Saturday, 4 January 2014

2014 KADAGAM கடகம்

Source: www.dailythanthi.com

புனர்பூசம் 4–ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை.
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)
உச்ச குரு  உன்னத  வாழ்விற்கு  வழிகாட்டும்!
தேசமெங்கும் செல்வாக்குப் பெற்று வாசமலராய் வாழும் கடக ராசி நேயர்களே!
ஆசையோடு எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு இப்பொழுது அடியெடுத்து வைக்கிறது. உங்கள் யோசனைகள் வெற்றிபெறும் விதத்தில் உங்களது ராசியிலேயே குருவும் உச்சம் பெறுகிறது. மங்கல மேளம் இல்லத்தில்      முழங்கும்.  மாபெரும் சபைகள் உங்களை அழைக்கும். தங்கமும், வெள்ளியும் தடையின்றி வந்து சேரும்.  
வங்கக் கடல்போல வாய்த்த மனம் பெற்ற உங்களுக்கு ஞானகாரகன் கேதுவிற்குரிய எண் ஆதிக்கத்தில் பிறக்கும் புத்தாண்டில் வருடத் தொடக்கத்தில் விரய ஸ்தானத்தில் குரு வீற்றிருக்கிறார். அதுவும் வக்ர இயக்கத்தில் வளமான பார்வையை வழங்குகிறார். அதே நேரத்தில் 6–ம் இடத்தில் ஆதித்தனும், அம்புலியும், புதனும் சஞ்சரிக்கிறார்கள். இத்தனைக்கும் மத்தியில் பிறக்கும் இந்தப் புத்தாண்டில் உச்ச குருவின் ஆதிக்கத்தால் உன்னத வாழ்வு அமையப் போகிறது.
பொதுவாக நீங்கள் சிந்தித்து செயல்படுவீர்கள். கலா ரசனை மிக்கவர்கள்.  உங்கள் பேச்சு மற்றவர்களை மயக்கும். இருந்தாலும் உங்கள் மீதும், உங்கள் திறமையின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருக்காது. எனவே யாராவது ஒருவரைக் கூட்டணி சேர்த்துக் கொண்டுதான் பிரகாசமான எதிர்       காலத்தை அமைத்துக் கொள்ள         முடியுமென்று நினைப்பீர்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை நீங்கள் முழுமனதோடு செய்ய நினைத்தால் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இல்லையென்றால் அரைகுறையாக செய்து விட்டு அப்படியே வந்துவிடுவீர்கள்.  
இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட உங்களுக்கு சுய ஜாதகத்திலுள்ள கட்டங்களையும், 2014–ம் ஆண்டு புத்தாண்டு கட்டத்தையும், ஒப்பிட்டுப் பார்த்து பலன்களைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சந்திரன், தனாதிபதி சூரியனுடன் இணைந்து 6–ல் சஞ்சரிக்கிறார். அதோடு விரயாதிபதி புதனுமல்லவா சேர்ந்திருக்கிறார். எனவே, பண வரவு திருப்திகரமாக இருந்தாலும் செலவு நடைகள் கூடுதலாகவே இருக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் ஒரு சிலருக்கு வந்து சேரலாம். அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் எதையும் யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது.
அந்நிய தேசத்திற்கு வேலை வாய்ப்பை தேடிச் சென்றவர்கள் அங்கு வேலை கிடைக்காமல் தாய் நாடு திரும்பலாம். 6–க்கு அதிபதி குரு வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால் உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும் என்றாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இயலுமா என்பது சந்தேகம்தான்.
செவ்வாய் ஆதிக்கத்தால் உடன்       பிறப்புகளின் வழியே ஒரு நல்ல வாய்ப்பு தேடி வரும். அரசு வழிச் சலுகைகளில் தாமதம் ஏற்படலாம். ஆரோக்கியப் பாதிப்புகள் அகலும். சுக்ரன் வக்ரம் பெற்று சஞ்சரிப்பதால் பெண் வழிப்     பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பெற்றோர் வழியில் இருந்த மனஸ்தாபங்கள் மாறும். என்ன இருந்தாலும் குருப்பெயர்ச்சி வரை சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
வருடத் தொடக்கத்தில் விநாயகப் பெருமான் வழிபாடும், சனிக்கிழமை தோறும் அனுமன் வழிபாடும்,  பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவதும் நல்லது.
விருச்சிக சனியின் சஞ்சாரம்!
இதுவரை உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டமச் சனியாக வாசம் செய்த சனிபகவான் இந்த வருடம் கடைசியில் 5–ம் இடமான விருச்சிக ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். புத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி புத்திர விருத்தியை ஒருசிலருக்கு உருவாக்குவார்.  பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். சனியின் பார்வை சப்தம ஸ்தானத்தில் பதிவதால் வெளிநாட்டு முயற்சிகளில் ஒரு சிலருக்கு வெற்றி கிடைக்கும். வீடுமாற்றம், வாகன மாற்றம், செய்ய தகுந்த வாய்ப்புகள் வந்து சேரும்.  
குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
குரு உங்கள் ராசிக்கு 6,9–க்கு அதிபதியாகிறார். சனி உங்கள் ராசிக்கு 7, 8–க்கு அதிபதியாகிறார். எனவே, இந்த வக்ர காலத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். இரண்டு கிரகத்திற்கும் ஓரிடத்தின் ஆதிபத்யம் நல்ல இடத்தின் ஆதிபத்யமாக இருக்கிறது. எனவே குடும்பத்தில் சில பிரச்சினைகள் உருவாகி மறையும். கட்டிடங்கள் கட்டி வைத்தும் குடியேற முடியவில்லையே என்ற கவலை ஏற்படும்.
கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு!
இந்தப் புத்தாண்டு உங்களுக்குப் புதிய பாதையை அமைத்துக் கொடுக்கப் போகிறது. உச்சம் பெறும் குருவால் உன்னத வாழ்க்கை அமையும். ஜூன் மாதம் வரை சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். அரசியல் மற்றும் பொது நலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கூட கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், மேலதிகாரிகளின் அனு      கூலமும் கிடைக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன்–மனைவிக்குள் கனிவு கூடும். ஒற்றுமை பலப்படும். ஆன்மிக நாட்டம்அதிகரிக்கும். சனிப்பெயர்ச்சி காலத்தில் கூடுதலாக கவனம் தேவை. சர்ப்ப கிரக வழிபாடு சந்தோஷத்தை நிலையாக வைத்துக் கொள்ள வழிகாட்டும். ராகு–கேது பெயர்ச்சி காலத்தில் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தாய்வழி ஆதரவு கிட்டும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
ராசிநாதன் சந்திரன் என்பதால் திங்கள் தோறும் சாந்த ரூப அம்பிகையை வழிபட்டு வாருங்கள். பிறந்த தேதியின் அடிப்படையில் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வதோடு யோக பலம்பெற்ற நாளில் சிவகங்கை மாவட்டம் இரணியூரிலுள்ள ஆட்கொண்ட நாதர், சிவபுரம் தேவியை வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
நலம்  தரும்  ராகு–கேது  பெயர்ச்சி!
இதுவரை அர்த்தாஷ்டம ராகுவாக சஞ்சரித்தவர் இந்த ஆண்டு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். முன்னேற்றம் தரும் இடமான மூன்றில் ஜூன் 21 முதல் தனது பின்னோக்கிச் செல்லும் பயணத்தை மேற்கொள்ளப் போகிறார். அதே நேரத்தில் 9–ம் இடத்தில் மீன ராசியில் கேது சஞ்சரிக்கப் போகிறார். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றங்கள் கூடும். தொழில் வளர்ச்சிக்கு தொகை வந்து கொண்டேயிருக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். உடன்பிறப்புகள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர்.
இல்லத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடப்பதில் தாமதம் ஏற்படுகிறதே என்று கவலைப்பட்டவர்கள் இனிக் கவலைப்பட தேவையில்லை. கை கொடுத்துதவும் நண்பர்கள் உங்கள் கவலை தீர வழிவகுப்பர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் உருவாகலாம். கேது பலத்தால் தந்தை வழி உறவில் சிறிது விரிசல்கள் ஏற்பட்டு அகலும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்து விட்டுப் புதிய சொத்துக்களை வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கூடுதல் லாபம் தொழிலில் வந்து சேரும். எனவே, ஆடம்பரச் செலவுகளை அதிகம் செய்வீர்கள். ஆபரண சேர்க்கைக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.  
ராகு–கேதுக்கள் முறையாக நற்பலன்களை வழங்க முறையாக நீங்கள் சர்ப்ப சாந்தி பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது. சுய ஜாதகத்தில் ராகு–கேதுக்களின் பலமறிந்து அதற்குரிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வரலாம்.
குதூகலம்  தரும்  குருப்பெயர்ச்சி!
புத்தாண்டில் உங்கள் ராசியில் குரு உச்சம் பெறப்போகிறார். இந்த ஆதிக்கம் ஜூன் 13–ம் தேதி முதல் நிகழவிருக்கிறது. ஜென்ம குருவின் ஆதிக்கமாக இருந்தாலும் கூட 9–ம் இடத்திற்கு அதிபதியான குரு உச்சம் பெறும் பொழுது, பொன், பொருட்கள் வந்து சேரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். அண்ணன் தம்பி பகை மாறும். எப்பொழுதோ கொடுத்த கடன்கள் இப்பொழுது வசூலாகும்.
பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். மதி நுட்பத்தால் மகத்தான காரியங்கள் பலவற்றையும் செய்து சாதனையாளர்களின் விருதுகளைப் பெருமளவு பெறப் போகிறீர்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் விரதமிருந்து குரு தெட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதோடு, அனுகூலம் தரும் நாளில் திசைமாறிய தென்முகக் கடவுளையும் வழிபட்டு வந்தால் தித்திக்கும் விதத்தில் வாழ்க்கைப் பாதை அமையும்.
குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களிலும் பதிவதால் அந்த இடங்களெல்லாம் புனிதமடையப் போகின்றது. குரு பார்க்கக் கோடி நன்மை என்பதால் இனி, கோடி நன்மைகள் கிடைக்கும். வாடிய மனம் இனி மகிழ்ச்சி காணும். தேடிய நற்பலன்களெல்   லாம் இல்லம் தேடி வரும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள்.  
கல்யாண வாய்ப்புகள் கைகூடி வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பிரிந்த தம்பதியர் வந்திணைவர். பிரச்சினைகள் அனைத்தும் நல்ல முடிவிற்கு வரும். வழக்குப் போட்டவர்கள் வாபஸ் பெறுவர். வாரிசுகளுக்கு கூட வெளிநாட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பீர்கள். ஆரோக்கியக் குறைபாடுகள் அகலும். சுறுசுறுப்போடும், விறுவிறுப்போடும் செயல்பட்டு சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வாகனம் புதிதாக வாங்கும் வாய்ப்பு கிட்டும். அங்ஙனம் வாங்கும் சூழ்நிலை அமைந்தவர்கள் அதிர்ஷ்ட எண் ஆதிக்கத்தில் வாங்கினால் அதை எடுத்துச் செல்லும் இடங்களெல்லாம் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலும்.

