் காணலாம் உதயம்


சாதுர்யமாகப் பேசி செயலாற்றும் மிதுனராசி அன்பர்களே!
ராசிக்கு 12ல் சஞ்சரித்த குருபகவான், மே28 முதல் உங்கள் ராசிக்கே பெயர்ச்சியாகிறார். தன் பார்வை பலத்தால் 5,7,9 ஆகிய இடங்களுக்கு நன்மையளிப்பார். ராசிக்கு 5ல் இருக்கும் சனி, 2,7,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். பாரப்பா இன்னுமொன்று பகரக்கேளு,பரமகுரு ஜென்மத்தில் வந்த போதுகூறப்பா கோதண்டபாணி வீரன்கொற்றவனே குடியேறி போகச் செய்தார்சீரப்பா ஜென்மனுக்கு வேதை மெத்த சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும் வீரப்பா வேந்தனும் தோஷமுண்டுவிளம்பினேன் கோட்சார வினையைக் கேளே!ஆம்...கோதண்டராமன் காட்டுக்குப் போனது ஜென்ம குரு காலத்தில் தான். பொன்பொருள் நஷ்டமுண்டு என்பதையும் இந்த வெண்பா மூலம் உணரலாம்.இதுவரை சுபவிரயத்தை ஏற்படுத்திய குரு, ஜென்மராசியில் இருந்து சுமாரான பலன்களை வழங்குவார். உடல்நிலையில் ஆரோக்கியக்குறைவு உண்டாகும். செயலில் வேண்டாத தாமதத்தை சந்திப்பீர்கள். பொருளாதாரத்தில் தடுமாற்றத்திற்கு ஆளாக வாய்ப்புண்டு. எந்தச் செயலையும் நன்கு யோசித்து மேற்கொள்வது நன்மை தரும். குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம் கவனம். வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்வது அவசியம். மற்றவர் விஷயத்தில் கருத்துச் சொல்வது கூடாது. மனதில் அடிக்கடி பயம் ஏற்படும். சகோதரர்களின் உதவி தேவையான சமயத்தில் கிடைக்கும். இயன்றவரை அவர்களை அனுசரித்து நடப்பது அவசியம்.தாயின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் அன்பைப் பெறுவீர்கள். பெற்றோரின் உடல்நிலை திருப்தி அளிக்கும். வீடு,வாகனவகையில் புதிய மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது.பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். இருக்கிற வாகனவசதியைப் பயன்படுத்துங்கள். குழந்தைப்பேறு வாய்க்கப்பெறாதவர்கள் குருவருளால் குழந்தைபாக்கியம் கிடைக்கப் பெறுவர். பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் மந்தகதியில் செயல்படுவர். அவர்களைத் தக்க அறிவுரை கூறி நல்வழிப்படுத்த முயல்வீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். ஒருநாளைப் போல ஒருநாள் சீரான உடல்நிலை இருக்காது. சிலருக்கு மருத்துவச் செலவு அதிகமாகும். கடன் விஷயத்திலும் நிதானம் தேவை. கடன் வாங்கி கடன் அடைக்க முயல்வீர்கள். குடும்பச் செலவில் சிக்கனத்தைப் பின்பற்றினால் கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியும். களஸ்திர ஸ்தானத்தில் குரு, சனி பார்வை படுவதால் திருமணம் கைகூடினாலும், அதில் தடைகளைச் சந்திக்க நேரிடும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்துவேறுபாடும் உண்டாகும். விட்டுக்கொடுத்து நடந்தால் மட்டுமே அமைதியை நிலைநாட்ட முடியும்.ஆயுள்ஸ்தானம் பலப்படுவதால் உடல்நலக்குறைவு நேர்ந்தாலும் சமாளித்து விடுவீர்கள். மறைமுக எதிரிகளால் தொல்லைக்கு உள்ளாவீர்கள். எதிரிகளை இனம் கண்டு ஒதுங்கி இருப்பது நல்லது. தந்தை வழிச் சொத்துகளில் இருந்த பிரச்னை நல்லமுறையில் தீர்ந்து விடும். உயர்கல்விக்காக வெளியூர்ப்பயணம் செல்வீர்கள். கடந்த காலத்தில் கல்வியைத் தொடர முடியாமல் விட்டவர்கள் கூட, மீண்டும் படிக்கும் வாய்ப்பு குருவருளால் உண்டாகும். கல்வி வளர்ச்சிக்கான சூழ்நிலை வாய்க்கப் பெறுவீர்கள். தொழிலில் மிதமான வளர்ச்சியும், சீரான வருமானமும் கிடைக்கும். பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புண்டு. வேலை தேடி முயற்சிப்பவர்களுக்கு விடாமுயற்சி தேவை. மூத்த சகோதரர்களின் ஆலோசனையை ஏற்கத் தயங்குவீர்கள். அவர்களுக்காகப் பணச் செலவும் செய்ய நேரிடும். வாழ்வில் இன்ப துன்பம் இரண்டையும் கலந்து உங்களுக்கு வழங்க மிதுனகுரு காத்திருக்கிறார்.
