Saturday, 4 January 2014

2014 தனுசு: ஆள்பார்த்து பழகுங்க! ஆனந்தமாய் சிரியுங்க!


Source: www.dinamalar.com


 
பெரியவர்களை மதிப்புடன் நடத்தும் தனு” ராசி அன்பர்க@ள!

வாய் சாமர்த்தியத்திலேயே காரியம் சாதித்து விடும் திறமை கொண்ட நீங்கள், கொண்ட  குறிக்கோளில் இருந்து சிறிதும் விலகாதவர்கள். ஆன்மிக செயல்களில் அதிகமாக ஈடுபடுவீர்கள். உங்களுக்கு இந்த ஆண்டு முற்பகுதியில் அதிக நன்மைகள் நடக்கும். குருபகவான் 7-ம் இடத்தில் இருப்பது மிகவும் சிறப்பு. ஆண்டின் தொடக்கமே குருவின் பக்க பலத்தோடு தொடங்குகிறது. அவர் மூலம் உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்ததை நிறைவேற்றலாம். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார வளம் மேம்படும். வீடு மனை வாங்கலாம். மேலும், குரு பகவானின் 5-ம் இடத்துப்பார்வையும் சாதகமாக விழுகிறது. பொருளாதார வளம் மேம்படும்.  இந்த நிலையில் குருபகவான் ஜூன் மாதம்  20ல், 8-ம் இடமான கடகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. அங்கு அவரால் வீண் மன குழப்பம் வரலாம். பணவிரயம் ஆகலாம். இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து  பார்வைக்கு தனி சக்தி உண்டு. மகர ராசியில் விழும் அந்த பார்வை உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. குருவின் பார்வையால் கோடி நன்மைகளை அடையலாம் என்பது ஜோதிட வாக்கு. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறு வந்தாலும், அதை குருவின் பார்வை முறியடித்து வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே குரு சாதகமற்ற நிலையில் இருக்கிறாரே என்று நீங்கள் கவலைகொள்ள வேண்டாம். அப்படியே குரு சிற்சில இடையூறுகள் தந்தாலும், அது உங்களுக்கு பாடம்  புகட்டுவதுபோலத்தான் இருக்குமே அன்றி, தண்டனை கொடுப்பதாக அமையாது. சனிபகவான், தற்போது உங்கள் ராசிக்கு 11-ம் இடமான துலாமில்  இருக்கிறார். இது சாதகமான இடம். பல்வேறு நன்மைகளைத் தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம்  காணலாம். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் அதே இடத்தில் நின்று நன்மைகளை தருவார். சனிபகவான் மார்ச் 4-ந் தேதி முதல் ஜூலை 19-ந் தேதி வரை வக்கிர நிலையில் இருப்பார். சாதகமாக இருக்கும் கிரகம் வக்கிரமாகும் காலத்தில் மட்டும் அவரால் நன்மைகள் சற்று குறையும். நிழல் கிரகமான ராகு, தற்போது 11-ம் இடமான துலாமில் சனிபகவானோடு இணைந்து இருக்கிறார். அவரோடு இவரும் சேர்ந்து நன்மை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். ஜூன்20ல், ராகு 10-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு பொல்லாப்பையும், பெண்கள் வகையில் தொல்லைகளையும் தரலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 5-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதனால் எதிரிகளின் தொல்லை வரலாம். உடல்நலம் லேசாகப் பாதிக்கப்படலாம். அதிலும், பிள்ளைகள் நலனில் அக்கறை தேவைப்படும். கேது ஜூன் 20ல் 4-ம் இடமான மீனத்திற்கு மாறுகிறார். அதன் மூலம் சேர்க்கை சகவாசம் உங்களைக் கெடுக்கும் நிலையுண்டு. நல்ல  நண்பர்களிடம் கூட கவனமாக இருக்கவும். இந்த காலத்தில் ஆள் பார்த்து பழகினால், ஆனந்தமாய் சிரித்தபடியே காலத்தை ஓட்டலாம். உடல்நிலையில் பாதிப்பு வரலாம். குறிப்பாக, வயிறு பிரச்னை வரும். பயணத்தின் போது கவனம் தேவை. பொதுவாக இந்த ஆண்டு முக்கிய கிரகங்களின் பலத்தால் சிறப்பான பலனையே காணலாம்.  குறிப்பாக ஆண்டின் முற்பகுதியில் அதிக நன்மைகளைப் பெறலாம். பொருளாதார வளம்  அதிகரிக்கும். எந்த ஒரு செயலையும்  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். ஜூன் மாதத்திற்கு பிறகு வீண்விவாதங்களை தவிர்க்கவும்.  குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். வசதியான  வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஜூன் மாதத்திற்குள்  நடந்தேறும். உறவினர்கள்  வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு  வாங்கும் யோகம் தொடரும். இதற்கான அனுகூலம் ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் வரும்.

தொழில், வியாபாரம்: நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். புதிய தொழில் தொடங்கலாம். அரசிடம் இருந்து, ஜூன் மாதத்திற்குள் உதவி கிடைக்கும். சிலர் தீயோர்  சேர்க்கைக்கு ஆளாகி அவதியடைய வாய்ப்பு உண்டு. இனம் தெரியாத நபர்களை நம்ப வேண்டாம். அவர்களிடம் பண விஷயத்திலும் எந்த தொடர்பும் வைக்க வேண்டாம்.

பணியாளர்கள்: வேலையில் நல்ல முன்னேற்றம்  காணலாம். ஆர்வமாகப் பணிசெய்யும் மனோபாவம் வளரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். இந்த அனைத்து நன்மைகளும் ஜூன் மாதத்திற்குள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கும் அதற்குள் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. அதன்பின் வேலையில் சற்று பளு அதிகரிக்கலாம். ஜூலை 17 முதல், போலீஸ், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் நல்ல  முன்னேற்றம் காணலாம்.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஜூன் மாதத்திற்கு பிறகு சற்று முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.

பெண்கள்: உங்களுக்கு ஆண்டின் ஆரம்பத்தில் பணத்திற்கு எந்தக் குறைவும் இல்லை. பின்னால், சிறு சிரமம் வரலாம். நகை வாங்கும் திட்டத்தை ஆண்டின் முற்பகுதியிலேயே முடித்து விடுங்கள். திருமணமாகாதவர்களுக்கு, முதல் ஆறுமாதங்களில் அதற்குரிய வாய்ப்பு உண்டு. பயன்படுத்திக் கொள்ளவும்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றம் காண்பர். அடுத்த கல்வி ஆண்டில் முயற்சி எடுத்து படிக்க வேண்டும்.