2014 MITHHUNAM மிதுனம்

Source: www.dailythanthi.com

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)
குருப் பெயர்ச்சிக்குப் பிறகு  குதூகலம்  அதிகரிக்கும்!
ஆற்றல் மிக்கவர்களை பின்னணியாகக் கொண்டு காரியங்களை செய்து முடிக்கும் மிதுன ராசி நேயர்களே!
புத்தாண்டு பிறக்கப் போகிறது. ஆண்டு தொடங்கும் பொழுதே, குரு வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 5, 12–க்கு அதிபதியான சுக்ரனும் வக்ர இயக்கத்தில் இருக்கிறார்.
இதற்கிடையில் உங்கள் ராசிநாதன் புதன் வலிமை இழந்து சூரிய சந்திர சேர்க்கையோடு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இத்தனைக்கும் மத்தியில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு முத்தான பலன்களை குருப்பெயர்ச்சிக்குப் பின்னரே வழங்கும்.
முப்பெரும் கிரகங்களான குரு, ராகு–கேது, சனி ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்து சர்ப்ப சாந்தி பரிகாரத்தை ராகு–கேதுக்களுக்கும், ஒப்பற்ற குருவிற்கு அறுபத்துமூவர் வழிபாட்டையும், வரப்போகும் அர்த்தாஷ்டமச் சனிக்கு அனுமன் வழிபாட்டையும் நீங்கள் முறையாக மேற்கொண்டால் முன்னேற்றத்தின் முதல் படிக்குச் செல்லலாம்.
பொதுவாக நீங்கள் எல்லோரிடமும் இனிமையாக பழகுவீர்கள். இயல்பாகவே சாதுர்யமும், உங்கள் பேச்சில் கலந்திருக்கும். பிறரைப் புகழ்ந்து பேசியே காரியங்களை சாதித்து விடுவீர்கள். வசிய சக்தி மிகுந்த எண் ஆதிக்கமான ‘5’–க்கு உரிய புதன் உங்கள் ராசிநாதனாக இருப்பதால் பஞ்சாயத்துக்களில் மட்டுமல்ல, பழகும் நண்பர்களும் உங்கள் சொல்லிற்கு முக்கியத்துவம் கொடுப்பர்.
உடல் உழைப்பைக் காட்டிலும் சிந்திக்கும் மூளை உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் நீங்கள். பொல்லாதவர்களையும் நல்லவர்களாக மாற்றும் ஆற்றல் உங்களுக்கு உண்டு.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைப் பெற்ற நீங்கள் உங்களுடைய சுய ஜாதகத்திலுள்ள கட்டங்களையும், 2014–ம் ஆண்டு புத்தாண்டு கட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
2014–ம் ஆண்டு கேதுவுக்குரிய ‘7’ எண் ஆதிக்கத்தில் வருவதால் உங்கள் சுய ஜாதகத்தில் கேதுவின் பாதசார பலம் மற்றும் ராசிநாதன் புதன் தனாதிபதி ஆகியவற்றின் பலமறிந்து, பாக்யாதிபதியின் நிலையறிந்து அதற்குரிய ஸ்தலங்களை தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வந்தால் யோகங்கள் அனைத்தும் வந்து சேரும். அந்த சமயத்தில் அர்த்தாஷ்டம ராகுவிற்கு பரிகாரமாக நாக சாந்தியும் செய்வது நல்லது. அப்        பொழுது தான் தடைகளும் அகலும். தனவரவும் பெருகும்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வலிமை இழந்து குரு வீட்டில் பரிவர்த்தனை யோகம் பெற்றிருக்கிறார். எனவே, குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தொழில் வளர்ச்சி சீராக இருக்கும்.  
மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளை சிறப்பாக முடித்துக்கொடுப்பர். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பூமி விற்பனையால் கிடைக்கும் தொகையைக்கொண்டு புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன்கருதியும், கல்யாண வாய்ப்பு, கடல் தாண்டும் முயற்சி கருதியும் தொகை ஒன்றைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும்.
கேதுவின் முழுமையான பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகிற பொழுதே நல்ல மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. அந்நிய தேசத்திலிருந்து அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று வருட தொடக்கத்தில் வழிபட்டு வருவது நல்லது.
6–ம் இடத்தில் அடியெடுத்து வைக்கும் சனி!
இதுவரை உங்கள் ராசிக்கு 5–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் இவ்வருடக் கடைசியில் 6–ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். 8–க்கு அதிபதி 6–ல் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பாராத விதத்தில் சில நல்ல பலன்களும் உங்களுக்கு வந்து சேரப் போகிறது. திடீரென காரியங்கள் கைகூடி திக்குமுக்காட வைக்கும்.
உத்தியோகம், தொழிலில் உன்னத நிலை உருவாகும். பொருளாதார நிலை உயரும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளுக்கு உறவினர்கள் கைகொடுத்து உதவுவர். அரசு பணி எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். கலைத்துறையில் உள்ளவர்கள் கவுரவிக்கப்படுவர். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.   
குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
இந்த வக்ர காலமே உங்களுக்கு  பொற்காலமாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வருங்கால நலன் கருதி தீட்டும் திட்டங்களுக்கு முக்கியப் புள்ளிகள் முன் வந்து உதவுவர்.  குழந்தைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடி வரும். சனியின் வக்ர காலத்தில் ஆரோக்கியம் சீராகும்.  9–ம் இடத்திற்கும் சனி அதிபதி என்பதால் பொன், பொருட்களும் விரயமாகும். உங்களின் அனுசரிப்பே ஆதாயத்தைக் கொடுக்கும்.
மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு!
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் ஆண்டாக அமையப் போகிறது. வருடத் தொடக்கத்தில் உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும். உச்ச குருவின் ஆதிக்கம் வந்த பின்னால் ஜூன் மாதத்திற்கு மேல் சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். உறவைப் பகையாக்கியவர்கள் உங்களை விட்டு விலகுவர். கறவை மாடுகள், காடு, கழனி என்றெல்லாம் வாங்கும் வாய்ப்பு உண்டு. அடிமைத் தொழில் மாறி சுய தொழில் செய்யும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சனிப்பெயர்ச்சிக்குப் பின்னால் பெற்றோர்களையும், தாய்வழி உறவினர்   களையும் அனுசரித்துச்செல்வது நல்லது. அர்த்தாஷ்டமச் சனி ராகுவிற்கு பரிகாரமாக துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சர்ப்ப சாந்தி பரிகாரத்தை யோகபலம் பெற்ற நாளில் செய்வது நல்லது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
ராசிநாதன் புதன் என்பதால் புதன்கிழமை தோறும் விஷ்ணு வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. தாமரைப் பூமாலை சூட்டி சங்கு சக்கரதாரியை வழிபட்டால் சேமிப்பு உயரும். பிறந்த தேதியின் அடிப்படையில் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வதோடு மதுரை மேலூர் அருகிலுள்ள சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வர சகல யோகங்    களையும் வரவழைத்துக் கொள்ள இயலும்.
அர்த்தாஷ்டம ராகுவும், பத்தாமிடத்து கேதுவும்!
பாம்பு கிரகங்கள் என்று வர்ணிக்கப்படும் ராகுவும், கேதுவும் இந்தப் புத்தாண்டில் பெயர்ச்சியாகிறார்கள். உங்கள் ராசியை பொறுத்தவரை ராகு பகவான் அர்த்தாஷ்டம ராகுவாகவும், கேது பகவான் தொழில் ஸ்தான கேதுவாகவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். குடியிருக்கும் வீட்டாலும் பிரச்சினைகள் உருவாகலாம். கடுமையாக முயற்சித்தும் காரியங்கள் முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள்.
இந்த நிகழ்வு ஜூன் 21–ம் தேதி ஏற்படும் ராகு–கேது பெயர்ச்சியின் விளைவால் உருவாகப் போகிறது. இருந்தாலும் ராகுவின் பரிபூரண பார்வை தன ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானம், எதிரிகளின் ஸ்தானத்திலும் பதிவதால் வாங்கிய கடனை திருப்பிக்கொடுக்க வழிபிறக்கும். வருமானப் பெருக்கத்திற்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து அலைமோதும். தொழிலில் லாபம் வந்து கொண்டேயிருக்கும். கேதுவின் பலத்தால் தலைமைப் பொறுப்புகள் தானாக வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும்.  கூட்டுத் தொழிலில் மாற்றங்கள் ஏற்பட வழிபிறக்கும். வாட்டங்கள் அகலவும், வளர்ச்சி கூடவும் சுய ஜாதகத்தில் ராகு–கேதுக்களின் சார பலமறிந்து சர்ப்பசாந்திகளை முறைப்படி செய்தால் சந்தோஷங்கள் வந்து சேரும்.
உச்ச  குருவின்  சஞ்சாரம்!
புத்தாண்டில் குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. எல்லா குருப்பெயர்ச்சியையும் விட இந்த ஆண்டு பெயர்ச்சியாகும் குரு முக்கியத்துவம் பெறுகிறது. காரணம் 12 ஆண்டுக்கு ஒருமுறை கடகத்தில் உச்சம் பெறும் குரு இப்பொழுது கடகத்தில் நுழைகிறார். எனவே, ஆன்மிகமும், அறிவியலும் தழைத்தோங்கப் போகும் இந்த நேரத்தில் உங்கள் ராசியைப் பொறுத்தவரை 7, 10–க்கு அதிபதியான குரு, தன ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.
எனவே, பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். தினம் ஒரு நல்ல தகவல் வந்து கொண்டேயிருக்கும். மனம்போனபடி எல்லாம் சென்ற உங்கள் குழந்தைகள் இனி உங்கள் சொல்லிற்கு மதிப்புக்    கொடுப்பர். தனவரவு  தாராளமாக வந்து சேரும். தக்க விதத்தில் தொழில் வளம் கைகூடும். மண முறிவு ஏற்பட்டு பிரிய நினைத்த தம்பதியர் கூட மறுபடியும் சேர்ந்து வாழ முன்வருவர்.
கடன் சுமை தீரும். கவலைகள் ஓயும். உடல் நலம் சீராகும். மனதில் உறுதி ஏற்படும். மண், பூமி சேர்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மாடு, கன்று வாங்குவதில் கூட ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. பாயில் படுத்தவர்கள் பம்பரமாய் பணிபுரிவர். நோயில் இருப்பவர்கள் நோய் நீங்கி குணம் பெறுவர்.
உறவினர் பகை மாறும். தொழிலில் எதிர்பார்த்த     படியே லாபம் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அற்புத பதவி வந்து சேரும். இக்காலத்தில் குரு தெட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். திசைமாறிய தென்முகக் கடவுள் எங்கெல்லாம் இருக்கிறதோ அவற்றை கண்டறிந்து வாய்ப்பிருக்கும் பொழுது வழிபட்டு வருவது நல்லது.