தொழிலதிபர்கள்: உற்பத்தியை உயர்த்த கடுமையாகப் பாடுபட வேண்டியிருக்கும். ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு கிடைக்கும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு தேவையான வசதிகளைசெய்து கொடுத்து பணியில் ஆர்வமுடன் ஈடுபட வழி ஏற்படுத்துவீர்கள். சக தொழில் சார்ந்தவர்கள் உங்களிடம் நல் அபிப்பிராயத்துடன் நடந்துகொள்வர். நிர்வாகப்பணியில் ஈடுபட புத்திரர்களுக்கு தகுந்த பயிற்சி தந்து பணிபுரிய வைப்பீர்கள். 
வியாபாரிகள்: முன்பைவிட போட்டி அதிகரிப்பதால் மனதில் குழப்பமும் செயல்களில் தாமதமும் இருக்கும். விற்பனையை உயர்த்த கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டி வரும். மூலதன தேவைகளுக்காக சிறு அளவில் கடன் பெறுவீர்கள். புத்திரர்களும், இல்லறத்துணை வழி சார்ந்த உறவினர் ஒருவரும் வியாபாரம் செழிக்க தம்மால் இயன்ற உதவியை வழங்குவர். லாபம் ஓரளவுக்கு இருக்கும்.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் பணிச்சுமையை எதிர்கொள்வர். இதனால் மனதில் பதட்டமும் செயல்திறனில் குறைபாடுகளும் ஏற்படும். குடும்பத் தேவைகளின் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதால் மட்டுமே பணிபுரிவதில் ஆர்வம் வளரும். பணத்தேவையை சரிக்கட்ட கடன் பெற வேண்டி வரும். சிலர் கவனக்குறைவான செயல்களுக்காக நிர்வாகத்தின் கண்டிப்பை பெறுவர். சலுகைகள் கிடைப்பதிலும் தாமதம் இருக்கும். சக பணி சார்ந்தவர் உங்களுக்கு தொழில்நுட்ப உதவி தந்து உறுதுணையாக நடந்துகொள்வர். சூழ்நிலை, பணவரவு போன்றவற்றை கவனத்தில் கொண்டு செலவுகளை திட்டமிடுவது அவசியம். பணி அழுத்தத்தினால் வாழ்க்கைத் துணைவர் சிரமப்படும்பொழுது உங்களின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டங்களை அக்கறையுடன் மதித்து செயல்படுவது அவசியம். வேலைகள் குறித்த நேரத்தில் முடியாமல் இழுத்தடிக்கும். சலுகைகள் கிடைக்க தாமதமாகும். சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் அதிக உழைப்பு மற்றும் நிர்வாகத் திறமையினால் உற்பத்தி, விற்பனையை சராசரி அளவிற்கு கொண்டு வருவர். கடனுக்கு கிடைக்கிறதென்று அதிக பயன்பாடு தராத தொழில் கருவிகளை வாங்க வேண்டாம்.
மாணவர்கள்: தேவையற்ற விஷயங்களில் கவனம் கொள்வதையும் வெளியிடங்களில் சுற்றுவதையும் குறைத்துக்கொள்வதால் மட்டுமே படிப்பில் ஈடுபாடு வளரும். பெற்றோரின் சூழ்நிலை, எதிர்கால தேவைகளை உணர்ந்து படிப்பதால் மட்டுமே தேர்ச்சி விகிதம் சீராகும். சக மாணவர்கள் சமூக நட்பு பாராட்டுவர். படிப்புக்கான பணவசதி ஓரளவுக்கு இருக்கும். தந்தையின் அன்பு, பாசம் ஊக்கம் தரும். படிப்புக்குப் பின் வேலைவாய்ப்பு பெற முயற்சிப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற வகையில் பணி கிடைக்கும்.
அரசியல்வாதிகள்: எதிரிகளின் குறுக்கீடு வருவதால் மனதில் சோர்வும் செயல்களில் தாமதமும் உருவாகும். பொறுமையையும் எதிர்கால நலன் குறித்த அக்கறையையும் மனதில் பதித்துக்கொள்வதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ் பெறுவதைவிட பெற்ற புகழை பாதுகாப்பதில் கவனம் கொள்ளவும். அரசிடம் எதிர்பார்க்கிற உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். புத்திரர்களின் திறமையும் ஆலோசனையும் உதவிகரமாக அமையும்.
விவசாயிகள்: விவசாயப் பணிகளை மேற்கொள்ள தேவையான பணவசதி, இடுபொருட்கள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். வழக்கமான பயிரை விட்டு, வேறு பயிர் சாகுபடி செய்யலாமா என்பது போன்ற குழப்பமான எண்ணங்கள் உருவாகும். விளைபொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற லாபம் முக்கிய செலவுகளுக்கு உதவிகரமாக இருக்கும். நிலம் தொடர்பான பிரச்னையில் பொறுமை காப்பது பலன் தரும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் தடைகள் நொறுங்கி நற்பலன் ஏற்படும்.
பரிகாரப் பாடல்:
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Rishabam