விவசாயிகள்: விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால், வளர்ச்சி காண்பர். முதல் ஆறு மாதங்களில் புதிய நிலம், நவீன விவசாயக்கருவிகள் வாங்கும் திட்டம் நிறைவேறும்.

பரிகாரம்: ஆண்டு முழுவதும் கேது சாதகமற்ற நிலையில்  உள்ளதால் அவருக்கு பரிகாரம் செய்யுங்கள்.  சாஸ்தாவை வணங்கி வாருங்கள். சித்திரபுத்திரநாயனாரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதனால் நன்மை அதிகரிக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு, குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். கால பைரவரையும் வழிபடுங்கள்.

பரிகாரப் பாடல்:
புலி வாகனனே வருக வருக!
புவியெல்லாம் காத்திட வருக!
பூரணை நாதனே வருக! வருக!
புண்ணியமூர்த்தியே வருக! வருக!
பூதநாயகா வருக! வருக!
புஷ்கலா பதியே வருக! வருக!
பொன்னம்பலத்துறை ஈசா வருக!
பொற்பதம் பிடிப்போம் வருக! வருக!

2014 விருச்சிகம்: வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்

Source: www.dinamalar.com


 
எதிலும் போராடி வெற்றி காணும் விருச்சிகராசி அன்பர்களே!

நீங்கள் சுறுசுறுப்புக்கு பெயர்போனவர்கள். ராசி நாயகன் செவ்வாய் 11-ம் இடத்தில் சிறப்பான  நிலையில் இருக்க இந்த ஆண்டு பிறக்கிறது. அவரால் செயல்பாடுகளில் வெற்றி ஏற்படும். நாளைய தலைமுறை கூட, உங்கள் வெற்றி குறித்து பெருமையாக பேசுமளவுக்குரிய நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், மேலும், முக்கிய கிரகங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இந்த ஆண்டு நன்மைகள் அதிகரிக்கவே வாய்ப்பு உண்டு. குரு பகவான்,  தற்போது 8-ம் இடமான மிதுனத்தில் இருக்கிறார். இது சிறப்பான நிலை அல்ல. 8-ல் குரு பகவானால் வீண் மனவேதனை உருவாகி இருக்கும்.  பொருளாதாரத்தில் திடீர் சரிவுகள் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள், நண்பர்கள் அனுகூலமாக  இருந்திருக்க மாட்டார்கள். அதேநேரம் குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் அந்த இடர்ப்பாடுகள் சற்று குறைந்திருக்கும். தடைகள் அனைத்தும்  முறியடிக்கப்படும். உங்களது ஆற்றல் மேம்படும். பணவரவு கூடும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். குரு பகவான் மார்ச் 12 வரை வக்கிரம் அடைந்து உள்ளார். அதுவரை அவரால் கெடுபலன்கள்  நடக்காது. இந்த நிலையில் குருபகவான், ஜூன் 12ல், 9-ம் இடமான கடகத்திற்கு செல்கிறார். இது மிகச் சிறப்பான இடம். அவரால் பட்ட இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள். ஏழரைச் சனியின் ஆதிக்கம் குறையும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள்  உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்புண்டு. மேலும், குருவின் 9-ம் இடத்துப் பார்வையாலும் நன்மை கிடைக்கும். அவர் சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு முழுவதும் அவர் அதே இடத்தில்தான் இருப்பார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். சனிபகவான்  சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரின் 7-ம் இடத்து பார்வை 6-ம் வீடான மேஷத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். மேலும் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை சனிபகவான்  வக்கிரம் அடைகிறார். இந்த  காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே! மேலும் அப்போது அவரால் நன்மை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. நிழல் கிரகமான ராகு,  தற்போது சனிபகவானுடன் இணைந்திருக்கிறார். அவருடன் சேர்ந்து பிற்போக்கான பலனையே தருவார். ஆனால், அவர்கள் மீது குருவின் பார்வை விழுவதால் கெடுபலன்கள் தாக்கம் இருக்காது. மேலும் ஜூன் 20ல், ராகு இடம்மாறி 11-ம் இடமான கன்னிக்கு செல்கிறார். அங்கு சென்ற பின் நன்மைகள் தருவார். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக  உறுதுணையாக இருப்பர்.  இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 6-ம் இடத்தில் இருப்பது உங்களுக்கு சிறப்பானது.  அவரால் பொன்னும் பொருளும் தாராளமாக  கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். ஜூன் மாதம் 20-ந் தேதி அவர் இடமாறி மீனத்திற்கு  வருவார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு  அவரால் சில தொல்லைகள் வரலாம். உடல்நலம் லேசாகப் பாதிக்கப்படலாம். மேற்கண்ட நிலையை பார்க்கும்போது ஆண்டின் தொடக்கத்தில் கேதுவாலும், பிற்பகுதியில் குரு  மற்றும் ராகுவாலும் நன்மை நடக்கும். அந்த வகையில் பொருளாதார நிலைமை தொடர்ந்து சிறப்பாகவே இருக்கும். உங்களின் முயற்சி வெற்றி அடையும். மதிப்பு, மரியாதை ஆண்டின் முற்பகுதியில்  சுமாராகவே இருக்கும். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும். ஆனால், ஜூன் மாதம் முதல்  செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தம்பதியினரிடையே அன்பு  நீடிக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் ஜூன் மாதம் முதல் தடையின்றி நடக்கும். புதிய வீடு வாங்கலாம்.

தொழில், வியாபாரம்: அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். அரசின் உதவி ஜூனுக்கு பிறகு கிடைக்கும். புதிய தொழிலை தவிர்க்கவும். பணவிஷயத்தில் எந்த கஷ்டமும் வராது. அதே நேரம் சில விரயங்கள் வரலாம்.

பணியாளர்கள்: சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. எதிர்பார்த்த உயர் பதவி, ஜூன் மாதத்திற்குப் பிறகு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கப் பெறலாம். வேலையின்றி இருப்பவர்கள் சற்று முயற்சி செய்தால் வேலை கிடைக்கும். பாதுகாப்பு துறையில் இருப்பவர்கள் மேம்பாடு காண்பர்.

கலைஞர்கள்: அதிகபட்சமாக சான்ஸ் கிடைக்காவிட்டாலும், இருப்பதைக் கொண்டு சாதித்து விடலாம். பணவரவு சரளமாக இருக்கும்.