2014 RISHABAM ரிஷபம்

Source: www.dailythanthi.com

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம்?1,? 2 பாதங்கள்? வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)
ராகு–கேது மாற்றத்தால் நல்ல மாற்றம் வந்து சேரும்!
தான் மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களும் ஆனந்தமாக வாழ விரும்பும் ரிஷப ராசி நேயர்களே!
புத்தாண்டு பிறக்கப் போகிறது. பொன்னான காலம் வரப் போகிறது. ஞானகாரகன் கேதுவின் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. வானளாவிய புகழை வழங்கும் சனி உச்சம் பெற்றிருக்கிறார். வக்ர கதியில் வியாழனும், சுக்ரனும் சஞ்சரிக்கிறார்கள்.
தக்க விதத்தில் பலன் கூறும் தனாதிபதி புதனோ வலிமையிழந்து அஷ்டமத்தில் மறைந்திருக்கிறார். ராகு–கேதுக்கள் 6–லும், 12–லும் இருக்கிறார்கள். இத்தனைக்கும் மத்தியில் இந்தப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களை உங்களுக்கு வழங்கப் போகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
பொதுவாகவே நீங்கள் மற்றவர்களை உற்சாகமூட்டப் பிறந்தவர்கள். ராசிநாதன் சுக்ரனாக இருப்பதால் வசீகர சக்தி உங்களுக்கு உண்டு. உங்களிடம் ஒரு செயலை ஒப்படைத்தால் எப்பாடுபட்டாவது முடித்து விடுவீர்கள். உங்கள் பேச்சில் நகைச்சுவையும் நிறைந்திருக்கும். இடையிடையே பகைச் சுவையும் கலந்திருக்கும். வீரத்தைக் காட்டிலும் விவேகம் கூடுதலாகவே உங்களிடம் குடியிருக்கும்.
இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட உங்களுக்கு சுயஜாதகத்தில் உள்ள கட்டங்களையும், 2014–ம் ஆண்டு புத்தாண்டு கட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.  
2014–ம்  ஆண்டு  கேதுவிற்குரிய ‘7’ எண் ஆதிக்கத்தில் வருவதால் உங்கள் சுய ஜாதகத்தில் கேதுவின் பாதசார பலம் மற்றும் ராசிநாதன் சுக்ரன், தனாதிபதி புதன் ஆகியவற்றின் பலமறிந்து பாக்யாதிபதி அம்சத்தி லிருக்கும் நிலையறிந்து அதற்குரிய ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து  யோக பலம்பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தேகநலம் சிறப்பாக இருக்கும். உங்கள் பெயர் எண் ஆதிக்கமும், தொழில் நிலையத்தின் பெயரும் அதிர்ஷ்ட எண் ஆதிக்கத்தில் நீங்கள் அமைத்துக் கொண்டால் வெற்றி தேவதை வீடுதேடி வந்து வரம் தரும்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் ‘வக்ரம்’ பெற்று சஞ்சரிக்கிறார். சுக்ரன் 6–ம் இடத்திற்கு அதிபதியாவதால் வாங்கல்–கொடுக்கல்களில் பற்றாக்குறை ஏற்படும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் உங்களுக்கு விரிவடைந்திருப்பதால் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
தனாதிபதி புதனும், அஷ்டம லாபாதிபதியான குருவும் பரிவர்த்தனை பெற்று வருடம் தொடங்குவதால் காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடி      வரும். மதிப்பையும், மரியாதையையும் தக்க வைத்துக் கொள்வீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சிலருக்கு கூடுதல் பணம் தேவைப்படலாம்.
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அனுசரிப்பு திருப்திகரமாகயிருக்கும். புத–ஆதித்ய யோகம் செயல்படுவதால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். ராகு பலத்தால் அரசு வேலைக்காக விண்ணப்பித்தவர்கள் ஆச்சரியப்படும் விதத்தில் அது கிடைக்கலாம்.
விரய ஸ்தானத்தில் கேது வீற்றிருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று, வாங்கல்–கொடுக்கல்களில் ஒழுங்கு செய்து கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். நேர்மையான வழியில் செல்லும் உங்களுக்கு நிகழ்காலத்தேவைகள் பூர்த்தியாவதில் தாமதம் ஏற்பட்டாலும், நண்பர்களின் ஒத்துழைப்புடன் கடைசி நேரத்தில் காரியங்கள் கூடி  விடும்.
எப்படி இருக்கும் சனிப்பெயர்ச்சி?
இதுவரை உங்கள் ராசிக்கு 6–ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் உச்சம் பெற்று விளங்கினார். இந்த ஆண்டு கடைசியில் சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. 7–ம் இடத்தில் சஞ்சரித்து கண்டக சனி என்ற பெயரோடு உங்கள் ராசியில் பார்வை பதிக்கப் போகிறது.
உங்கள் ராசியைப் பொறுத்த வரை சனி நற்பலன்களைக் கொடுப்பவர். எனவே  பயப்படத் தேவையில்லை. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வீட்டுப் பிரச்சினைகளை மற்றவர்களிடம் எடுத்துரைக்க வேண்டாம். நாட்டுப் பற்று மிக்க அரசியல்    வாதிகளுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். கூட்டு முயற்சியில் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்தவர் விலகலாம். குடியிருக்கும் வீட்டாலும், உடன் இருப்பவராலும் பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்ள இயலும்.
குரு மற்றும் சனியின் வக்ர காலங்கள்!