ரிஷபம்: என்ன சுகம்! என்ன சுகம்! தந்திடுவார் இனிய சுகம்


இனிய பேச்சால் அனைவரையும் கவரும் ரிஷபராசி அன்பர்களே!
ஜென்ம ராசியில் சஞ்சரித்த குரு மே 28 முதல் சுபஸ்தானமான இரண்டாமிடத்திற்கு பெயர்ச்சியாகிறார். தனது பார்வை பலத்தால் 6,8,10 இடங்களைப் பார்க்கிறார். சனி ராசிக்கு 6ல் இருந்து 3,8,12 ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். ஆமெனவே வியாழனுமே இரண்டு ஐந்தேழ்,  அடுத்த ஒன்பது பதினொன்றில் வாழ  தாமென செல்வமொடு குதிரை உண்டாம் தழைக்குமே குடை தர்ம தானம் ஓங்கும் நாமென தாய்தகப்பன் புதல்வராலே நன்மையாம் அருமையோடு பெருமையுண்டாம்போமென அரசர்க்கு நல்லோனாக்கும்புகழ் சோபனம் நடக்கும் பூமியாள்வன் என்கிறது ஒரு வெண்பா.இதன்படி, என்ன சுகம்...என்ன சுகம் என்று பாடுமளவு வாழ்க்கைச் சக்கரம் சுமூகமாக சுழலும். மனதில் தைரியம் மேலோங்கும். ஆயுள்பலம் அதிகரிக்கும். தொல்லை அளித்து வந்த நோய்நொடி அனைத்தும் விலக ஆரம்பிக்கும். தடைபட்டவருமானம் சரளமாகும். குடும்பத்தேவை அனைத்தும் நிறைவேறும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். கடந்த காலத்தில் கொடுத்த வாக்குறுதியைக் கூட தற்போது நிறைவேற்ற முடியும். சனியின் பார்வை தைரிய ஸ்தானத்தில் படுவதால் அவ்வப்போது மனக்குழப்பத்திற்கு ஆளாக வாய்ப்புண்டு. இளைய சகோதரர்களிடம் கருத்துவேறுபாடு ஏற்படலாம் கவனம். அவர்களுக்கு செலவு செய்யும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாவீர்கள். தாயின் தேவையறிந்து செயல்பட்டு அவரின் அன்பும் ஆசியும் பெறுவீர்கள். வீடு கட்டும் நோக்கில் புதிய மனை வாங்கும் யோகமுண்டு. சிலருக்கு புதிய வீடு, வாங்கும் அனுகூலம் உண்டாகும். புத்திரப்பேறு வாய்க்காமல் வருந்தும் தம்பதியருக்கு பொன்னான காலம் இது. குலதெய்வ அருள் பூரணமாக கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். திறமையின் காரணமாக வேலைவாய்ப்பிலும் முன்னணி வகிப்பர். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சனி,ராகுவால் உடம்பில் உஷ்ணவியாதிகள் தலைதூக்கும். பொருளாதார உயர்வால் கடன்தொல்லை நீங்கும். ராகுவின் சேர்க்கை ஆறாமிடத்தில் இருப்பதால், எதிர்கால வளர்ச்சி கருதி வீட்டு, தொழில் கடன் வாங்க நேரிடும். அப்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். திருமண முயற்சிகளில் சுபசெய்திகள் வீடுதேடிவரும். குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வர். எதிர்கால முன்னேற்றம் குறித்த ஆலோசனை மேற்கொள்வர். குரு,சனியின் பார்வை ஆயுள் ஸ்தானத்திற்கு கிடைப்பதால் நன்மையும் தீமையும் கலந்திருக்கும். நன்கு பழகியவர்களே எதிரிகளாக மாறுவதற்கு இடமுண்டு. உறவினர்கள் விஷயத்திலும் முன்னெச்சரிக்கை தேவைப்படும். கடந்தகாலத்தில் தந்தையுடன் இருந்த கருத்துவேறுபாடு மறையும். அவரின் ஆரோக்கியம் மேம்படும். தடைபட்டு வந்த உயர்கல்வியை மேற்கொள்ள வழிபிறக்கும். சிலர் கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்வர். சிலருக்கு படித்துக் கொண்டே வேலைவாய்ப்பும் கிடைப்பதற்கு யோகமுண்டு.தொழிலில் நல்ல வளர்ச்சியும், அமோக லாபமும் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைத்திடும். பணிச்சுமை பெரும்பங்கு குறையும். வெளியூர் பயணத்தால் நல்ல அனுபவம் உண்டாகும். விரய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கேது பிரச்னைகளை உண்டாக்கினாலும், சனி, குரு இருவரும் நன்மை செய்ய காத்திருக்கின்றனர்.
தொழிலதிபர்கள்: தொழிலில் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பணவசதி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைத்து, உற்பத்தி அதிகரிக்கும். சிறந்த செயல்பாடுகளால் தொழிலில் உருவாகிற போட்டியை எளிதில் சமாளிப்பீர்கள். சிலருக்கு தொழிலதிபர் சங்கங்களில் கவுரவமான பதவி கிடைக்கும். திறமைமிகு பணியாளர்களை ஊக்கப்படுத்துவீர்கள். சுற்றுலா  செல்வீர்கள்.
வியாபாரிகள்: வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பும் புதிய உற்சாகமும் பெறுவீர்கள். தாராள அளவில் விற்பனை நடந்து பணப்பரிவர்த்தனையில் முன்னேற்றம் உருவாகும். போட்டியாக செயல்பட்டவர்கள் விலகுகிற அளவில் உங்களின் செயல்திறனும் விற்பனை நடைமுறையும் மாற்றம் பெறும். புதிய நண்பர்கள் அறிமுகமாகி தமது வியாபாரத்தில் கூட்டுசேர அழைப்பர். அவர்கள் நம்பகமானவர்களா என அறிந்து செயல்படுவது நற்பலன்பெற உதவும். சரக்கு குடோன் அமைக்க சொந்த இடம் வாங்க யோகமுண்டு.
பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் ஆரோக்கிய உடல்நலத்துடன் பணியை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவர். வேலைகளை சீக்கிரம் முடித்து, அதிகாரிகளிடம் நற்பெயரும், கூடுதல் சலுகையும் பெறுவீர்கள். சக பணியாளர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு விலகும். தொழிற்சாலை பணியாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்று திறம்பட பணிபுரிவர்.
பெண்கள்: குடும்பப் பெண்கள் எல்லாரிடமும் அன்புடன் பேசி, குடும்பத்திலும், உறவினர் இல்லங்களிலும் கலகலப்பை உருவாக்குவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த முக்கிய காரணமாக இருப்பீர்கள். கணவரின் அன்பு, சீரான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவீர்கள். மாங்கல்ய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் கணவரின் ஆரோக்கியம், ஆயுள் பலம் பெறும். பணிபுரியும் பெண்கள் சிறப்பாக பணிபுரிந்து நற்பெயரும் பெறவேண்டிய சலுகைகளும் பெறுவர். பதவி உயர்வு, இடமாற்றம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். உற்பத்தி, விற்பனை அதிகரித்து ஆதாய பணவரவை பெற்றுத்தரும். பணவசதிக்கேற்ப தங்க நகை வாங்குவீர்கள். இளம் பெண்களுக்கு திருமண முயற்சி கைகூடும்.
மாணவர்கள்: எதிர்கால திட்டங்களை மனதில் கொண்டு படிப்பில் அதிக கவனமுடன் ஈடுபடுவீர்கள். மார்க் அதிகரித்து மனதில்நம்பிக்கை பிறக்கும். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். தனித்திறமைகளை வளர்ப்பதில் அக்கறையுடன் ஈடுபடுவீர்கள். சக மாணவர்கள் அன்பு பாராட்டி படிப்பில் உறுதுணையாக நடந்துகொள்வர். பெற்றோரின் அன்பு, பாசம் கிடைக்கும். படிப்புக்குப் பின் வேலைவாய்ப்பு அல்லது சுயதொழில் துவங்க முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் உண்டு.
அரசியல்வாதிகள்: கடந்த நாட்களில் இருந்த மனக்குழப்பம் மாறும். பணவசதி திருப்திகரமாக அமைந்து மனதுக்கு மகிழ்ச்சி தரும். ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு திருப்திகரமான அளவில் கிடைக்கும். எதிர்மனப்பாங்குடன் உங்களிடம் பேசிய சிலர், மனம் திருந்தி விடுவர். இருப்பினும், அவர்களிடம் நிதானித்து பழகுவது நல்லது. அரசியல் பணிக்கு புத்திரர்களின் பங்களிப்பு சுமாரான அளவில் கிடைக்கும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான இடுபொருட்கள், தாராள பணவசதி கிடைத்து விவசாயப்பணியில் ஈடுபாடு கொள்வீர்கள். மகசூல் அதிகரித்து பயிர்களுக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நிலம் தொடர்பான பிரச்னை இருப்பவர்களுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். புதியநிலம் வாங்க யோகம் உண்டு. குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை விமரிசையாக நடத்துவீர்கள்.
பரிகாரம்: லட்சுமி தாயாரை வணங்குவதால் பணவரவு பலமடங்கு பெருகும்.
பரிகாரப் பாடல்:
திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகு எல்லாமும் என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது
தருமகளே தமியேன் தலைமீது நின் தாளை வையே

Guru Peyarchi Palangal (28.5.13 முதல் 12.6.14 வரை) - Mesham


குருப்பெயர்ச்சியால் நற்பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம்
சுமாரான பலன் பெறும் ராசிகள்:மேஷம், கடகம், மகரம்
பரிகார ராசிகள்: மிதுனம், கன்னி, விருச்சிகம், மீனம்


மேஷம்: திகில் திகில் வேண்டுமைய்யா... தில்!