பெண்கள்: உங்களுக்கு சேர வேண்டிய பழைய பாக்கி கிடைக்கும். இரவல் அல்லது காணாமல் போன முக்கிய பொருள் திரும்ப வந்து விட வாய்ப்புண்டு. புதிய நகை வாங்கலாம். உங்கள்  பெயரில், கணவர் சொத்து  வாங்கிக் கொடுக்க வாய்ப்புண்டு. திருமணமாகாதவர்களுக்கு ஜூனுக்குப் பிறகு நிச்சயமாகும்.

மாணவர்கள்: நன்றாகப் படிப்பீர்கள். ஜூன் வரை கவனச்சிதறல் கூடாது. இந்த காலகட்டத்தில் தான் தேர்வுகள் நடக்கும் என்பதால், நண்பர்களுடன் அரட்டை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைத்  தவிர்க்கவும்.

விவசாயிகள்: மகசூல் நன்றாக இருக்கும். நவீன விவசாயக் கருவிகள் வாங்குவீர்கள். புதிய நிலம் வாங்கும் போது பத்திரங்களைக் கவனமாகப் படிக்கவும்.

பரிகாரம்:நரசிம்மர் வழிபாட்டால் நல்லது நடக்கும். தொடர்ந்து சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் திருநள்ளாறு, தேனி குச்சனூர், மதுரை திருவாதவூர் ஆகிய ஏதாவது ஒரு தலத்திற்கு சென்று வரலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஞானிகள், மடங்களுக்கு காணிக்கை கொடுங்கள்.

பரிகாரப் பாடல்:
பள்ளியி லோதி வந்ததன் சிறுவன்
வாயிலோர் ஆயிர நாமம்,
ஒள்ளிய வாகிப் போதவாங் கதனுக்கு
ஒன்றுமோர் பொறுப்பில னாகி,
பிள்ளையைச் சீறி வெகுண்டுதூண் புடைப்பப்
பிறையெயிற்று அனல்விழிப் பேழ்வாய்,
தெள்ளிய சிங்க மாகிய தேவைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே

2014 துலாம்: சிகரம் தொடலாம் விதையாய் எழலாம்

Source: www.dinamalar.com


 
பணிகளை சுதந்திரமாக செய்யும் விரும்பும்  துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசியின் சின்னம் தராசு. உங்கள்  மனமும் நியாயத்தின் பக்கமே நிற்கும். உங்கள் ராசி நாயகன் சுக்கிரன், தனது நட்பு வீடான மகரத்தில் இருக்க புத்தாண்டு மலர்கிறது. இதனால், கடந்த ஆண்டை விட அவர் மூலம் இந்த ஆண்டு நன்மைகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. செல்வாக்கு மிகுதியும். உறவினர்கள் வகையில் அனுகூலங்களும் நிறைந்திருக்கும்.ஏழரைச் சனியால் விழுந்தாலும் விதை போல் முளைத்தெழுந்து சிகரம் தொடுவீர்கள்.  கடந்த ஆண்டு பிற்பகுதியில் குருபகவான்  உங்கள் ராசிக்கு 9-ம் இடமான மிதுனத்திற்கு வந்தார். அங்கு அவர் மகிழ்ச்சியை தந்திருப்பார். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க உறுதுணையாக இருப்பார். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி இருக்கும். அதே வேளையில் குருபகவான் தற்போது வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் அவரால்  நற்பலன்கள் முழுமையாக கிடைக்காது. அவர் மார்ச் 12ல், வக்கிர நிவர்த்தி அடைந்து முன்னேற்றத்தை தருவார். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. ஜூன் மாதம் 12-ந் தேதி குருபகவான் இடம் பெயர்ந்து 10-ம் இடமான  கடகத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல  முடியாது. அங்கு அவர் பொருள் விரயத்தையும், இழப்பையும் தரலாம். மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குருபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமையும். அதன் மூலம் உங்களது ஆற்றல் மேம்படும். மந்த நிலை மறைந்து சுறுசுறுப்பு ஏற்படும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.சனிபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார். அவரால் உடல் உபாதைகள் வரலாம். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு உருவாகலாம். வெளியூர் வாசம் ஏற்படும். இந்த ஆண்டும், அவர் அதே இடத்தில்தான் இருப்பார். அதைக்கண்டு அஞ்ச வேண்டாம். மற்ற கிரகங்களால் நன்மை கிடைக்கும். சனிபகவான் தான் நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த வகையில் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் பொருளாதார வளத்தைக் காணலாம். எடுத்த காரியம் சிறப்படையும். தொழில் நல்ல முன்னேற்றம்  காணலாம். மேலும் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை சனிபகவான் வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே. மேலும் அப்போது அவரால் நன்மை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.நிழல் கிரகமான ராகு, தற்போது சனிபகவானோடு இணைந்து உங்கள் ராசியில் இருக்கிறார். அவர் உடல் உபாதையையும், உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பையும் தரலாம். ஆனால், அவர்கள் மீது குருபகவானின் பார்வை விழுவதால் அவர்கள் கெடு பலனைத் தரமாட்டார்கள். ஜூன்20 அன்று ராகு 12-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அங்கு அவர் வெளியூர் பயணத்தையும். எதிரிகளால் இடையூறையும் ஏற்படுத்தலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 7-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். அவரால்  அலைச்சல், மனவேதனையும் வரலாம். மனைவி வகையில் தொல்லை வரலாம். ஜூன்20 அன்று, கேது மீனத்திற்கு சென்று நன்மை தருவார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் பொதுவாக, இந்த ஆண்டு நாம் ஏற்கனவே சொன்னபடி நன்மைகள் அதிகரிக்கும். பொருளாதார வளம் பெருகும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். உங்கள் செல்வாக்கு சிறப்பாகவே இருக்கும். ஆனால், ஜூன் மாதத்திற்கு பிறகு வீண்  விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.  வீட்டுக்குத் தேவையான அனைத்து வசதி களும் கிடைக்கும். தம்பதியினர் இடையே  ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவி கரமாக இருப்பர். மனைவி வகையில் சிற்சில ஊடல்கள் வரலாம். ஆனால், ஜூன் மாதத்திற்கு பிறகு அந்த மனக்கசப்பும் மறையும். அன்யோன்யம் பெருகும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் ஜூன் மாதத்திற்குள் கைகூடும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரம்: தொழிலதிபர்களும், வியாபாரிகளும் சிறப்பான நிலையை அடைவர். அதிக  வருமானத்தை காணலாம். இது ஏழரை சனி காலம் என்பதால், எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு  வகையில் எதிர்பார்த்த அனுகூலம் ஜூன்  மாதத்திற்குள் கிடைக்கும். கடுமையான போட்டி இருக்கத்தான் செய்யும். சற்று கவனமும்,  பொறுமையும், போட்டியாளர்களுக்கு தெரியாமல் அவர்களை எதிர்கொள்ளும் வேலைகளைச் சரிவரச் செய்தால், பாதிப்பு இல்லாமல் செய்யலாம்.