குருவின் வக்ர காலம் உங்களுக்கு கொடுக்கல்–வாங்கல்களில் திருப்தியைக் கொடுக்கும். நண்பர்கள் நல்ல காரியம் செய்ய உறுதுணை புரிவர். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். மக்கட் செல்வங்களால் உதிரி வருமானங்கள் கிடைக்கும். அதே நேரத்தில் சனியின் வக்ர காலத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. குடும்பச் சுமை கூடும். பொறுமை அவசியம்.
ரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு!
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு பூமியோகம் முதல் புனித யாத்திரைகளை அமைத்துக் கொடுக்கும் யோகம் வரை நல்ல வாய்ப்புகளை வழங்கப்போகிறது. வருடத் தொடக்கத்திலேயே வரவு திருப்திகரமாக இருக்கும். கணவன்–மனைவிக்குள் இருந்த பிணக்குகள் அகலும்.
குருப் பெயர்ச்சிக்குப் பின்னால் குழந்தைகளின் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். சிலருக்கு வேலையும் கிடைக்கும், விரும்பியபடியே மணமாலை சூடிக்கொள்ளும் வாய்ப்பும்  உருவாகும். ராகு–கேது பெயர்ச்சிக்குப் பின்னால் தொழில் தொடங்கும் முயற்சிக்கு பச்சைக்கொடி காட்டுவர். ஆபரண சேர்க்கைக்கு உண்டு. சனிப்       பெயர்ச்சிக்குப் பின்னால் கவனம் தேவை. சர்ப்ப சாந்தியும், அனுமன் வழிபாடும் சஞ்சலம் தீர்க்கும்.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
ராசிநாதன் சுக்ரன் என்பதால் வெள்ளிக்கிழமை தோறும் உள்ளூர் கோவில்களுக்குச் சென்று அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பிறந்த தேதியின் அடிப்படையில் சிறப்பு வழிபாடும், யோகபலம் பெற்ற நாளில் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்     பட்டியிலுள்ள நெய் நந்தீஸ்வரரை வழிபாடும் செய்தால் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும்.
நலம்  தரும்  ராகு–கேது பெயர்ச்சி!
இதுவரை துலாம் ராசியில் ராகுவும், விரய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரித்து வந்தார்கள். இந்த புத்தாண்டில் ஜூன் 21–ம் தேதி பின்னோக்கிச்சென்று கன்னி ராசியில் ராகுவும், மீன ராசியில் கேதுவுமாக சஞ்சரிக்கப் போகிறார்கள். பஞ்சம ஸ்தான ராகு உங்கள் பணத்தேவைகளை பூர்த்தியாக்கும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சினைகள், சகோதரர்கள் வழி கருத்துவேறுபாடுகள் தீரும். இல்லம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு கிடைக்கும்.
கேதுவின் பலத்தால் ஆடம்பர சாதனங்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வு மற்றும் எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். உங்களோடு பணிபுரிந்து கொண்டே உங்களுக்கு கெடுதல் செய்தவர்கள் விலகிச்செல்வர். மங்கலகரமான புத்தாண்டில் இந்த ராகு–கேதுப் பெயர்ச்சி மனக்கசப்புகளை மாற்றும். பணப்புழக்கத்தை அதிகரிக்க வைக்கும்.
இருப்பினும் ராகு–கேதுக்கள் முறையான நற்பலன்களை முன்னேற்றம் தரும் விதத்தில் வழங்க சர்ப்ப சாந்தி பரிகாரங்களை நீங்கள் செய்து கொள்வது நல்லது. சுய ஜாதகத்தில் ராகு–கேதுக்களின் பலமறிந்து அதற்குரிய ஸ்தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று பரிகாரம் செய்வதே நல்லது.
சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு!
புத்தாண்டில் குருப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. குருவின் ஆதிக்கம் உங்கள் ராசிநாதனுக்குப் பகைவனாக இருப்பதால் அது பார்க்குமிடத்தைப் பலன்தரும் இடமாக மாற்றிக்காட்டி விடும். அந்த அடிப்    படையில் ஜூன் 13–ந் தேதி நிகழவிருக்கும் பெயர்ச்சியால் 7, 9, 11 ஆகிய மூன்று இடங்களும் புனிதமடைகின்றது. எனவே திருமண வாய்ப்புகள் கைகூடவில்லை என்று ஏங்கியவர்களுக்கு மறுமலர்ச்சி ஏற்படும் விதத்தில் மனதிற்கினிய தகவல்கள் வந்து சேரும். திருமணம் முடிந்து ஒற்றுமையில்லாமல் பிரிந்து இருந்த தம்பதியர்கள் மீண்டும் இணைந்து மகிழ்ச்சிக் கடலில் மிதப்பீர்கள்.
அந்நிய தேசத்திலிருந்து வரும் தகவல் அனுகூலம் தரும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். கண்ணியமிக்க மனிதர்கள் உங்கள் காரிய வெற்றிக்கும், கவலை தீருவதற்கும் உறுதுணையாக இருப்பார்கள். பெற்றோர் வழிப் பிரச்சினைகள் பெரிதாகி விட்டதே என்று கவலைப்பட்டவர்கள் உற்றார், உறவினர்களும், உடன் பங்காளிகளும் உறுதுணையில்லாமல் போய்விட்டார்களே என்று நினைத்தவர்களும் மட்டற்ற மகிழ்ச்சி காணும் விதம் நல்ல மாற்றங்கள் வந்து சேரப் போகிறது. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும்.
பெண் குழந்தைகளின் சுபச் சடங்குகள், பூப்புனித நீராட்டு விழாக்கள் போன்றவற்றை நடத்தி மகிழ்வீர்கள். குற்றாலம், கொடைக்கானல் என்று உல்லாசப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உருவாகும். ஒரு காலத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகாமல் தடுமாறிய நீங்கள் இப்பொழுது பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா? என்று யோசிக்கப் போகிறீர்கள். வாகனங்கள் வாங்கும்போது அதிர்ஷ்ட எண்களின் ஆதிக்கத்தில் வாங்கினால் அதை ஓட்டிச் செல்லும் இடங்களில் உன்னத பலன் கிடைக்கும். முறையான குரு வழிபாடு முன்னேற்றம் வழங்கும்.