திறமையுடன் செயலாற்றி வெற்றி காணும் மேஷராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சஞ்சரித்து, நல்ல பலன்களைக் கொடுத்த குரு, மே28 முதல் மூன்றாம் இடத்திற்குப் பெயர்ச்சியாகிறார். அவர் தன் பார்வை பலத்தால் 7,9,11 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். சனி ராசிக்கு 7ல் அமர்ந்து 1,4,9 ஆகிய இடங்களைப் பார்க்கிறார்.  ஓங்கவே குருவேதான் ஒன்று மூன்று, உகந்த நாலாறெட்டு பத்தீராறில் தீங்காக நின்றிடிலோ பலனைக்கேளு, தேடிய பொருள் பூமி சேதமாகும்வாங்கவே அகத்தினிலே அலைச்சலோடு வாத பித்த ரோகமது வந்து வாட்டும்தாங்கவே தந்தையொடு புத்திரர்க்கும் தேடிவரும் தீமையது திகல் உண்டாமே! என்கிறது ஒரு வெண்பா. இதன்படி பார்த்தால், இந்த ஓராண்டு நடவடிக்கைகளும் திகிலாகவே இருக்கும் என்பது உறுதியாகிறது.பொதுவாக குரு மூன்றில் இருந்தால், உறவினர்களின் பகை ஏற்படும். இதுவரை செய்த செயல்களுக்கு பலன் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருக்கும். தற்போது நடந்து வரும் செயல்பாடுகளில் தடங்கல் ஏற்படும். சிலரால் ஏமாற்றப்படவோ, வஞ்சிக்கப்படவோ வாய்ப்புண்டு. கண்டச்சனி 7ம் இடத்தில் இருப்பதால், வாகனம் ஓட்டுவதிலும், பயணத்தின் போதும் நிதானம் தேவைப்படும். ஆரோக்கிய விஷயங்களில் அக்கறை தேவைப்படும். பொருளாதார விஷயத்தில் மந்த நிலை இருக்கும். செலவு கட்டுக்கடங்காமல் போகும். குடும்பத்தினருடன் வாக்குவாதம் உருவாகும். குடும்ப பிரச்னையில் அமைதி காப்பது பிரச்னையைத் தவிர்க்க உதவும்.குரு 3ல் இருப்பதால், மனதில் அதைரியம் உண்டாகலாம் கவனம். இளைய சகோதரர் வகையில் பிரச்னை உருவாக வாய்ப்பிருக்கிறது. இது தற்காலிகமானது தான் என்பதால் வருத்தப்படத் தேவையில்லை. சுக ஸ்தானத்தில் சனியின் பார்வை படுவதால் தாயின் உடல்நிலைக்காக மருத்துவச் செலவு செய்வீர்கள். உங்களுடைய உடல்நிலையும் பாதிக்கப்படலாம். குறிப்பாக, கொழுப்புச்சத்து, சர்க்கரை வியாதி, வாதம் தொடர்பாக சிகிச்சை எடுப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் மராமத்துப்பணி செய்யவேண்டிய கட்டாயம் உருவாகும். சிலருக்கு வீட்டை மாற்ற வேண்டியதிருக்கும். வாகன விஷயத்திலும் இருக்கும் வசதியைக் கொண்டு திருப்திப்படுவது நல்லது. பராமரிப்புச் செலவு கூடும். புத்திரர் கல்வி,வேலைவாய்ப்பில் சோம்பல், கவனச்சிதறலால் பின்தங்குவர். பிடிவாத குணத்துடன் நடந்து கொள்ளும் அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி நல்வழிப்படுத்துவது அவசியம். கடன் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கடன் வாங்குவது நல்லது. மனைவி ஸ்தானமாகிய ஏழாம் இடத்தில் சனி, ராகு இருப்பதால் திருமண விஷயத்தில் தடை ஏற்பட்டு விலகும். சுபநிகழ்ச்சி நடத்திட உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். கணவன்,மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் குருவின் பார்வையால் பிரச்னை வந்த வேகத்தில் மறைந்து போகும்.எதிரிகள் உங்களின் செயல்பாடுகளை நோட்டமிட்டபடி இருப்பர். மறைமுக எதிரிகளாலும் தொல்லையைச் சந்தித்து வருவீர்கள். அக்கம்பக்கத்தினரிடமும் அளவுடன் பழகுவது பிரச்னையை பெருமளவு குறைக்கும்.தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தந்தையின் உடல்நலம் கருதி மருத்துவச் செலவு செய்வீர்கள். உயர்கல்வி பெறுவதற்காக சிலர் வெளியூர், வெளிநாடு சென்று தங்குவர். கல்வி முடித்து வேலை தேடுபவர்களுக்கு கடின முயற்சி தேவைப்படும்.லாப ஸ்தானமாகிய 11ல் குருவின் பார்வை படுவதால் பணப்பற்றாக்குறையைச் சமாளிக்க அவ்வப்போது நல்ல வழி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். மூத்த சகோதரர்களின் வழிகாட்டுதலால் பிரச்னையிலிருந்து விடுபடுவீர்கள். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்காது.
தொழிலதிபர்கள்: தொழிலில் சிரமநிலை இருக்கும். தொழிலாளர்களை வேலை வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகி விடும். இயந்திர பராமரிப்பு செலவு அதிகரிக்கும். உற்பத்தி சுமாராக இருக்கும். உழைப்பு அதிகம், பலன் குறைவு என்கிற இக்கட்டான நிலை ஏற்படும். 
வியாபாரிகள்: நகை, தானியம், மளிகை, பழம், இனிப்பு, எண்ணெய் வியாபாரம் செய்பவர்களுக்கு அதிக பலன் இராது. மற்ற வியாபாரிகள் ஓரளவுக்கு லாபம் சம்பாதிப்பர். தற்போது இருக்கிற இடத்தை மாற்ற வேண்டிய அவசியம் சிலருக்கு வரலாம். வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த கடனை வசூலிப்பவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டி வரும். 
பணியாளர்கள்:  எந்த வேலையை எடுத்தாலும், அதில் தடை தாமதம் என பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளலாம். இதன் காரணமாக, அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாக நேரும். இன்று செய்ய வேண்டிய வேலையை நாளை செய்து கொள்ளலாம் என ஒத்தி வைத்தால் உங்கள் பாடு திண்டாட்டமாகி விடும்.  சலுகைகள் ஓரளவுக்கே கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.
பெண்கள்:  குடும்ப பெண்கள் தங்கள் உடல்நலத்தை சரிவர கவனித்துக் கொண்டால் தான் வீட்டுப்பணிகளை விரைந்து முடிக்க முடியும். குடும்பச்செலவுக்குத் தேவையான பணம் கிடைக்காது. சில சமயங்களில் நகைகளை அடமானம் வைக்க நேரிடலாம். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். பணிபுரியும் பெண்களை கடுமையான வேலை சிரமப்படுத்தும். அலுவலகத்தில் கடன் பெற நினைப்பதை தற்போதைக்கு ஒத்திவைப்பது நல்லது.
மாணவர்கள்:  இன்ஜினியரிங், சட்டம், தொழில் சார்ந்த படிப்புகளில் உள்ள மாணவர்கள் உடனுக்குடன் பாடங்களைப் படிக்காவிட்டால் தேர்வதற்கு சிரமப்படும். பிற துறையில் உள்ளவர்கள் மறதி காரணமாக அவதிப்படுவர். ஆசிரியர்களுடன் சுமூகமான போக்கு இருந்தால் தான், படிப்பில் நன்மை ஏற்படும். நண்பர்களின் சேர்க்கை உங்களைச் சிரமத்தில் மாட்டி விடலாம். படிக்கும் நேரத்தை அணுவளவும் வீணாக்கக் கூடாது.
அரசியல்வாதிகள்:  உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் கூட அல்லாடும் நேரம் இது. இந்த நேரத்தில், பணத்தைத் தேடி அலைந்தால் சட்டச்சிக்கலில் மாட்டக் கூடும். ஆதரவாளர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். 
விவசாயிகள்:  விவசாயத்திற்காக விண்ணப்பித்த கடன்தொகை கிடைக்க தாமதமாகும். சாகுபடி செலவு அதிகரிக்கும். உழைக்கிற அளவுக்கு மகசூல் பெறுவது சிரமமே. 
பரிகாரம்:  லட்சுமிநரசிம்மரை வழிபட்டால் தொழில், வேலையில் பிரச்னை குறையும்.
பரிகாரப்பாடல்:
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசை இருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே!