பணியாளர்கள்: பணியாளர்கள் தற்போது வளர்முகமாகவே உள்ளனர். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். வேண்டிய பதவி,  சலுகைகளை ஜூன் மாதத்திற்குள் கேட்டுப்  பெறுங்கள். அதே போல் வேலை இன்றி இருப்பவர்களுக்கும் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஜூன் மாதத்திற்கு பிறகு வேலையில் பளு அதிகாரிக்கலாம். சிலர் இடமாற்றம் காண்பீர்கள். பாதுகாப்பு மற்றும் காவல் துறையில் இருப்பவர்கள் இந்த ஆண்டு  இறுதியில் சிறப்பான முன்னேற்றத்தை காண்பர்.

கலைஞர்கள்: வசதியுடன் வாழ்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வரும்.

பெண்கள்: வீட்டுச்செலவுக்குரிய பணம் ஜூன் வரை தடையின்றி கிடைக்கும். அதையடுத்த காலத்தில் ஆரம்ப காலத்தின் அளவுக்கு இராது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பார்களே! அதுபோல், இப்போது சேமிக்கும் பணம் பின்னால் பயன்படும். திருமணமாகாத பெண்களுக்கு வருட ஆரம்பத்தில் நிச்சயமாக வாய்ப்புண்டு.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் சிறப்பை காணலாம். ஆனால், அடுத்த ஆண்டு சற்று சிரத்தையுடன் படிக்க வேண்டியதிருக்கும். அதே நேரம் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலனை குருவின் பார்வை மூலம் பெறலாம்.

விவசாயிகள்:விவசாயம்சிறப்படையும். அக்டோபருக்கு பிறகு நிலம், வீட்டு மனை வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.

பரிகாரம்:சனிக்கிழமைகளில், சனிபகவானுக்கு பரிகாரம்  செய்வதுடன் பெருமாள் கோயிலுக்குச் சென்று  வாருங்கள். வெள்ளிக்கிழமைகளில், லட்சுமி தாயாரை வழிபடுங்கள். ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். ஊனமுற்றவர்கள், ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வியாழக்கிழமைகளில், தட்சிணா மூர்த்தியை வழிபட்டு வாருங்கள். காக்கைக்கு  அன்னமிட்டு சாப்பிடுங்கள்.

பரிகாரப் பாடல்:
திருமகளே திருப்பாற்கடல்
ஊடன்று தேவர் தொழ
வருமகளே உலகு எல்லாமும்
என்றென்றும் வாழ வைக்கும்
ஒருமகளே! நெடுமால் உரத்தே
உற்று உரம் பெரிது
தருமகளே தமியேன் தலைமீது
நின்தாளை வையே.

2014 கன்னி: சக்கை போடு போடுங்க! இனிமே சூப்பர் தானுங்க!

Source: www.dinamalar.com


 
அனைவரிடமும் பண்புடன் நடந்து கொள்ளும் கன்னிராசி அன்பர்களே! 

புதனை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் வாக்கு வன்மையால் பிறரைக் கவருவீர்கள்.  புத்திசாலித்தனமாக பேசுவீர்கள். கடந்த ஆண்டு  நீங்கள் எண்ணற்ற இன்னலுக்கு ஆளாகி  இருப்பீர்கள். இது ஏழரை சனி காலம் என்பதால், உங்கள் கஷ்டம் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இருந்திருப்பீர்கள். ஆனால் இந்த ஆண்டு பிற்போக்கான நிலை மாறி வாழ்வின் எல்லா நிலை களிலும் நற்பலனைப் பெற்று மகிழ்வீர்கள்.  உங்கள் ஆட்சி நாயகன் புதன் நட்பு வீடான  தனுசுவில் சாதக நிலையில் இருக்க, இந்த புதிய ஆண்டு பிறக்கிறது. இதனால் பொருளாதார வளம் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடந்த ஆண்டு சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமான துலாமில் இருக்கிறார். அவரால் குடும்பத்தில் பிரச்னையை சந்தித்து இருப்பீர்கள். பொருள் களவு கொடுக்க நேரிட்டிருக்கலாம்.  இந்த ஆண்டும் சனிபகவான் அதே இடத்தில் தான் இருக்கிறார். இருந்தாலும், சாதகமற்ற பலனை தருவாரோ என்று அஞ்ச வேண்டாம். சனி  பகவானின் 10-ம்இடத்துப் பார்வை மூலம் நற்பலன் மேலோங்கும். குறிப்பாக பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி  நிலைத்திருக்கும். உங்களின் வளர்ச்சிக்கு பெண்கள் உறுதுணையாக இருப்பர்.  குரு பகவான் கடந்த ஆண்டு மிதுன ராசியில்  சஞ்சரித்த காலத்தில், பொருள் நஷ்டம், மன சஞ்சலத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இந்த ஆண்டு தொடக்கத்திலும் அவர் அதே இடத்தில் இருக்கிறார் என்றாலும், மார்ச் வரை வக்கிர நிலையில்  இருப்பதால் கெடுபலன் உண்டாகாது. குருவின் 5-ம் இடத்துப் பார்வையால் நன்மை அதிகரிக்கும். ஆற்றல் மேம்படும். பண வரவு சீராகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பகைவர்களின் மறைமுக சூழ்ச்சியை  முறியடிப்பீர்கள்.  ஜூன் 12ல் குருபகவான் இடம் பெயர்ந்து கடக ராசிக்கு செல்கிறார். அவரால் நன்மை உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். குருவின் 5, 7 , 9-ம் இடத்துப் பார்வைகளால் நற்பலன்  உண்டாகும். குடும்பத்தில் குதூகலத்தை  காண்பீர்கள். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் அதிர்ஷ்ட வசமாக பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை உண்டாகும். 9-ம் இடத்துப்  பார்வையால் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.  ஆடம்பர வசதி மேலோங்கும்.  நிழல் கிரகமான ராகு  தற்போது சனியோடு இணைந்து துலாமில்  இருக்கிறார். இதனால்,  அவரால் நன்மை தர முடியாது. ஆனால் அவர் மீது குருவின் பார்வை விழுவதால்  கெடுபலனைத் தர மாட்டார்கள். ஜூன்20ல் ராகு உங்கள் ஜென்ம ராசியான கன்னிக்கு வருகிறார். அதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இதனால் உடல்நலக்குறைவு, உறவினர் வகையில் மனக் கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு.  நிழல் கிரகமான கேதுவும் தற்போது 8ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இதனால், உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற தொந்தரவு வரலாம். ஜூன் 20ல் கேது 7-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகி றார். அங்கும் அவரால் நன்மை கிடைக்காது. தேவையற்ற அலைச்சலும், மனவேதனையும் ஏற்படலாம். மனைவியுடன் கருத்துவேறுபாடு உருவாகும். அதேநேரம் குருவின் பார்வை கேது மீது விழுவதால் கெடுபலன் ஓரளவு குறையும்.  முயற்சியில் குறுக்கிடும் தடை அனைத்தும் ஜூன் மாதம் முதல் விலகும். புதிய முயற்சியில் வெற்றி ஏற்படும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து மதிப்பு கூடும். உறவினர் மத்தியில்  செல்வாக்கு உயரும்.  குடும்பத்திற்கு தேவையான வசதி அதிகரிக்கும். தடைபட்டு வந்த சுபநிகழ்ச்சி ஜூன் மாதத்திற்கு பிறகு கைகூடும். புதிய நிலம் வாங்க அக்டோபர் மாதத்திற்குப் பின் வாய்ப்புண்டாகும்.

