Friday, 30 December 2011

New Year Rasi Palan - 2012 - Mesham


உதட்டால் உளறாமல் இதயத்தால் பேசும் நீங்கள், குலம், கோத்திரம், சாதி, மதம் பார்க்காமல் உண்மையான பாசமுடன் பழகுவீர்கள். எடுத்த வேலையை முடிக்கும் வரை அதே சிந்தனையுடன் இருந்து சாதிக்கும் நீங்கள், இலக்கியம், இசை, ஆன்மிகம் என அனைத்திலும் ஆர்வம் கொண்ட கலா ரசிகர்கள்.
உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கையில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கனிவான பேச்சு வேலைக்கு ஆகாது என்று கறாராக பேசவேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். 

ஏதாவது காரியமாக வேண்டுமென்றால் உங்கள் காலை பிடிப்பதும் கையைப் பிடிப்பதுமாக இருந்தவர்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். உங்களுக்கு பன்னிரெண்டாவது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால் திடீர் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடே சுப நிகழ்ச்சிகளால் களைகட்டும். வற்றிய பணப்பை நிரம்பும். விலகிச் சென்ற பழைய சொந்த பந்தங்கள் இனி வீடு தேடி வருவார்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும் உண்டு. 

விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். நெடுநாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சில காரியங்கள் இப்போது செய்ய முடியும். 16.5.2012 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு அமர்ந்து ஜென்ம குருவாக நீடிப்பதால் அடிக்கடி கோபப்படுவீர்கள். சில சமயங்களில் நிம்மதி இல்லாமல் தவிப்பீர்கள். திட்டவட்டமாக செயல்பட முடியாமல் தடுமாறுவீர்கள். தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும் போதெல்லாம் அதை தட்டி வைக்கப் பாருங்கள். உங்களைப்பற்றி எல்லோரும் தவறாக நினைப்பதாக நீங்களே முடிவெடுத்துக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் இருக்கும். 

ஆனால் 17.5.2012 முதல் குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2ல் அமர்வதால் கோபம் குறைந்து கனிவு பிறக்கும். இனி கடுமையாக பேசாமல் இங்கிதமாகவும் இதமாகவும் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். பணப் பற்றாக்குறை நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். நீங்களும் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, மயக்கம் எல்லாம் நீங்கும். பார்வைக் கோளாறு சரியாகும். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும். உங்களின் பாசத்திற்கு கட்டுப்படுவார்கள். உங்கள் சொல்படி நடப்பார்கள். பிரிந்திருந்த கணவன் -மனைவி ஒன்று சேருவீர்கள். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.


உங்கள் ராசிநாதனான செவ்வாய் வருடம் ஆரம்பிக்கும்போதிலிருந்து 22.6.2012 வரை 5ம் வீட்டிலேயே அமர்ந்திருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்படுவது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. மாடிப்படிகளில் ஏறும் போது கவனமாக இருங்கள். வரம்பு மீறி யாரையும் விமர்சிக்க வேண்டாம். உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சலும் செலவுகளும் இருக்கும். சகோதரியின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை முடிந்தவரை பேசித் தீர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். 

அவர்கள் விரும்பிய கல்வியிலேயே சேர்ப்பது நல்லது. சொத்து விற்பது வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். 23.6.2012க்கு பின்னர் செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய சிக்கல்கள் யாவும் தீரும். சகோதர, சகோதரிகள் பாசமாக நடந்து கொள்வார்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புது முயற்சிகள் பலிதமாகும். நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். வருடம் பிறக்கும்போது 2ம் வீட்டில் கேதுவும் 8ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும். ஒருவருக்
கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. 