All 12 Rasipalan, Source: www.dinamalar.com 


Sunday, 9 December 2012

RAGHU-KETHU PEYARCHI - MEENAM


Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
சோதனை சாதனையாகும்

‘மீனத்தான் மேலோன்’ என்ற பழமொழிக்கேற்ப அழுக்கை தின்று சுத்தப்படுத்தும் மீனைப்போல மற்றவர்களிடத்தில் உள்ள மேலான நற்குணங்களை மட்டுமே பார்ப்பீர்கள். தழைத்துக் குலுங்கும் மரங்களுக்கு ஆதாரமாக  விளங்கும் ஆணி வேரைப்போல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர்களே! உங்களுக்கு இந்த 
ராகுவும் கேதுவும் இணைந்து 2.12.2012 முதல்  21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல்  துடைத்தெடுத்த ராகு பகவான் இப்பொழுது எட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும்.  இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும். தந்தையின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டதே! இனி ஆரோக்யம் கூடும்.  தந்தைவழிச் சொத்து கைக்கு வரும். கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். ராகு 8ல் அமர்வதால் மனைவிக்கு 
மாதவிடாய்க்கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வரக்கூடும். கொஞ்சம் கூடுதலாக அக்கறை காட்டுங்கள். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் உங்களின்  தோற்றப் பொலிவு கூடும். வற்றிய பணப்பை நிரம்பும். தங்க நகைகள் வாங்குவீர்கள். வீண் அலைச்சல், செலவுகள், வாகன விபத்துகள், மறைமுக  விமர்சனங்கள் வந்து செல்லும். உத்யோகத்தில் வேலைச்சுமை, இடமாற்றம் உண்டு. ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்களைக்கூட  போராடி முடிக்க வேண்டி வரும். 

உங்களின் கௌரவத்தை பாதிக்கும் சம்பவங்கள் நிகழக்கூடும். யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் 
ஈடுபட வேண்டாம். பித்தத்தால் தலைசுற்றல், வயிற்றுவலி, வலிப்பு வந்து செல்லும். உங்கள் தன பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 
14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் திடீர் பணவரவு  உண்டு. சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.  தந்தையின் ஆரோக்யம் சீராகும். சகோதரருக்கு வேலை கிடைக்கும். பேச்சால்  பிரச்னை, சிறு நெருப்பு காயங்கள், பிறர் மீது நம்பிக்கையின்மை, பிதுர்வழி சொத்துப் பிரச்னை, பகை, ஏமாற்றம் வந்து போகும்.

வெளியூர் செல்லும்போது வீட்டை பாதுகாப்பாக பூட்டியிருக்கிறோமா என்று ஒருதடவைக்கு இருதடவை சரிபார்த்துக் கொள்ளுங்கள். யாருக்காகவும் ஜாமீன் 
கையெழுத்திட வேண்டாம். முடிந்த வரையில் வறுத்த, பொரித்த உணவு வகைகளை தவிர்த்துவிடுங்கள். காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். 

கன்னிப் பெண்களே! மனம்போல் மாங்கல்யம் வந்துசேரும். காதல் விஷயங்கள் வேண்டாமே. 

மாணவர்களே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படியுங்கள். விடைகளையும் எழுதிப் பாருங்கள். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். விட்டுக் 
கொடுத்துப் போங்கள். 

அரசியல்வாதிகளே! அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வீண் விமர்சனம் வேண்டாம்.

வியாபாரிகளே! பழைய சரக்குகள் விற்றுத் தீரும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகளை போடாதீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நயமாகப்பேசி வசூல் செய்யுங்கள். ஷேர், புரோக்கரேஜ், கமிஷன் வகைகளால் லாபமுண்டு. கடையை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.  

உத்யோகஸ்தர்களே! மேலதிகாரியின் அடக்குமுறை மாறும். இனி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சலுகைகளுடன் பதவியும் உயரும். 

கணினி துறையினரே! வெளிநாட்டிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

கலைத்துறையினரே! உங்களின் போராட்டத்திற்கு பலன் கிட் டும். புது வாய்ப்புகள் வரும். மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்துகொண்டு மன உறுதியையும், விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து வந்த  கேது பகவான் இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். இனி சாணக்கியத்தனமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். ஆனால் சில  நேரங்களில், சிலர் நீங்கள் பேசுவதை தவறாக புரிந்து கொண்டு சண்டைக்கு வருவார்கள். கையிருப்பு கரையுமளவிற்கு செலவுகள் அதிகரிக்கும். கண்  எரிச்சல், பல்வலி வந்து நீங்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களை சிலர் குறைத்து  மதிப்பிட்டார்களே! அவர்களெல்லாம் ஆச்சரியப்படும்படி பல விதங்களில் சாதிப்பீர்கள். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். பிரபலங்கள் உதவியாக இருப்பார்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். உங்கள் சேவகாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டில் மங்கள இசை முழங்கும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வேற்று மொழியி னர், மதத்தினர் உதவுவார்கள். தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை கேது பகவான் செல்வதால் பணத் தட்டுப்பாடு, மன உளைச்சல், வீண் டென்ஷன், ஒருவித சலிப்பு மற்றும் பைல்ஸ் உபாதை வந்துநீங்கும். முன்யோசனை இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். கேதுபகவான் 2ம் வீட்டில் அமர்வதால் பார்வைக் கோளாறு வரக்கூடும். கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அநாவசிய உறுதிமொழிகளை தவிர்ப்பது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணியாமல் செல்லாதீர்கள். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை போட்டு நஷ்டப்படாதீர்கள். சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும் உடன்பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். இந்த ராகு-கேது பெயர்ச்சி சின்ன சின்ன எதிர்ப்புகளையும் எதிர்பார்ப்புகளில் தாமதத்தை தந்தாலும் மாற்றுப் பாதையில் சென்று வெற்றி பெற வைக்கும்.
பரிகாரம்:
சிதம்பரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள காட்டுமன்னார்கோயிலுக்கு அருகேயுள்ள திருக்காட்டம்புலியூரில் அருளும் பதஞ்சலீஸ்வரரையும், பதஞ் சலி முனிவரையும் தரிசித்து வாருங்கள். சுமைதூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.