தொழில் வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைப்பட்டாலும், வருமானத்திற்கு குறைவிருக்காது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சீராக கிடைக்கும். அரசின் வகையில் எதிர்பார்த்த சலுகை ஜூன் முதல் கிடைக்கும். யாரையும் நம்பி முக்கிய ஆவணம், பணம் ஒப்படைப்பது கூடாது. தொழில், வியாபார ரீதியான வெளியூர், வெளிநாட்டுப் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். விரிவாக்கம், புதிய தொழில் முயற்சி ஆகியவற்றை ஜூன் மாதத்திற்குப் பிறகு மேற்கொள்வது நன்மை தரும்.

பணியாளர்கள்: பணியில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். வேலை மீதான வெறுப்புணர்ச்சி ஜூன் முதல் இருக்காது. அதன்பின் உயர்ந்த நிலையை காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். விரும்பிய பணி, இடமாற்றத்தைக் கேட்டுப் பெறுவீர்கள்.

கலைஞர்கள்:  சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். முயற்சியின் பேரில் புதிய வாய்ப்பு கிடைக்கும். மக்கள் மத்தியில் புகழுடன் திகழ்வீர்கள். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

பெண்கள்:  கணவர் வீட்டாரின் ஆதரவு சீராக கிடைக்கும். பிள்ளைகளால் அவ்வப்போது சிரமம் ஏற்பட்டாலும், அவர்களின் வளர்ச்சி கண்டு  சந்தோஷம் காண்பீர்கள்.  உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு.ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

மாணவர்கள்:  இந்த கல்வி ஆண்டில் சற்று முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆனால் அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதலை பின்பற்றி நன்மை காண்பர். கல்வியோடு கலை, விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் உண்டாகும். நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் வளர்ச்சி காண்பீர்கள்.

விவசாயிகள்:  விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடி மூலம் ஆதாயம் காண்பர். நவீன உழவுக்கருவிகள் மூலம் பணியை மேம்படுத்துவர். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு லாபம் கிடைக்கும். கடந்த காலத்தில் இருந்த பணப்பற்றாக்குறை நீங்கும்.

பரிகாரம்:சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர், பெருமாளை வழிபட்டு வாருங்கள். ஜூன் முதல் குரு பகவானுக்கு முல்லை மலர்மாலை சூட்டி அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

பரிகாரப் பாடல்:
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைப்பான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்.

2014 சிம்மம்: பந்தயத்தில் ஜெயிப்பீங்க! வல்லவரா இருப்பீங்க!

Source: www.dinamalar.com


 
ஆர்வமுடன் உழைத்து குறிக்@காளை எட்டிப்பிடிக்கும் சிம்ம ராசி அன்பர்க@ள! 

சூரியனை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் ஆளுமை தன்மை கொண்டவர்களாக இருப்பீர்கள். எந்த துறையில் இருந்தாலும் தனித்துவத்தோடு காணப்படுவீர்கள். சூரியன் நட்பு வீடான தனுசுவில் இருக்கும்போதுதான் ஆங்கில புத்தாண்டு  பிறக்கிறது. அந்த இடத்தில் அவரால் நன்மை தர முடியா விட்டாலும், அவர் மீது குருவின் பார்வை படுவது சிறப்பாகும்.  கடந்த ஆண்டு பல கிரகங்கள் சாதகமாக  இருந்ததால், பல்வேறு நற்பலன்களை பெற்றிருப்பீர்கள். இந்த ஆண்டும் நன்மை தொடர்ந்து கிடைக்கும்.  முக்கிய கிரகமான சனிபகவான் 3-ம் இடமான கன்னி ராசியில் இருக்கிறார். இது சிறப்பான அம்சம். அவர், உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை  பன்மடங்கு மேம்படுத்துவார். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். சனிபகவான் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை வக்கிரம் அடையும் காலத்தில் மட்டும் நன்மை சற்று குறையும். குரு பகவான் தற்போது 11-ம் இடமான மிதுனத்தில் இருக்கிறார். அவரால்  பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படைந்து, புதிய பதவி கிடைக்கும். இந்த ஆண்டின் முற்பகுதியிலும் அவர் அதே இடத்தில் இருந்து நன்மை தருவார். ஜூன் 12ல் குருபகவான் இடம் பெயர்ந்து 12-ம் இடமான கடகத்திற்கு வருகிறார். அங்கு அவரால் நன்மை தர இயலாது. அலைச்சலும், பொருள் விரயமும் தவிர்க்க முடியாது. மனதில் இனம்புரியாத உளைச்சல் உண்டாகும். ஆனால், கடகத்தில் உச்சம் பெறும் குருவின் 5,7,9 பார்வை பலத்தால் ஓரளவு நன்மை உண்டாகும். 5ம் பார்வையால், குழந்தைகளால் நன்மை உண்டாகும். சுப விஷயத்தில் இருந்த தடை நீங்கும். குருவின் 7ம் பார்வையால் கணவன், மனைவி ஒற்றுமை மேலோங் கும். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். குருவின் 9ம் இடத்துப் பார்வையால், பால் பாக்கியம் பெருகும். பிதுர் சொத்தின் மூலம் பெறும் வருமானம் அதிகரிக்கும்.  நிழல் கிரகமான ராகு, சனிபகவானோடு இணைந்து நன்மையளித்துக் கொண்டிருக்கிறார். அவரால் நன்மை ஜூன் 20 வரை தொடர்ந்து நீடிக்கும். அதன்பின், அவர் கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்து வந்து விடுவார். அங்கு அவரால் நன்மை தர இயலாது. பொருதாளார இழப்பும், வீணான பணவிரயமும் ஏற்படுத்தலாம்.  கேது, ஆண்டு தொடக்கத்தில் மேஷத்தில் உள்ளார். அவர் முயற்சிகளில் தோல்வியை ஏற்படுத்தலாம். ஜூன் 20 அன்று கேது மீனத்திற்கு சென்ற பின் அவரால் வந்த தடையேதும் இருக்காது. ஆனால், உடல் நலக்குறைவை ஏற்படுத்த இடமுண்டு.  இந்த ஆண்டில் பெரும்பாலான முக்கிய கிரகங்கள் சாதகமாக இருப்பதால், நன்மை மேலோங்கும். ஆண்டின் பிற்பகுதியில் கிரகங்களின் மாற்றத்தால், வாழ்வில் தடை பல குறுக்கிட்டாலும், விடாமுயற்சியுடன் செயல்பட்டு வல்லவர் என்பதை நிரூபிப்பீர்கள்.  மொத்தத்தில், இந்த ஆண்டு  நினைத்ததை வெற்றிகரமாக நிறைவேற்றி மகிழ்வீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். உறவினர் மத்தியில் அவப்பெயர் மறைந்து செல்வாக்கு உயரும். அக்கம் பக்கத்தினரிடம் கவுரவம் மேலோங்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். ஆனால் அதை ஈடுகட்டும் வகையில் வருமானம் ஒருபக்கம் வந்து கொண்டேயிருக்கும்.

