மனிதநேயம் அதிகமுள்ள நீங்கள் பாமரனாக இருந்தாலும் மதிப்பீர்கள். இயன்றதைச் செய்யும் நல்ல உள்ளம் படைத்தவர்கள்.
இதுவரை 10ஆம் வீட்டில் நின்ற சனிபகவான் 26.09.2009 முதல் 21.12.2011 முடிய லாப வீட்டான 11ஆம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆளப்போகிறார். தொழில் ஸ்தானத்தில் இதுவரை இருந்து கொண்டு உங்களை எந்த வேலையையும் மனநிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்தாரே! கடின உழைப்புக்கேற்ற பாராட்டு பதவியுயர்வு எல்லாம் கிடைக்காமல் போனதே! அந்த நிலையெல்லாம் மாறும்.
குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் பணம் தண்ணீராய் செலவானதே! பல பிரச்சனைகளையும் நினைத்து அவ்வப்போது சோர்ந்து போனீர்களே! இனி குடும்ப வருமானத்தை உயர்த்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். அம்மாவுக்கு இருந்த நோயெல்லாம் விலகும்.
நெடுநாள் கனவான வீடு கட்டும் பணி முழுமையடையும். மனைவியுடன் வாக்கு வாதங்கள், வீண் சந்தேகம் இருந்ததே! இனி அன்யோன்யம் அதிகரிக்கும். பல காரியங்கள் முதல் முயற்சியிலேயே முடியும். சொத்து வாங்குவீர்கள். உங்கள் பூர்வபுண்யஸ்தானத்தை சனி பார்ப்பதால் படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். அவர்களின் நடவடிக்கைகளின் கண்காணியுங்கள்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் தசமஸ்தானாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் உங்களின் நிர்வாகத்திறன் கூடும். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
உங்களின் பாக்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பொன் பொருள் சேரும்.
உங்கள் ராசிநாதான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் அழகு அறிவு கூடும். அந்தஸ்து பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.
வரும் 10.01.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அதிகம் உழைக்க வேண்டி வரும். மறைமுக பகை, தந்தையுடன் கருத்துமோதல், வீண்செலவு வந்து நீங்கும்.
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சகோதரியின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடிப்பீர்கள். சமூக சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் பிரச்சனைகள் வரக்கூடும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது நன்கு படித்து பார்த்து கையெழுத்திடுங்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.
வியாபாரத்தில் அறிவுரை என்ற பெயரில் சிலர் தவறான பாதைக்கு அழைத்து சிக்கலில் சிக்க வைத்தார்களே! அவர்களையெல்லாம் இனி ஒதுக்குவீர்கள். அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். தொல்லை தந்த பணியாளர்களை மாற்றுவீர்கள். எலக்ட்ரிக்கல், பெட்ரோகெமிக்கல், புரோக்கரேஜ் வகைகளால் லாபமுண்டு. கூட்டுத்தொழிலில் தொந்தரவு கொடுத்த பங்குதாரர்களை மாற்றிவிட்டு புதியவர்களை சேர்ப்பீர்கள்.
உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வந்ததே! என்றாலும் பாராட்டாமல் குறை சொல்ல தான் சிலர் இருந்தார்களே! அந்த நிலையெல்லாம் மாறும். உங்கள் திறமையை அறிந்துகொண்ட மேலதிகாரி பதவியுயர்வு,சம்பள உயர்வு தருவார். இழந்த சலுகைகளை கேட்டுப் பெறுவீர்கள்.
கன்னிப்பெண்களே! கசந்த காதல் கைகூடும். தற்காலிக பணியிலிருந்து நிரந்தமாக்கப்படுவீர்கள். கல்யாணம் நடக்கும். மாணவ, மாணவிகளே! ஆசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. கலைஞர்களே! மூத்த கலைஞர்கள் உங்களிடம் நட்புறவாடுவார்கள். உங்கள் படைப்புகள் பெரிதும் பேசப்படும்.
இந்தச் சனிப் பெயர்ச்சி எதிர்நீச்சலடித்த உங்களை சீரான பாதைக்கு அழைத்து செல்வதுடன் தலைநிமிரச் செய்வதாக அமையும்
புத்தாண்டு பலன்கள் 2014 2014 rasi palangal, Mesham , Rishabham, Midhunam, Katagam. Simham , Kanni , Thulam , Vrichigam , Dhanur, Makaram , Kumbam, Meenam, palangal 2014 Sani Peyarchi palangal in tamil, Saturn transist in English 2011 Sani Peyarchi 2011 Mesham , Rishabham, Midhunam, Katagam. Simham , Kanni , Thulam , Vrichigam , Dhanur, Makaram , Kumbam, Meenam, Sani Peyarchi palan 2011 in tamil, sani peyarchi palangal 2011 in tamil, sani peyarchi 2011 tamil சனிப்பெயர்ச்சி பலன்கள்
Showing posts with label விருச்சிகம். Show all posts
Showing posts with label விருச்சிகம். Show all posts
Wednesday, 16 September 2009
Subscribe to:
Posts (Atom)