RAGHU-KETHU PEYARCHI - KUMBAM


Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
ஆதாயம் அதிகரிக்கும்

‘கும்பத்தான் குறை களைவான்’ என்ற முதுமொழிக்கேற்ப மற்றவர்களின் குற்றம், குறைகளை பெரிதுபடுத்திப் பார்க்காமல் பெருந்தன்மையுடன் வாழ்பவர்களே! அணைக்கட்டில் அமைக்கப்பட்டிருந்த நீர் எவ்வளவு ஆவேசமாக வெளியேறுகிறதோ அதே சீற்றத்துடன் அநியாயங்களைத் தட்டிக் கேட்பீர்கள். அப்படிப்பட்ட 
உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரையுள்ள காலகட்டங்களில் இந்த ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.  

இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை ஒரு வேலையையும் செய்ய விடாமல் முடக்கிப் போட்ட ராகுபகவான்  இப்பொழுது 
ஒன்பதாம் வீட்டில் வந்து அமர்கிறார். முடியாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை இனி முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள்.  ஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனி பிரகாசிக்கும். குடும்பத்தினருடன் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவு என்று சங்கடத்திற்கு ஆளானீர்களே! இனி உங்கள் வார்த்தையை மீறி ஒன்றும் செய்ய மாட்டார்கள். கணவன்-மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். வீட்டில் தள்ளிப்போன சுபகாரியங்கள் கூடி வரும். சேமிப்பு அதிகரிக்கும்.
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் தன லாபாதிபதியான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் கல்யாணம், சீமந்தம்,  காது குத்து, கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். புது சொத்து வாங்குவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். வராது என்றிருந்த பணம் கைக்கு வ ரும். பதவிகள் தேடி வரும். வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் குடும்பத்தில் கூச்சல், குழப்பங்கள், செலவி னங்கள், இனம் புரியாத கவலைகள், கனவுத் தொல்லைகள் வந்துபோகும். உடம்பில் இரும்புச் சத்து குறையும். பலவீனமாக இருப்பதாக நினைப்பீர் கள். காய், கனி, கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

சேவகாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் ஒருவித  பயமும் படபடப்பும் வந்து நீங்கும். உடன் பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கவலைப்படுவீர்கள். 

சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரி பார்த்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் தந்தையாரின் ஆரோக்யம் குறையும். சிலநேரங்களில் அவருடன் கருத்து வேறுபாடுகள் வரும். பூர்வீக சொத்தை விற்று வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். 

வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அவர்களின் துணையுடன் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும். வெளிமாநில புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள். 

கன்னிப் பெண்களே! விரக்தியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு, களைப்பு நீங்கும். நினைத்தபடி திருமணம் முடியும். பாதியிலேயே விட்ட கல்வியை தொடர்வீர்கள். 

மாணவர்களே! எண்ணங்கள் பூர்த்தியாகும்.  விளையாட்டுப் போட்டியில் பரிசும், பாராட்டும் கிட்டும். 

அரசியல்வாதிகளே! சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். மற்றவர்களை விமர்சித்துப் பேசவேண்டாம். 

வியாபாரிகளே! பற்றுவரவு உயரும். கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், இரும்பு, பருத்தி, ரசாயன வகைகள் மூலம் லாபமடைவீர்கள். அரசாங்க விஷயங் களில் அலட்சியம் காட்டாதீர்கள். 

உத்யோகஸ்தர்களே! இதுவரை 10ம் வீட்டில் ராகு நின்றுகொண்டு வீண்பழியையும் வேலைச்சுமையையும் கொடுத் தாரே, இனி 9ல் நுழைவதால் அந்தநிலை மாறும். உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். உங்களை தரக்குறைவாக நடத்திய மேலதிகாரி வேறு  இடத்திற்கு மாற்றப்படுவார். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். வேலைச்சுமை குறையும். 

கணினி துறையினரே! புதிய  வாய்ப்புகள் தேடி வரும். 

கலைத்துறையினரே! உங்களின் படைப்புகள் பட்டிதொட்டயெங்கும் பேசப்படும். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். வீண் வதந்திகள், கிசுகிசுக்களிலிருந்து 
விடுபடுவீர்கள். 
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்ந்து உங்களை நாலாபுறத்திலும் பந்தாடிய கேது பகவான் இப்போது மூன்றாவது வீட்டிலே முகமலர்ந்து 
அமர்கிறார். குடும்பத்தில் சங்கடங்கள் தீரும். சந்தோஷம் கூடும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். தாயாருடன்  இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். அவரின் உடல்நிலை சீராகும். ஆனால் இளைய சகோதரருடன் பிரச்னைகள் வந்து நீங்கும். பிரபலங்கள்,  தொழிலதிபர்களின் நட்பு கிட்டும்.  
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் தள்ளிப்போன திருமணம் முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் ஆதாயம் உண்டு. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்கள் சுக பாக்யாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் நகை வாங்குவீர்கள். வீடு கட்டும் முயற்சி வெற்றி பெறும். தந்தை வழிச் சொத்து வந்து சேரும். தாயா ருக்கு இருந்த நோய் குணமாகும். வாகனம் வாங்குவீர்கள். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் சோம்பல் நீங்கும். தைரியம் பிறக்கும். சவாலான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்பார்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். போட் டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேற்று மதத்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். இழுபறியான வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பணப் பற்றாக்குறையால் அரைகுறையாக வீடு கட்டும் பணி நின்றுபோனதே! இனி முழுமையாக கட்டி முடிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை முடி வுக்கு வரும். சொந்த ஊரில் உங்களை மதிப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் தேடி வருவார்கள். உயர்ரக வாகனங்கள் வாங்குவீர்கள். தங்கநகை சேரும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். வியாபாரிகளே! வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். முரண்டு பிடித்த வேலையாட்கள் இனி பொறுப்பாக வேலை பார்ப்பார்கள். உத்யோகஸ்தர் களே! உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். உயரதிகாரி பாராட்டுவார். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வந்தமையும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பகை நீங்கும். இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ராகு உங்களை சீண்டிப் பார்த்தாலும் கேதுவால் தடைகள் உடைபடுவதுடன் புதிய முயற்சிகளில் வெற்றியும் யோகமும் உண்டாகும்.
பரிகாரம்:
ஊத்துக்காடு காளிங்கநர்த்தனரான கிருஷ்ணரை தரிசித்து வாருங்கள். இத்தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு ஆடை வாங்கிக் கொடுங்கள்.