தொழில், வியாபாரம்: 
தொழில், வியாபாரத்தில் விறுவிறுப்பாகச் செயல்பட்டு ஆதாயத்தை அதிகரிக்கச் செய்வர். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். திட்டமிட்டபடி,  விரிவாக்க முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். புதிய தொழில் முயற்சியில் கால் பதித்து சாதனை படைப்பீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பங்குதாரர் களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு கைகொடுக்கும். ஜூன்12க்குப் பிறகு, நன்மைகள் குறையத் தொடங்கும். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்காமல் போகலாம். யாரையும் நம்பி முக்கிய ஆவணம், பணத்தை ஒப்படைப்பது கூடாது.  கேது சாதகமற்ற நிலையில் இருப்பதால் நிர்வாகச் செலவும் அதிகரிக்கும்.

பணியாளர்கள்:  ஆண்டின் தொடக்கத்தில் பணியாளர்கள் நன்மையை எதிர்பார்க்கலாம். மேலதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவி செய்ய காத்திருப்பர். சிலருக்கு பணி, பதவி உயர்வு கிடைக்க யோகமுண்டு. மாற்று வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு பணிச்சுமை அதிகரிக்கும். சகபணியாளர்களால் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

கலைஞர்கள்:  புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். அரசு வகையில் பாராட்டு, விருது வந்து சேரும். குரு பெயர்ச்சிக்குப் பிறகு, எதிலும் நிதானம் தேவைப்படும். கடின முயற்சியால் மட்டுமே புதிய ஒப்பந்தம் பெற வேண்டியதிருக்கும்.

பெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். கன்னிப் பெண்களுக்கு ஜூன் மாதத்திற்குள் சுபநிகழ்ச்சிகளைச் சிறப்பாக நடத்திட அனுகூலம் உண்டு. புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். உறவினர்கள் வருகையும், அவர்களின் ஒத்துழைப்பும் சந்தோஷத்தை அளிக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு உறவினர்கள் மத்தியில் வீண் விரோதம் ஏற்படலாம். எனவே யாரிடமும் அளவாக பேசி உறவை வலுப்படுத்திக் கொள்ளவும்.

மாணவர்கள்: மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு மிகச் சிறப்பானதாக அமையும். விரும்பிய பாடம் கிடைக்கப்பெறுவீர்கள். அடுத்த கல்வி ஆண்டு அக்கறை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். பெற்றோர், ஆசிரியர் வழிகாட்டுதலை ஏற்று நடப்பது நன்மைக்கு வழிவகுக்கும்.

விவசாயிகள்: நல்ல விளைச்சலும், அதற்கேற்ற வருமானமும் இருக்கும். விவசாயப்பணிக்கான பணம் எளிதில் கிடைக்கும். திட்டமிட்டபடி நவீன உழவுக்கருவிகளை வாங்கலாம். வழக்கு விவகாரங்களின் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். ஆண்டின் பிற்பகுதியில் நன்மை குறையத் தொடங்கும்.

பரிகாரம்: அம்பிகைக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஆதரவற்றோருக்கு தானம் அளித்து ஆசி பெற்றால் நன்மை  கிடைக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு நவக்கிரகத்தில்  குருபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். ஏழை  குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உதவி செய்யுங்கள்.

பரிகாரப் பாடல்:
குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்
நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப்பிரான்
ஒரு கூற்றை மெய்யில்
பறித்தேன் குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.

2014 கடகம்: சவாலே சமாளி சாதிக்கப் பலவழி

Source: www.dinamalar.com


 
விடாமுயற்சியுடன் செயலாற்றி வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே!