2014 MESHAM மேஷம்

Source: www.dailythanthi.com

அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)
ஏப்ரல் மாதத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்!
மகத்தான சாதனை புரிந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் மேஷ ராசி நேயர்களே!
நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு பிறக்கப் போகி றது. கேதுவின் ஆதிக்கத்தில் பிறக் கும் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு கீர்த்தியையும், செல்வத்தையும் அள்ளி வழங்கும் விதத்தில் கிரக நிலைகளைக் கொண்டிருக்கிறது. ஞான    காரகன் கேது உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தன சப்தமாதிபதி சுக்ரனும் வக்ரம் பெற்றிருக்கிறார். 9,12–க்கு அதிபதியான குருவும் வக்ரம் பெற்றிருக்கிறார். உச்ச சனியின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது.
இத்தனைக்கும் மத்தியில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு எண்ணற்ற மாற்றங்களை உங்களுக்கு கொடுக்கப் போகிறது.
திசாபுத்தியும், கிரகங்களும் பலம்பெற்றிருந்தால் உங்களுக்குப் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்கபலமாக இருப்பவர்கள் உதவி செய்வார்கள். இணைந்து வரும் எதிர்ப்புகள் எல்லையை விட்டு ஓடும். மணந்து கொண்ட வாழ்க்கைத் துணையால் மறுமலர்ச்சி உண்டாகும். துணிந்து நீங்கள் செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள்ளலாம். இல்லையேல் பணிந்து வணங்கி பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.
2014–ம் ஆண்டு கேதுவிற்குரிய ‘7’ எண் ஆதிக்கத்தில் அமைவதால், உங்கள் சுய ஜாதகத்தில் கேதுவின் பலம் மற்றும் ராசிநாதன் செவ்வாய், தனாதிபதி சுக்ரனின் பலம் ஆகியவற்றை எடைபோட்டுப் பார்த்து சுயஜாதகத்தில் பாக்கியாதிபதி நிலையறிந்து அதற்குரிய ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தேக நலம் சிறப்பாக இருக்கும். செல்வ வளமும் அதிகரிக்கும்.
1.1.2014 முதல் 12.6.2014 வரை
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசியிலேயே ஞானகாரகன் கேது சஞ்சரிக்கிறார். சப்தம ஸ்தானத்தில் ராகு சனியுடன் கூடிச் சஞ்சரிக்கிறார். ராசிநாதன் செவ்வாய் 6–ல் சஞ்சரித்து விபரீத ராஜயோகத்தை உண்டாக்குகிறார். தனாதிபதி சுக்ரனும், விரயாதிபதி குருவும் வக்ரம் பெற்றிருக்கிறார்கள்.
எனவே, இக்காலத்தில் பணம் வந்த மறுநிமிடமே செலவாகலாம். பக்கபலமாக இருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குடும்பத்தினர்களின் குறைகளை முழுமையாகத் தீர்த்து வைக்க முடியவில்லையே என்று கவலைப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்பட்டு அகலும். ஜென்ம கேதுவின் ஆதிக்கத்தால் பயணங்கள் அதிகரிக்கும், அலைச்சல் கூடும். வேலைப்பளு அதிகரிக்கும்.
ஆரோக்கியம் சீராகவும், ஆதாயம் அதிகரிக்கவும் சனிக்கிழமை தோறும் சனீஸ்வர வழிபாட்டையும், வெள்ளிக் கிழமை தோறும் விநாயகப்பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். ஜென்ம கேதுவின் ஆதிக்கம் இருப்பதால் பிறரை நம்பி காரியங்களை செய்ய இயலாது. எனவே சர்ப்ப சாந்தி பரிகாரத்தை அனுகூலம் வரும் நாளில் யோகத்தை வரவழைத்துத் தரும் ஸ்தலங்களில் செய்து வழிபட்டு வருவது நல்லது.
சந்தோஷம் தருமா? சனிப்பெயர்ச்சி!
இதுவரை ஏழாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் உச்சம் பெற்று விளங்கினார். அதன் பார்வை உங்கள் ராசியில் பதிந்ததால் காரியத்தடைகளும், கவலைகளும் உங்களுக்கு அதிகரித்திருக்கலாம். அந்த நிலை இனி மாறப்போகிறது. இந்த ஆண்டு வருடக் கடைசியில் 15 நாட்களுக்கு முன்னதாகவே சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது. 7–ம் இடத்தில் சஞ்சரித்த சனியைக் காட்டிலும் 8–ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது கொஞ்சமேனும் அவர் நன்மை செய்வார்.
ஆயினும் இட மாற்றம், ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம், வீடு மாற்றம், நாடு மாற்றம், வாகன மாற்றம் என ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி அதன் மூலம் நற்பலன்களை உங்களுக்கு வழங்கலாம். இக்காலத்தில் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வதே நல்லது.  
தொடர்ந்து சனிக்கிழமைதோறும் சனி கவசம் பாடி, சனி பகவானை வழிபடுவது நல்லது. உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சனி பகவான் தொழில் மாற்றங்களைக் கொடுப்பார். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்பட வைப்பார். கூட்டாளிகளால் ஏமாற்றங்களைச் சந்திக்காமலிருக்க அப்போதைக்கப்போது வரும் லாபத்தைப் பிரித்து எடுத்துக் கொள்வது நல்லது.
குரு மற்றும் சனியின் வக்ர காலம்!
குருவின் வக்ர காலத்தில் பாகப் பிரிவினை சுமூகமாக முடியும். பங்காளிப்பகை மாறும். சனியின் வக்ர காலத்தில் தொழிலில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். அயல்நாடு சென்றவர்கள் தாய் நாடு திரும்புவர். புத்திர ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.
மேஷ ராசி பெண்களுக்கு!
மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு வருடத் தொடக்கத்தில் தெய்வ பலம் கூடுதலாக இருக்கும். திடீர் தனலாபங்கள் வந்து சேரும். சனியின் பார்வை ராசியில் பதிவதால் இனிய பலன்கள் உங்களுக்கு ஏற்படுவதில் சில இடையூறுகளை சிலர் விளைவிக்கலாம். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.
கணவன்–மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைச் செல்வம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சனி–செவ்வாய் சேர்க்கைக் காலத்தில் அனுமன் மற்றும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். வருடக்கடைசியில் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வருவதால் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது.
செல்வ வளம் தரும் சிறப்பு வழிபாடு!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் அதற்குரிய முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்வதோடு, செவ்வாய்க்கிழமை தோறும் விரத            மிருப்பது நல்லது. பிறந்த தேதி மற்றும் கூட்டுத்தொகைக்குரிய எண்களின் ஆதிக்க நாளில், யோகபலம் பெற்ற நட்சத்திரமும் கூடும் நேரத்தில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக வைத்தீஸ்வரன் கோவில் சென்று பஞ்சார்ச்சனை செய்து வழிபட்டு வருவது நல்லது.
யோகம் தரும் ராகு–கேது பெயர்ச்சி!
மேஷத்தில் சஞ்சரித்து வந்த கேதுவும், துலாத்தில் சஞ்சரித்து வந்த ராகுவும் தன் வான்வழிப் பயணத்தில் பின்னோக்கிச் சென்று கன்னியில் ராகுவும், மீனத்தில் கேதுவுமாக இருக்கப் போகிறார்கள். இது புத்தாண்டில் ஜூன் 21–ம் தேதி நிகழவிருக்கிறது. 6–ல் ராகு இருந்து, குரு கேந்திரத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் என்பார்கள். அந்த அடிப்படையில் 8 லட்சுமிகளும் உங்கள் இல்லத்தில் வந்து குடியேறி, கொட்டும் பண மழையில் நீங்கள் நனைய இந்த ராகு–கேது பெயர்ச்சி வழிவகுக்கும்.
ராகுவின் பார்வை 4, 8, 12 ஆகிய இடங்களில் பதிகிறது. இந்த ராகு–கேது பெயர்ச்சியின் பலனால் உங்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதில் இருந்த தாமதம் மாறும்.
12–ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் புத்திசாலித்தனமாக செயல்பட்டு புதிய வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள். கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விடவேண்டுமென்ற உங்கள் நோக்கம் நிறைவேறலாம். ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். உறவினர்களின் மனஸ்தாபங்கள் மாறும்.
குதூகலம்  தரும்  குருப்பெயர்ச்சி!
ஆண்டின் தொடக்கத்தில் மிதுனத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் ஜூன் மாதம் 13–ம் தேதி கடக ராசியில் உச்சம் பெறுகிறார். அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிப்பதால் அமைதிக்குறைவு ஏற்படுமோ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். 9, 12 ஆகிய இடங்களுக்கு குரு அதிபதியாவதால் தந்தை வழியில் தகுந்த நற்பலன்கள் கிடைக்கும். சுபவிரயங்கள் அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடும்.
‘மன்னவன் 4–ல் நின்றால் மலைபோல் துயர்வந்தாலும், கண் எதிரில் பனியாய் மாறும், கச்சிதமாய் நோய்கள் தீரும்’ என்பார்கள். எனவே, உடல்நல குறைபாடுகள் அகன்று உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும்.
குருவின் பரிபூரண பார்வை 8, 10, 12 ஆகிய இடங்   களில் பதிகிறது.  அதன் பலனால் சிக்கல்கள் விலகும். சிரமங்கள் தீரும். அந்த அடிப்படையில் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
சென்ற குருப்பெயர்ச்சியில் ஏற்பட்ட இழப்புகளை எல்லாம் இப்பொழுது ஈடுகட்டும் வாய்ப்பு உருவாகலாம். உத்தியோகத்தில்  நீங்கள் நினைத்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.
குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் ஏமாற்றி விட்டார்களே என்று கவலைப்பட வேண்டாம். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை அரங்கேற்றம் செய்வீர்கள்.
குருவின் பரிபூரண பார்வை 12–ம் இடத்தில் பதிவதால் பயணங்களால் பலன் கிடைக்கும். அன்னிய தேசத்தில் இருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். வருமானத்தை அசையாத சொத்துக்களாக மாற்றி   அமைத்துக் கொள்ள முன்வருவீர்கள்.
வாகன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உங்களுக்கு அதிர்ஷ்ட எண் ஆதிக்கத்தில், எண்கணித அடிப்படையில் வண்ணங்களும், எண்களும் யோகம் தரும் விதத்தில் அமைந்தால் அந்த வாகனத்தை எடுத்துச் செல்லும் இடங்களில் எல்லாம் காரிய வெற்றி ஏற்படும். குரு வழிபாடு குதூகலம் தரும்.