RAGHU-KETHU PEYARCHI - MAKARAM


Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
வெற்றிகள் குவியும்

‘மகரத்தார் நகரத்தை ஆள்வார்’ என்ற கூற்றுக்கிணங்க ஆளுமைத் திறன் அதிகமுடையவர்கள் நீங்கள். கோள்கள் கூட பாதை மாறலாம், ஆனால்  கொண்ட குறிக்கோளிலிருந்து  நீங்கள் மாற மாட்டீர்கள். தவறு செய்ய வாய்ப்பிருந்தும் தவறு செய்ய மாட்டீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு 2.12.2012  முதல் 21.6.2014 வரையுள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப்பார்ப்போம். 

இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணவரவு, பொருள் வரவு, உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு, பிரச்னைகளை  சமாளிக்கும் மன தைரியத்தையும் தந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்து அமர்கிறார். தொட்ட காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். பணவரவு அதிகரிப்பதால் பழைய கடனில் ஒருபகு தியை அடைப்பீர்கள். இந்த ராகு சுயமாக சிந்திக்க வைப்பதுடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார். குழந்தை இல்லையே  என வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். துரோகிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் திருதிய ஸ்தானாதிபதியும் விரயாதிபதியுமான குருபகவானின் விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் தடுமாற்றம், தயக்கம் நீங்கி தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். விலை உயர்ந்த  ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை செல்வதால் உத்யோகத்தில் திடீர் இடமாற்றம், வேலைச் சுமை இருக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உடல் சோர்வு, தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு வந்து செல்லும். யாருக் கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். நெருங்கிய நண்பர், உறவினரின் இழப்பு ஏற்படும்.

சுக லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் தாயாருக்கு ரத்த அழுத்தம்,  முதுகு, மூட்டு வலி வந்துபோகும். தாய்மாமன், அத்தை வகையில் மனஸ்தாபங்கள் வந்து செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும் என்றாலும் பணவ ரவு உண்டு. புது வேலை கிடைக்கும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். ராகு 10ல் வருவதால் வெளிவட்டாரத்தில் வி.ஐ.பிகள், கல்வியாளர்கள் அறிமுகமாவார்கள்.  மகனின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.  பழைய நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். 

கன்னிப் பெண்களே!  விரக்தி, சோம்பலில் இருந்து மீள்வீர்கள். காதல் கனியும். 

மாணவர்களே! நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடரும் வாய்ப்பு கிட்டும். அரசி யல்வாதிகள் தலைமையை அனுசரித்துப் போவது நல்லது. 

வியாபாரிகளே! சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால்தான் லாபம் கிடைக்கும். தள்ளுபடி விற்பனை மூலம் பழைய சரக்குகளை விற்று முடிப்பீர்கள். பாக்கிகளும் வசூலாகும்.  வாடிக்கையாளர்களின் ஆதரவும் பெருகும். ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்  தொழிலில் பங்குதாரர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுங்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்யோகஸ்தர்களே! ராகு 10ம்  வீட்டிற்கு வருவதால் வேலைச்சுமை வாட்டியெடுக்கும் என்றாலும் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் இடமாற்றம் உண்டு. மேலதிகாரி யுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரும். முக்கிய ஆவணங்களை கையாளும்போது கவனம் தேவை. 

கணினி துறையினரே! சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் கிட்டும். 

கலைத்துறையினரே! திறமைக்கு பரிசும், பாராட்டும் கிட்டும். வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு கதவைத் தட்டும். 
கேதுவின் பலன்கள்:
இதுவரையில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, உறவினர்களிடையே கருத்து மோதல் என பல கசப்பான அனுபவங்களையும் 
தந்த கேது, இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பக்குவப்பட வைப்பார். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீர்கள். வீட்டில் தள்ளிப்போன சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். குழந்தைகள் பாசமாகப் பழகுவார்கள்.
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் அஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் வரும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். உடல் உஷ்ணத்தால் அடி வயிற்றில் வலி, கண் எரிச்சல் வந்துபோகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். வாகனத்தில் செல்லும்போதும், சாலையை கடக்கும்போதும் கவனம் தேவை. வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதியும் ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் இக்கால கட் டத்தில் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உத்யோகத்தில் சம்பளம், பதவி உயர்வு உண்டு. கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் மன அழுத்தம், வீண் டென்ஷன், குடும்பத்தில் சச்சரவுகள், நெஞ்சு எரிச்சல், வாயுத் தொந்தரவு வந்துபோகும். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்று ஆதங்கப்படுவீர்கள். முன்பின் அறிமுகமில்லாதவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களின் பலவீனத்தை சிலர் பயன்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள். பணம், நகைகளை கவனமாகக் கையாளுங்கள். கேது 4ம் வீட்டில் அமர்வதால் முக்கிய படிவங்களில் கையெழுத்திடும்போது ஒரு தடவைக்கு, பலதடவை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. வீடு கட்டத் தேவைப்படும் தொகையை முன்னரே சேமித்துக் கொண்டு வீடு கட்டத் தொடங்குங்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை கூடும். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பாராட்டு, பதவி உயர்வு உண்டு. இந்த ராகு-கேது மாற்றம் புதிய படிப்பினைகளையும் முன்னெச்சரிக்கை உணர்வை தருவதுடன் கடின உழைப்பால் பிற்பகுதியில் வெற்றியை தருவதாகவும் அமையும்.
பரிகாரம்:
ஸ்ரீவாஞ்சியத்திலுள்ள ராகுவும் கேதுவும் சேர்ந்திருக்கும் அபூர்வ கோலத்தை தரிசித்து வாருங்கள். கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து நன்னிலம் வழியாக இத்தலத்தை அடையலாம். சாலையோரம் வாழ் சிறுவர்களுக்கு உதவுங்கள்.