பிறரை கவரும் தன்மை கொண்ட மதிநுட்பம்  மிக்கவரான நீங்கள், கடந்த ஆண்டு சிரமமான பலனையே சந்தித்திருப்பீர்கள். காரணம், முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதமாக அமைய வில்லை. ஆனால் இந்த ஆண்டு நற்பலன் தரும் விதத்தில் கிரகநிலை ஓரளவு மாறுகிறது.  உங்கள் ராசி நாயகன் சந்திரன், தனது  நட்பு வீடான தனுசுவில் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு பிறக்கிறது. அதனால் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் துணிவுடன் செயலாற்றுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். ஆண்டின் முற்பகுதியைக் காட்டிலும், பிற்பகுதி அதிக முன்னேற்றத்தை தரும் வகையில் அமையும். முக்கிய கிரகங்களில் ஒன்றான குருபகவான் 12-ம் இடத்தில் இருப்பதால், கடந்த காலத்தில்  மனவருத்தத்திற்கு ஆளாகியிருக்கலாம் வீண் அலைச்சலும் ஏற்பட்டிருக்கும். ஜூன் 12ல் குரு கடகத்திற்குப் பெயர்ந்து விடுவதால், இந்த  சிரமம் அனைத்தும் படிப்படியாக குறையத் தொடங்கும்.  கடகத்தில் குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது மூன்று பார்வைகளாலும் நன்மை உண்டாகும். 5-ம் இடத்தின் பார்வையால் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். 7-ம் இடத்துப் பார்வை மூலம் சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். 9-ம் இடத்துப் பார்வையால் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும்.  உறவினர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர்.  சனி பகவான் 4-ம் இடமான துலாமில்  இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் அலைச்சலையும், குடும்பத்தில் பிரச்னையையும் ஏற்படுத்தி வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர்  செல்லும் நிலை உருவாகும். இருந்தாலும்,அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக இருப்பதால், காரிய வெற்றி, பொருளாதார வளம், தொழில் விருத்தியைப் பெறுவீர்கள். சனிபகவான் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. அதனால், கெடுபலன் ஏதும் நடக்காது. நிழல் கிரகமான ராகு தற்போது  சனிபகவானோடு இணைந்து உள்ளார். அதனால் சுமாரான பலனையே இவரும் தருவார். ஆனால் குருபகவானின் பார்வை படுவதால் கெடுபலனின்  தாக்கம் குறையும்.  ஜூன் 20ல் ராகு இடம் பெயர்ந்து 3-ம் இடமான கன்னிக்கு வருகிறார். இதனால், பொருளாதார வளம் மேம்படும். அவர் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். நீண்டநாள் எதிர்பார்ப்பும் நிறைவேறும். இந்த ஆண்டு நீங்கள் எடுத்தகாரியத்தில் தடைகள் குறுக்கிட்டாலும், விடாமுயற்சியால் வெற்றி காணலாம். செலவு அதிகரித்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வருமானமும் ஒருபக்கம் வந்து கொண்டிருக்கும். குறிப்பாக ஜூன் முதல் வருமானத்திற்கு குறைவிருக்காது. எதையும் சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பட்டு வாழ்வில் சாதனை படைக்க முயல்வீர்கள். ஜூலை 16-ந் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் புதிய வீடு மனை, நிலம் வாங்க அனுகூலம் பிறக்கும். குடும்பத்தில் அவ்வப்போது பிரச்னை தலை தூக்கினாலும், விரைவில் தீர்வு உண்டாகும். ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விலகும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம் கவனம் தேவை. வெளியூர் பயணத்தின் போதும்  எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணப் பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க  வேண்டாம்.

தொழில் வியாபாரம்:  தொழிலில் எதிர்வரும்  குறுக்கீடுகளை சமாளித்து முன்னேறுவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர் விருப்பத்தை பூர்த்தி செய்ய முயல்வர். உழைப்புக்கேற்ப ஆதாயம் காண்பீர்கள். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மேற்கொள்வீர்கள். சிலர் வியாபாரத்தையே ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது ஏற்படலாம். ஜூன் முதல் லாபம் படிப்படியாக உயரும்.

பணியாளர்கள்: பணிச்சுமை அதிகரிப்பதால்  சோர்வுக்கு ஆளாவீர்கள். இருந்தாலும், வழக்கமான சம்பள உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின்  குறிப்பறிந்து நடந்து நற்பெயர் பெற முயல்வீர்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஜூன் முதல் பணியில் முன்னேற்றம் காணலாம். சிலருக்கு திடீர் இட,பணி மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. போலீஸ், ராணுவம், பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான பலன் காண்பர்.

கலைஞர்கள்:  புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக சிரமம் எடுக்க வேண்டியதிருக்கும். சக கலைஞர்களுடன் நட்புணர்வுடன் பழகி மகிழ்வீர்கள். வெளியூர், வெளிநாட்டு பயணத்தால் இனிய அனுபவம் காண்பீர்கள்.

பெண்கள்: கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும்,  உடனுக்குடன் விட்டுக்கொடுத்து விடுவீர்கள். உறவினர் மத்தியில் கவுரவம் மேலோங்கும்.  பிள்ளைகள் வழியில் ஏற்படும் ஆடம்பரச் செலவைத் தவிர்க்க முடியாது. ஆடை, ஆபரணம் சேர  வாய்ப்புண்டு.

மாணவர்கள்: மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும். கலை, விளையாட்டுத்துறையிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர். பெற்றோர் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பர். படிப்பை முடித்தவர்களுக்கு, தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்க விடாமுயற்சி தேவைப்படும்.

விவசாயிகள்: மாற்றுப்பயிர் சாகுபடியால் நல்ல விளைச்சல் காண்பர். உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கப் பெறுவர். பழைய கடனில் பெரும் பகுதியை அடைத்து விடுவீர்கள். கால்நடை வளர்ப்பிலும் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.

பரிகாரம்:நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். கொண்டக்கடலை தானம் செய்யலாம். பத்திரகாளி அம்மனையும் வழிபட்டு வாருங்கள். ஆதரவற்றோருக்கு உதவி செய்யுங்கள்.

பரிகாரப் பாடல்:
திருநீறு திருமேனி திகழத் திங்கள் திருமுடியின்
மருவு வுரி அரையின் மின்னக்
கருநீறு தருமேன்மை வீணை புத்தகத் தொடுசின்
முத்திரை அக்க மாலை கைகள்
அருள்நீர மையுற யோகபட்டம் சார ஆல்நிழலின்
மோன முனிவர்க்கு ஞானம்
தருநீர் மெய்க் குருவாகி ஆளும் எந்தை
தட்சிணாமூர்த்தி பிரான் மலர்த்தாள் போற்றி.

2014 மிதுனம்: தகர்க்கலாம் தடைகளை! மடக்கலாம் எதிரிகளை

Source: www.dinamalar.com

  
உயர்ந்த பண்பின் இருப்பிடமாகத் திகழும் மிதுனராசி அன்பர்களே!