உறவினர்கள் சிலர் உங்களுக்குள் வீண் வம்புச் சண்டையை ஏற்படுத்தக் கூடும். 1.12.2012 முதல் உங்கள் ராசிக்குள் கேதுவும் 7ல் ராகுவும் நுழைவதால் லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. நடைப்பயிற்சி, யோகா, தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.சனிபகவான் ராசிக்கு 7ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் புதிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். யாருக்கும் ஜாமீன், காரண்டர் கையெழுத்திட வேண்டாம். உப்பு சப்பில்லாத விஷயத்திற்குக்கூட மனைவியுடன் சண்டை சச்சரவுகள் வரும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. 

மனைவிவழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். மகனுக்கோ, மகளுக்கோ வாழ்க்கைத்துணை தேடுபவர்கள் நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் அதிக இடைவெளி தராமல் உடனே முடிப்பது நல்லது. செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குவதையோ, சாலையை கடப்பதையோ தவிர்க்கவும். சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்தி விடுங்கள். சட்டத்திற்குப் புறம்பாக எந்த வேலையையும் செய்ய வேண்டாம். 

சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் திடீர் யோகம், பணவரவு எல்லாம் உண்டு. பிரபலங்களின் உதவி கிடைக்கும். வெளிமாநில புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். கன்னிப் பெண்களே! வருடத்தின் முற்பகுதியில் காதலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். நொறுக்குத் தீனிகளை குறையுங்கள். ஜூன் மாதத்திலிருந்து தலைவலி, மாதவிடாய்க் கோளாறு சரியாகும். கல்யாணம் கூடிவரும். 

சிலர் தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். உங்கள் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.மாணவர்களே! மறதி, மந்தம் நீங்கும். விளையாட்டை குறைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களை கேளுங்கள். வியாபாரிகளே, மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பெரிய முதலீடுகளை கடன் வாங்கி பண்ணாதீர்கள். சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. பழைய சரக்குகளை லாபகரமாக விற்றுத் தீர்க்கப்பாருங்கள். 

பாக்கிகளை அலைந்து திரிந்துதான் வசூலிக்க வேண்டிவரும். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஜூன் மாதத்திலிருந்து வியாபாரம் சூடு பிடிக்கும். ஹோட்டல், ஷேர், மர வகைகளால் லாபமுண்டு. பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். கூட்டுத் தொழில் வேண்டாம். உத்யோகஸ்தர்களே! மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிவரும். அதிகாரிகளிடம் அதிக உரிமையுடன் பேச வேண்டாம். உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காதீர்கள். 

நீங்களே செய்வது நல்லது. சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். வருட பிற்பகுதியில் சம்பள உயர்வு, பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு நிறுவனங்களில் சிலருக்கு புது வேலை அமையும். சக ஊழியர்களுடன் இருந்த மனப்போர் நீங்கும். கணினி துறையில் இருப்பவர்களுக்கு வருட மத்தியப் பகுதியில் வேறு நல்ல வாய்ப்புகள் வரும். அரசியல்வாதிகளே! தலைமைக்கு எதிராக எந்த விமர்சனமும் வேண்டாம். ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். 

 
கலைத்துறையினர்களே! வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். தடைபட்ட வாய்ப்புகள் வேற்றுமொழியில் அமைந்து புகழடைவீர்கள். 
விவசாயிகளே! நவீனரக உரங்களால் மகசூல் பெருகும். நிலத்தகராறு தீரும். வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
இந்தப் புத்தாண்டு மே மாதம் வரை உங்களை சோர்வடைய வைத்தாலும், ஜூன் மாதத்திலிருந்து சவால்களில் வெற்றி பெற வைப்பதுடன் வருமானத்தையும் வாரி வழங்கும். 
பரிகாரம்:
திருத்தணி முருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள்.

Wednesday, 28 December 2011

2012 Moon Sign Predictions



For 2012 Moon Sign Predictions,  Click here

Wednesday, 21 December 2011

Sani Peyarchi Palan 2011 - Meenam

வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட நீங்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் உறங்க மாட்டீர்கள். 
இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து சின்னச் சின்ன தடைகளையும் அவ்வப்போது உடல் நலக் குறைகளை தந்தாலும் ஓரளவு யோக பலன்களையும் சனிபகவான் தந்தார். இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள கால கட்டங்களில் 8ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து இனி பேச வேண்டாம். 