2014 மீனம்: ஒரு புறம் எரிமலை மறுபுறம் பனிமலை

Source: www.dinamalar.com


 
வெற்றி வேணுமா போட்டு பார்க்கணும் எதிர்நீச்சல் என்ற கொள்கையுடைய மீனராசி அன்பர்களே! 

நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளும் சாமர்த்தியசாலி. கடந்த ஆண்டு முக்கிய கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருந்ததால் பல்வேறு இன்னல்களை சந்தித்து இருக்கலாம். ஆனால், இந்த ஆண்டு பல்வேறு நன்மைகளை காணலாம். முக்கிய கிரகங்களில் ஒன்றான சனிபகவான் 8-ல் இருக்கிறார். அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மை தர முடியும்? இங்கு, அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்கலாம். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இந்த ஆண்டும் சனிபகவானின் நிலை அதே இடத்தில்தான் உள்ளது. அதே நேரம், மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை சனிபகவான் வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே. அந்த சமயத்தில், அவரால் உங்களுக்கு நன்மை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது  நிழல் கிரகமான ராகு 8-ம் இடத்தில் சனிபகவானோடு இணைந்து உள்ளார். அவர் தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம். வெளியூர் பயணத்தை அடிக்கடி உருவாக்குவார். ஆனால், அவர்கள் மீது குருவின் பார்வை விழுவதால் அவர்களால் கெடுபலனை தரமுடியாது. ஜூன் 20ல், ராகு 7-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அங்கு அவர் இருக்கும் சமயத்தில், குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். குடியிருக்கும் வீட்டையோ, ஊரையோ மாற்றுவார்.  இன்னொரு நிழல் கிரகமான கேது 2-ம் இடமான மேஷத்தில் உள்ளார். அங்கு பொருள் விரயத்தையும், பகைவர் வகையில் தொல்லையையும் தருவார். ஜூன்20ல், அவர் இடம் பெயர்ந்து உங்கள் ராசிக்கு வருகிறார். அதன் காரணமாகவும், உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கப்படலாம். சனி, ராகு, கேது இப்படி தொல்லைகளைத் தந்தாலும், முக்கிய கிரகமான குரு பகவான் 4-ம் இடமான மிதுனத்தில் உள்ளார். நான்காம் இடத்து குரு, மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார் என்றாலும், அவர், உங்கள் ராசி நாயகன் என்பதால் அதிகபட்ச கெடுபலன்களை தரமாட்டார். அது மட்டுமல்ல! ஆண்டின் ஆரம்பத்தில், குருபகவான் மார்ச் 12 வரை வக்கிர நிலையில் உள்ளார். இந்த காலக்கட்டத்தில் அவர், கெடுபலனை தராமல் நன்மையே செய்வார். அவர் ஜூன்12ல், கடகத்திற்கு வருகிறார். இது உங்களுக்கு மிக ஆறுதலைத் தரும் இடம். 5-ம் இடமான அங்கு அவர் பணவரவையும், வாழ்க்கை வளத்தையும், சுபங்களையும் தருவார். அதன்பின், உங்கள் வாழ்க்கையில் பல்வேறு நன்மைகள் நடக்க தொடங்கும். மேலும் குருபகவானின்  பார்வையாலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும். 5-ம்  இடத்துப்பார்வையும், 7-ம் இடத்துப் பார்வையும் சாதமாக அமையும். 5-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 9-ம் வீடான விருச்சிகத்தில் விழும். அதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து  முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து  சரணடையும் நிலை வரலாம். தடைபட்டு வந்த  திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. 7-ம் இடத்துப் பார்வை 11-ம் இடமான மகரத்தில் விழும். இதன் மூலம் பொருளாதார வளம் மேம்படும்.  உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். மேற்கண்ட நிலையை காணும்போது ஆண்டின் பிற்பகுதி குதூகலமாக அமையும். கணவன்- மனைவி இடையே அன்பு தொடரும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஜூனுக்கு பிறகு கை கூடும். புதிய வீடு வாகனம் வாங்க யோகம் கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்து வந்த பிணக்குகள் மறையும்.  மொத்தத்தில் இந்த ஆண்டின் ஒருபுறம், கிரகங்கள் எரிமலைக் குழம்பைக் கக்கினாலும், மறுபுறத்தில் இருக்கும் குரு பனிமலையாய் உங்கள் நெஞ்சைக் குளிர வைப்பார்.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் லாபத்துக்கு குறையிருக்காது வருமானம் அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதிக முதல்போடாமல், அறிவைப் பயன்படுத்தி முன்னேற வழிவகை காணுங்கள். அரசு வகையில் இருந்து வந்த பிரச்னை மறையும். அனுகூலமான போக்கு காணப்படும்.