புதனை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் எப்போதும் புத்திசாலித்தனத்தோடு நடந்து  கொள்வீர்கள். அறிவு பூர்வமாக பேசுவீர்கள். அவர் தனது நட்பு வீடான தனுசுவில் இருக்க இந்த ஆண்டு மலர்கிறது. அவர் மூலம் இந்த ஆண்டு முயற்சியில் வெற்றி உண்டாகும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். உத்தியோகத்திலும் உயர்வு உண்டாகும். கடந்த ஆண்டு சனிபகவான் உங்கள் ராசிக்கு, 5-ம் இடமான துலாமில் இருந்து பல்வேறு இன்னல்களை தந்திருக்கலாம். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி இருக்கலாம். அடிக்கடி ஒருவித மன உளைச்சலுக்கு கூட ஆளாகி இருக்கலாம். இந்த ஆண்டும் சனிபகவான் அதே ராசியில் இருந்தாலும், மற்ற கிரகங்களின்  தாக்கத்தினால் நன்மை உருவாகும். சனி பகவான் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை வக்கிரம் அடைகிறார். அப்போது அவரால் கெடுபலன் நடக்காது. மாறாக நன்மையே கிடைக்கும். சனிபகவான் திருப்தியற்ற நிலையில் இருந்தாலும், அவரது 7ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளது. இதன் மூலம் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சி மனதில் அதிகரிக்கும். பெண்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  குருபகவான் தற்போது உங்கள்  ராசியில் வக்கிரம் அடைந்த நிலையில் இருக்கிறார். ராசியில் இருக்கும் போது குருபகவான் மனகலக்கத்தை உருவாக்கலாம். ஒருவித மந்த நிலையும் ஏற்படுத்தலாம். ஆனால் மார்ச் 12 வரை அவர் வக்கிர நிலையில் இருப்பதால் கெடுபலனைத் தரமாட்டார். மேலும், குருவின் அனைத்துப் பார்வைகளாலும்நன்மையே கிடைக்கும். 5-ம் இடத்தின் பார்வையால் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார்.  திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். புது மணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம்கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல வளம் சேரும். 7-ம் இடத்துப் பார்வையால் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். செல்வாக்கு மேம்படும். பணியாளர்கள் பணி உயர்வை காண்பர். 9-ம் இடத்துப் பார்வையால் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தம்பதியினர் இடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.  குருபகவான் ஜூன் 12ல் இரண்டாம் இடமான கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன்பின் அவரால் பல நன்மைகள் உண்டாகும். ஆற்றல் மிக்கவராக செயல்படுவீர்கள். தற்போது இருக்கும் மந்த நிலை அடியோடு மாறும். மனதில் தைரியம் பிறக்கும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். எதிரிகளின் சதித்திட்டம் உங்களிடம் எடுபடாது. அவர்களால் ஏற்பட்ட தடைகளையும் தகர்த்து விடுவீர்கள். நிழல் கிரகமான ராகுபகவான் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவானோடு இணைந்து 5-ம் இடமான துலாமில் இருக்கிறார். அவர்களால் குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். ஆனால் குருவின் பார்வை அவர்கள் மீது விழுவதால் கெடுபலன் குறையும். ஜூன் 20ல் ராகு இடம் பெயர்ந்து  கன்னி ராசிக்கு வருகிறார். அங்கு அவரால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது  11-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். அவர் நல்ல பொருளாதார வளத்தையும், ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை ஏற்படுத்துவார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலை வாரி வழங்குவார். ஜூன் 20ல் அவர் 10-ம் இடமான மீன ராசிக்கு செல்கிறார். அங்கு அவரால் நன்மையை எதிர்பார்க்க முடியாது. அங்கு உஷ்ணம், தோல், தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு.  ஆண்டின் முற்பகுதியில் கேதுவாலும், குருவின்  பார்வைகளாலும் நன்மை கிடைக்கும். பிற்பகுதியில் குருவின் பலத்தாலும் நன்மைகளைப் பெறுவீர்கள்.  பொதுவாக இந்த ஆண்டில் குடும்பத்திற்கு தேவையான அனைத்து வசதியும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே மனக்கசப்பு வந்தாலும் நொடிப்பொழுதில் மறையும். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் திட்டமிட்டபடி நிறைவேறும்.

தொழில் வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் குறுக்கிடும் தடைகளை முறியடித்து விற்பனையைப் பெருக்குவீர்கள். சிலர் வங்கி நிதியுதவி பெற்று, விரிவாக்க முயற்சியை மேற்கொள்வர். தொழில் காரணமாக, ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். எதிரிகள் இடையூறு அவ்வப்போது தலைதூக்கினாலும் முறியடித்து விடுவீர்கள். நிர்வாகச் செலவு கட்டுக்கடங்காமல் போகலாம். சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது.

பணியாளர்கள்: பணியில் நல்ல முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு நல்லமுறையில் கிடைக்கும். சலுகைபயன் படிப்படியாக கிடைக்கும். சிலருக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் எளிதாகக் கிடைக்க பெறுவர். சக கலைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அடிக்கடி தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் நிர்பந்தம் உருவாகும்.

பெண்கள்:  குடும்பத் தேவை அனைத்தும் நிறைவேறும். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவர். அக்கம் பக்கத்தினர் விரும்பி நட்பு பாராட்டுவர். கன்னிப்பெண்களுக்கு விரும்பிய மணவாழ்வு அமையும்.

மாணவர்கள்:  இந்த கல்வி ஆண்டில் ஓரளவே படிக்க வாய்ப்புண்டு. முயற்சி எடுத்து படித்தால்  கண்டிப்பாக நற்பலன் கிடைக்கும். அடுத்த கல்வி ஆண்டில் சிறப்பான முன்னேற்றம் காத்திருக்கிறது.

விவசாயிகள்:  உழைப்புக்கேற்ற வருமானத்தை  காணலாம். ஆண்டின் தொடக்கத்தில் மானாவாரி பயிர்கள் மூலமும் பிற்பகுதியில் நெல், கடலை போன்ற பயிர்கள் மூலமும் நல்ல மகசூல் கிடைக்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புதிதாகச் சொத்து வாங்க வாய்ப்பு உருவாகும். வழக்கு  விவகாரத்தில் சாதகமான பலன் கிடைக்க வாய்ப்பில்லை.

பரிகாரம்:சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி  வழிபடுங்கள். ராகு காலத்தில் பைரவருக்கு  தயிர் சாதம் படைத்து வழிபடுங்கள்.  ஆதரவற்றவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள். ஜூன் வரை வியாழனன்று குருபகவானை தரிசனம் செய்யுங்கள்.

பரிகாரப் பாடல்:
கலையாரும் முத்தமிழ்க் கல்வியும்
யோகமும் காசினியில்
நிலையாகிய பெருஞ் செல்வமும்
நீதியும் நீயருள்வாய்
மலை யாசன வடுகேச கங்காள வயிரவனே
தலைமாலை சூழ்புயனே காழி
யாபதுத் தாரணனே.