RAGHU-KETHU PEYARCHI - DHANUSU

Source: www.dinakaran.com

ராகுவின் பலன்கள்:
சொத்து பிரச்னை தீரும்

‘வில்லானை சொல்லால் வளை’ என்ற கூற்றுக்
கிணங்க அதிகாரத்திற்கு அடிபணியாத நீங்கள், அன்பிற்கும் கனிவான வார்த்தைக்கும் கட்டுப்படுவீர்கள். குடிசை வீட்டில் பிறந்தாலும் சாட்டிலைட் சிந்தனைகளுடன் விண்ணை முட்டும்  உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர்கள் நீங்கள்தான். ஏக்கர் கணக்கில் சொத்து சேர்த்தாலும் ஆறடி நிலம் கூட சொந்தமாகப் போவதில்லை என்ற  பிரம்ம சூத்திரத்தை 
அறிந்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த ராகுவும் கேதுவும் இணைந்து 2.12.2012 முதல் 21.6.2014 வரையுள்ள காலகட்டங்களில் எ ன்ன மாற்றத்தை தருவார்கள் 
என்று பார்ப்போம்.   
:
இதுவரை உங்களின் ராசிக்கு பன்னிரண்டில் அமர்ந்து கொண்டு காரியத்தடைகள், மன உளைச்சல், சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியாமை என  அடுக்கடுக்காக பல பிரச்னைகளையும் நெருக்கடிகளையும் கொடுத்து வந்த ராகுபகவான், இப்பொழுது உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் புத்துணர்ச்சியும் புதிய முயற்சிகளில் வெற்றியையும் பணவரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் கட்டுப்படுத்துவார். சவாலான காரியங்களைக்  கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை இல்லாதவர் களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைத்து முடிப்பீர்கள். மகள் திருமணத்தைச் சிறப்பாக முடிப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறு வனத்தில் வேலை கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் சொத்துப் பிரச்னைகள் தீரும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. தூக்கமில்லாமலும் நிம்மதியில்லாமலும் உடலாலும் மனதாலும் நொந்து போயிருந்த நீங்கள் இனி ஆரோக்யமாகவும் அழகாக வும் மாறுவீர்கள். 
ராகுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ராசிநாதனும் சுகாதிபதியுமான விசாக நட்சத்திரத்தில் 2.12.2012 முதல் 6.6.2013 வரை ராகுபகவான் செல்வதால் தாழ்வுமனப்பான்மை நீங்கி  
தன்னம்பிக்கை பிறக்கும். லோன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தள்ளிப்போன திருமணம் முடியும். புது வாகனம் வாங்குவீர்கள். தாயாரின்  உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் இருந்த மோதல்கள் விலகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.  
             
தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 7.6.2013 முதல் 13.2.2014 வரை ராகுபகவான் செல்வதால் வழக்கில் வெற்றி உண்டு. சொத்துப் பிரச்னை  முடிவுக்கு வரும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவியாக இருப்பார்கள். மூத்த சகோதரர் உதவுவார். ஷேர் மூலம் பணம் வரும்.        
 
விரயாதிபதியும் பூர்வபுண்யாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.2.2014 முதல் 21.6.2014 முடிய ராகுபகவான் செல்வதால் குழந்தை  பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சகோதரிக்கு திருமணம் நடக்கும். பழைய கடன் பிரச்னை ஒன்று தீரும். நீண்ட  நாட்களாக போக நினைத்த அண்டை மாநில புண்ணியத் தலங்களுக்கு செல்வீர்கள். 11ல் ராகு இருப்பதால் பாதியிலேயே நின்றுபோன பல வேலைகள் உடனே முடியும். வழக்குகள் விரைந்து பைசலாகும். எதிரிகள் நண்பராவார்கள்.  

குலதெய்வத்திடம் குழந்தைக்காக வேண்டிய பிரார்த்தனையை இன்னும் நிறைவேற்றவில்லையே! 
உடனடியாக குடும்பத்துடன் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கன்னிப் பெண்களே! தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் 
தகுந்தாற்போல் சமயோசித புத்தியுடன் இனி செயல்படுவீர்கள். மாணவர்களே! வகுப்பறையில் வீண் அரட்டை வேண்டாம். படிப்பில் கவனம்  தேவை. 

அரசியல்வாதிகளே! இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் தலைமையிடம் கொண்டு செல்வது நல்லது. 

வியாபாரிகளே! போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள்.  புது ஏஜென்சி எடுப்பீர்கள். அனுபவம் மிகுந்த நல்ல 
வேலையாட்கள் வருவார்கள். 

உத்யோகஸ்தர்களே! அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு, சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள்  எல்லாம் மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. 

கணினி  துறையினரே! அயல்நாட்டில் வேலை கிடைக்கும். 

கலைத்துறையினரே! வேற்று மொழி வாய்ப்புகளும் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்து பிரச்னைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கேது பகவான் இப்பொழுது உங்கள்  ராசிக்கு பூர்வ புண்ணிய வீடான ஐந்தாம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் வீண் அலைச்சலும் செலவும் வரும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். 
கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. அதிகமான எடையை தூக்க வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களைப்பற்றி வீண் வதந்திகள் வரும். உள் மனதில் எப்போதும் ஒருவித பயமும் பதட்டமும், சந்தேகமும் இருந்து கொண்டேயிருக்கும். உறவினர்களில் ஒரு சிலர் பகையாவார்கள். தாய், தாய்மா மன் வழியில் சங்கடங்கள் வரும். 
கேதுவின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் பாக்யாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் 2.12.2012 முதல் 2.2.2013 வரை கேதுபகவான் செல்வதால் அரசு வேலை கள் விரைந்து முடியும். பணப் பற்றாக்குறை ஏற்படும். தந்தைக்கு நெஞ்சு வலி வந்து நீங்கும். தந்தைவழி உறவினர்கள் மதிப்பார்கள். பிதுர்வழி சொத் துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வெளிநாடு, வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். சஷ்டம லாபாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் 3.2.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். புது வேலை அமையும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கௌரவப் பத விகள் தேடி வரும். தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு வந்துபோகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.6.2014 வரை செல்வதால் எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், பிரச்னைகள் வந்துபோகும். பூர்வீகச் சொத்து பராமரிப்புச் செலவு கள் அதிகரிக்கும். ரத்த சோகை, மூச்சுப் பிடிப்பு, சிறுநீர் பாதையில் அலர்ஜி வரக்கூடும். கேது 5ம் வீட்டில் அமர்வதால் சொந்த ஊர் விஷயங்களில் அதிகம் தலையிட வேண்டாம். வேற்று மதத்தினர் மற்றும் வெளிநாட்டினரால் திடீர் திருப் பங்கள் ஏற்படும். வெளிமாநில புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்று மதி-இறக்குமதி வகைகளாலும் ஆதாயம் உண்டு. இந்த ராகு-கேது பெயர்ச்சியில் கேதுவால் மனக்கசப்பும், அனுபவ அறிவும் ஏற்பட்டாலும், ராகுவால் திடீர் யோகமும் பெரிய பதவிகளும் கிட்டும்.
பரிகாரம்:
நாகர்கோவில் தலத்தில் மூலவராகவே அருள்பாலிக்கும் நாகராஜரை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை முடிந்தவரை ஏற்றுக் கொண்டு உதவுங்கள்.