பணியாளர்கள்: உத்தியோகத்தில் இதுவரை இருந்துவந்த பின்தங்கிய நிலை மறையும். ஜூன் மாதம் முதல் பல சிறப்பான பலன்களைக் காணலாம். வேலையில் பளு குறையும். முக்கிய கிரகங்கள் உங்களை இடம் மாற்றி விடும் என்பதால், அதையே உங்களுக்கு சாதகமாக்கி, விருப்பமான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடுங்கள். சில சமயங்களில் கெட்டதும் கூட நல்லதற்காகவே வருகிறது. உங்கள் ஆற்றல் தொடர்ந்து மேம்பட்டு இருக்கும். புதிய பதவி கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு.

கலைஞர்கள்: கலைஞர்களுக்கு நல்ல சான்ஸ் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில், தடைபட்டிருந்த வருமானம் கிடைக்க இடமுண்டு.

பெண்கள்: குருவின் ஏழாம் இடத்து பார்வை, கன்னிப்பெண்களுக்கு திருமண யோகத்தைக் கொடுக்கும். ஆண்டின் பிற்பகுதியில் நகை பணம், சேரும். கணவருடன் இணக்கமான போக்கு இருக்கும். வேலை செய்யும் பெண்களுக்கு ஜூனுக்குப் பிறகு சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

விவசாயிகள்: நவீன கருவிகளை ஜூன் மாதத்துக்குப் பிறகு வாங்கலாம். புதிய நிலம் வாங்கும்போது, பத்திரங்களைக் கவனமாகப் படித்துப் பார்க்கவும். விளைபொருட்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்கும்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். அடுத்த கல்வி ஆண்டில் சிறப்பான பலனைக் காணலாம். விரும்பிய கோர்சில் சேர்வதற்கு இடம் கிடைக்கும்.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு நன்மை தரும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பத்திரகாளி அம்மனை வழிபடுங்கள். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும், சனிக்கிழமைகளில் சனிபகவானையும் வணங்கி வாருங்கள். பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். ராகு நிலையும் சரியில்லாததால் ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

பரிகாரப் பாடல்:
துணையும் தொழும் தெய்வமும்
பெற்ற தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட
வேரும் பனிமலர்ப் பூங்கணையும்
கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும்
கையில் அணையும்
திரிபுரசுந்தரியானது அறிந்தனமே.

2014 கும்பம்: பூச்சூட ஆளிருக்கும் புகழ்பாட வாயிருக்கும்

Source: www.dinamalar.com


 
நிதானமாக செயல்பட்டு, வெற்றிக் கனியைப் பறிக்கும் தன்மையுள்ள கும்பராசி அன்பர்களே!

உங்கள் ராசி நாயகன் சனிபகவான், உங்களின்  கவுரவத்தை பாதுகாக்க உதவுவார். அவர் துலாமில் உச்சநிலையில் இருக்கும் காலகட்டத்தில், இந்த ஆண்டு மலர்கிறது. அவர் சாதகமற்ற இடத்தில்  இருந்தாலும் கூட, முக்கிய கிரகங்கள் பல சாதாகமாக இருக்கும் நிலையில்தான், இந்த ஆண்டு பிறக்கிறது. குரு பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருக்கிறார். இங்கு அவர் பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியை தருவார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி களை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். இதுதவிர குருவின் 5-ம் இடத்துப்பார்வையும், 7-ம் இடத்துப் பார்வையும் சாதமாகவும் அமைந்துள்ளது. இதனால் கூடுதல் நன்மை கிடைக்கும். குரு பகவான் ஜூன் 12ல், 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது  சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. 5-ம் இடத்தில் இருந்தது போன்ற நன்மைகளை அவரால் செய்ய முடியாது. அதே நேரம் மிகவும் பிற் போக்கான பலனையும் அவர் தரமாடடார். பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட வாக்கு.  முக்கிய கிரகங்களில் ஒன்றான சனி பகவான், 9-ம் இடமான துலாமில் இருப்பது சாதகமற்ற இடத்தில் இருக்கிறார். பொதுவாக சனி 9-ம்  இடத்தில் இருக்கும் போது, உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்; எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்; பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆனால், அவர் உங்கள் ராசி நாயகன் என்பதால் அவரால் சிரமங்கள் அதிகம் இருக்காது.  மேலும் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை சனிபகவான் வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே. மேலும் அப்போது அவரால் நன்மை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. 3-ம் இடத்துப் பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். 7-ம் இடத்துப் பார்வையால் காரிய அனு கூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார். 10-ம் இடத்துப் பார்வையால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறலாம். உங்கள் ஆற்றல் மேம்படும்.உங்களுக்கு பல வகையிலும் பலரும் புகழ்மாலையும், பூ மாலையும் சூட்டுவர்.  நிழல் கிரகமான ராகு தற்போது 9-ம் இடமான  துலாமில் சனிபகவானோடு உள்ளார். அவரால் முயற்சிகளில் தடை, எதிரிகளின் இடையூறு போன்றவை வரலாம். ஆனால் குருவின் பார்வை அவர் மீது படுவதால் அவரால் கெடுபலன்கள் நடக்காது. ஜூன் 20 அன்று, ராகு 8-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அங்கு முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 3-ம் இடமான மேஷத்தில் இருந்து இறை அருளையும், காரிய அனுகூலத்தையும் கொடுந்து கொண்டிருக்கிறார். அவர் ஜுன்20 அன்று இடம் பெயர்ந்து மீனத்திற்கு வருகிறார். இதனால்  எதிரிகள் வகையில் தொல்லை வரும். வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். எனவே நகைகளை லாக்கரில் வைத்து விடுவது நல்லது. தேவைப் படும் போது குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம். மேற்கண்ட கிரகங்களின் நிலையைக் கொண்டு பார்க்கும்போது, ஆண்டின் முற்பகுதி சிறப்பாக அமையும் என்பதை உணரலாம். பொதுவாக இந்த ஆண்டு பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தடைகள் விலகி எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு,  மரியாதை சிறப்பாக இருக்கும். மனதில் இருந்த உளைச்சல் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு செலவை குறைக்கவும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் ஜூன் மாதத்திற்குள் நிறைவேறும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தையே வேறு ஊருக்கு மாற்ற வேண்டியது வரலாம். அனாவசிய செலவை தவிர்க்கவும்.

தொழில், வியாபாரம்: தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க அனு கூலம் உண்டு. ஆனால், அதை ஜூன் மாதத்திற்குள் ஆரம்பித்தால் மிகச்சிறப்பாக நடக்கும். தாமதமாகத் தொடங்கினால், அதிகமாக உழைத்து சிரமப்பட்டு தொழிலைக் காப்பாற்ற வேண்டியது வரும்.

பணியாளர்கள்: பணியாளர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், ஜூன் மாதத்திற்கு பிறகு வேலையில் பளு அதிகரிக்கும். வேலையின்றி இருப்பவர்கள் ஜூன் மாதத்துக்குள் வேலையைத் தேடிக்கொள்ளவும். அதற்கு அனுகூலமான  வாய்ப்பும் இருக்கிறது. அக்டோபர், நவம்பர் மாதங் களில் போலீஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் வேலை பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர்.

கலைஞர்கள்: அதிகமான சான்ஸ் கிடைக்கும். முதல் ஆறு மாதங்கள் வருமானம் மிகச் சிறப்பாக இருக்கும்.

பெண்கள்: கணவருடன் கருத்து மோதல்  கொள்ளாமல் பவ்வியமாக நடந்து கொள்வது  நல்லது. ஜூனுக்குப் பிறகு பொறுமை பெருமை தரும். திருமண முயற்சிகளை ஜூனுக்குள் முடித்து விடுவது நல்லது. ஆண்டின் ஆரம்பத்தில் நகை  வாங்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

மாணவர்கள்: இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றத்தை காணலாம். ஆனால் அடுத்த ஆண்டு, கடும் முயற்சி எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.

விவசாயிகள்: முதல் ஐந்து மாதங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அதன்பின், விவசாயத்தை நடத்த சிறு சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கலாம். இருப்பினும், பாதகமான நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. சிலர் புதிய நிலம் வாங்குவர். நவீன கருவிகள் மூலம் செய்யும் சாகுபடியில் நல்ல பலன் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகரையும், பெருமாளையும் தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஜூன் வரை ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.

பரிகாரப் பாடல்:
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பபையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய்க் காண்பேனே!

2014 மகரம்: சொல்லிவச்சு அடிக்கலாம் புள்ளி வச்சு பிடிக்கலாம்

Source: www.dinamalar.com


 
தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு  ஒளிவுமறைவின்றி கற்றுத்தரும் மகர ராசி அன்பர்களே!

நீங்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். யாரையும் சட்டை செய்யாமல் நீங்கள் உண்டு  உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். கடந்த ஆண்டு எந்த முக்கிய கிரகமும் சாதகமாக இல்லாமல் இருந்ததால், எண்ணற்ற பிரச்னைகளை சந்தித்து இருப்பீர்கள். ஆனால், அந்த நிலை மாறி இந்த ஆண்டு பல்வேறு முன்னேற்றங்களை காணலாம். குறிப்பாக ஆண்டின் பிற்பகுதி அனுகூலம் நிறைந்ததாக அமையும். உங்கள் ஆட்சி நாயகன் சனி, துலாமில் உச்சம் பெற்றிருக்க இந்த ஆண்டு பிறக்கிறது. 10ம் இடத்தில் இருக்கும் அவரால் நன்மை செய்யமுடியாது.  பொதுவாக, அவர் அவப்பெயரையும் பொல்லாப்பையும் தருவார் என்பது நியதி. பெண்கள் வகையில் இடையூறுகள் வரலாம். அதேநேரம், சனிபகவான் உங்கள் ராசி நாயகன் அல்லவா? அதனால், அவர்  உங்களுக்கு எந்த தொல்லையையும் கொடுக்க மாட்டார். மேலும் மார்ச் 4 முதல் ஜூலை 19 வரை அவர் வக்கிரம் அடைகிறார். இந்த காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம் தானே! மேலும், அப்போது அவரால் நன்மை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. இன்னொரு முக்கிய கிரகமான குரு பகவான்,  தற்போது உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் உள்ளார். அங்கு அவர் பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். மன நிம்மதியை இழக்க செய்திருப்பார். உங்கள் நிலையில் இருந்து தடுமாற்றத்தை உண்டு பண்ணியிருப்பார். பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும். வீண் பகையும், விரோதமும் உருவாகியிருக்கும். பல்வேறு தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மார்ச் 12-ந் தேதி வரை குருபகவான் வக்கிரத்தில் உள்ளார். எனவே அவரால் கெடுபலன்கள் நடக்காது. மாறாக நன்மை நடக்கவே வாய்ப்பு உண்டு.  பிற்போக்கான பலனை தந்து கொண்டிருக்கும் குரு பகவான், ஜூன்12ம்தேதி 6ம் இடத்தில் இருந்து 7ம் இடத்திற்கு செல்கிறார். இது மிகவும் சிறப்பான நிலை. அவர் மேலும் உங்களுக்கு பல்வேறு  நன்மைகளைத் தர இருக்கின்றார். இந்த கால கட்டத்தில், நீங்கள் ஏற்கனவே பலமுறை சொல்லிக் கொண்டிருந்த திட்டங்களை செயல்படுத்துவீர்கள். அதற்கான புள்ளியை மட்டும் வைத்து விட்டால் போதும். கோடு போட்டால், ரோடு போடலாம் என்பது போல் சாதித்து விடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள்  பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். அதோடு குருபகவானின் 5ம் இடத்துப் பார்வையாலும் நன்மை தருவார். நிழல் கிரகமான ராகு, தற்போது 10ம் இடமான துலாமில் சனிபகவானோடு இணைந்து காணப்படுகிறார். அங்கு  பொல்லாப்பையும், பெண்கள் வகையில் தொல்லைகளையும் தரலாம். ஆனால், அவர் மீது குருவின் பார்வை படுவதால் அவரால் கெடுபலனைத் தர முடியாது. ஜூன்20ல், ராகு 9ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அவரால் முயற்சிகளில் தடை, எதிரிகளின் இடையூறு போன்றவை வரலாம். இன்னொரு நிழல் கிரகமான கேது தற்போது 4ம் இடத்தில் இருந்து உங்களை தீயோர் சேர்க்கைக்கு ஆளாக்கி தொல்லைகளைத்  தரலாம். ஜூன்20ல் இடம் பெயர்ந்து மீனத்திற்கு  வருகிறார். இது சிறப்பான இடம். இறை அருளையும் காரிய அனுகூலத்தையும் தருவார். பொருளாதார வளத்தையும் மேம்படுத்துவார். மேற்கண்ட கிரகங்களின் நிலையை பார்க்கும்போது ஆண்டின் பிற்பகுதியில் வெகுவாக முன்னேறலாம் என்பதை உணர முடியும். ஜூன் மாதம்  முதல் தடைகள் விலகி எல்லா காரியங்களும் அனுகூலம் ஏற்படும். பணவரவு மேலும் அதிகரிக்கும். தற்போதுள்ள அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். அதுவரை வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் அல்லது புதிய தொழில் ஆரம்பிப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. தெய்வ அனுகூலம் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஜூன் முதல் நிறைவேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் மாறி, மகிழ்ச்சியும், ஒற்றுமையும்  ஓங்கும். சில சமயங்களில், செலவு அதிகரித்தாலும், அதுவும் சுபத்திற்கானதாகவே இருக்கும்.

தொழில், வியாபாரம்: தொழில், வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். அதற்காக அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆண்டின் முற்பகுதியில் பணவிரயம் ஆகலாம். எனவே யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். போட்டியாளர்கள் தரும் இடையூறு அவ்வப்போது தலைதூக்கலாம். அதேபோல், சேர்க்கை சகவாசத்தாலும் பணம் வீணாவதும், பிரச்னைகளில் சிக்குவதுமான நிலை வரலாம். எனவே, அந்த வகையில் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜூன் மாதத்தில் இருந்து தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பர். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில்கள் துவங்கி அதில் வெற்றி அடையவும் வாய்ப்புண்டு.

பணியாளர்கள்: ஆண்டின் தொடக்கத்தில்  சுமாரான நிலையே இருக்கும். அலைச்சலும் வேலைப்பளுவும் மனதை வருத்தும். இடமாற்றம் ஏற்படலாம். ஜூன் மாதத்தில் இருந்து இந்நிலையில் இருந்து மேம்பாடு காணலாம். வேலையில் ஆர்வம் பிறக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாத அதிகாரிகள், இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். அரசு வகையில் உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். அலுவலகத்தில் சக பணியாளர்கள் வகையில்   சற்று கவனம் தேவை.

கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் முயற்சியின் பேரில் பெறலாம். ஜூன் முதல் நல்ல முன்னேற்றம் காணலாம்.

பெண்கள்: உங்கள் பெயரில் வீடு வாங்க போட்டிருந்த திட்டம் ஜூனுக்குப் பிறகு நிறைவேறும். நல்ல வீடாக வருகிறது என்றால், கணவரின் கிரகபலனைப் பொறுத்து அவர் பெயரில் வாங்கிக் கொள்ளலாம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகளை ஜூனுக்குப் பிறகு எதிர்பார்க்கலாம். நகை வாங்க யோகமுண்டு. கன்னியருக்கு, ஜூனுக்குப் பிறகு திருமணம் நிச்சயமாகும்.

மாணவர்கள்: முதல் ஆறு மாதங்கள் சற்று சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும்.

விவசாயிகள்: முதல் ஐந்து மாதங்களுக்கு பணிகளில் சிரமம் இருந்தாலும், பின்வரும் காலத்தில் சரியாகி விடும். மகசூல் அதிகரிக்கவும், புதிய நிலம் வாங்கவும் யோகமுண்டு. நவீன விவசாய முறைகளைப் பின்பற்றி, மகசூலை அதிகரிப்பீர்கள்.

பரிகாரம்: விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள். நவக்கிரகங்களை தொடர்ந்து சுற்றுங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உண்ணுங்கள். ஜூன் வரை வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். ஆதரவற்றவர்கள், மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். இதனால் நன்மை அதிகரிக்கும்.

பரிகாரப் பாடல்:

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே
விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாம்
தண்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து