குடும்பத்தில் கணவன்&மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். உஷாராக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள். நேரம் கெட்ட நேரத்தில் பயணிக்க வேண்டாம். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். முன்பின் அறியாதவர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்க்கப் பாருங்கள். வங்கிக் காசோலைகளை கவனமாக கையாளுங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது. 

மகனின் உயர்கல்வி, உத்யோகத்தின் பொருட்டு சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டிவரும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பழைய கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனசை வாட்டும். யாரை நம்புவது என்கிற மனக் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வர வேண்டிய பூர்வீக சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். சிலர் உங்கள் முன் புகழ்ந்து பேசிவிட்டு பின்னால் இகழ்ந்து பேசுவார்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். 

மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். அறுவை சிகிச்சை உண்டு. வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வீட்டு விசேஷங்களில் சிலர் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையையும் உட்கொள்ள வேண்டாம். 

சகோதரர்கள் குறைப்பட்டுக் கொள்வார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கப் பாருங்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் எதிலும் தடுமாற்றமும் வீண் செலவுகளும் வந்துபோகும். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்யுங்கள். நடைப் பயிற்சியும் இருக்கட்டும்.     

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்உங்கள் தனாதிபதியும்&பாக்யாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். இழுபறியான வேலைகள் முடியும். குழந்தை பாக்யம் உண்டு. தாமதமானாலும் எதிர்பார்த்த பணம் வரும். 
புதிதாக நிலம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். சகோதரர்கள் தங்கள் தவறை உணருவார்கள். 

புது வேலை கிடைக்கும். ஆனால் தந்தையாருடன் மனஸ்தாபங்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். பணம் வந்தாலும் சேமிப்புகள் கரையும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் சிறுசிறு விபத்து, முன்கோபம், வீண் டென்ஷன், மனஉளைச்சல், ஒற்றைத் தலைவலி, உடல் உஷ்ணத்தால் அடிவயிற்றில் வலி வந்து செல்லும்.   


9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டாம். கெட்ட நண்பர்களை தவிர்ப்பது நல்லது. சட்டத்திற்குப் புறம்பான வகையில் எந்த முயற்சியும் வேண்டாம். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள் ஆனால் கவனமாகக் கையாளுங்கள். வாகனப் பழுதை சரி செய்யுங்கள். அயல்நாடு மற்றும் புகழ் பெற்ற புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.  


12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் ராசிநாதனும்&ஜீவனாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் தடைபட்ட திருமணம் கூடிவரும். சீமந்தம், காதுகுத்து என வீடு களைகட்டும். கொஞ்சம் வேலைச்சுமை இருக்கும். வீடு மாறுவீர்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை தாமதப்படுத்தாமல் உரிய நேரத்தில் செலுத்திவிடுவது நல்லது. உறவினர்களுடன்பகைமை வரக்கூடும். மஞ்சள் காமாலை, காய்ச்சல் வந்து நீங்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புது வீடு வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். 


சனிபகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள்.  பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும். சனிபகவான் 8ம் வீட்டை பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள்.  இல்லத்தரசிகளே! குடும்பத்தில் பெரிய முடிவெல்லாம் இனி நீங்கள்தான் எடுக்க வேண்டி வரும். ஆனால் கணவர் அவ்வப்போது கடிந்து கொள்வார். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் குறித்து கவலைகள் தலைதூக்கும். மாமியார் உதவுவார். அலுவலகம் செல்லும் பெண்களே! விளையாட்டாகப் பேசி வம்பில் சிக்க வேண்டாம். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! 

தோழியின் திருமணத்திற்கு செல்லும் போதெல்லாம் உனக்கு எப்பொழுது கல்யாணம் என்று கேள்வி கேட்டு 
கிண்டலடித்தார்களே! திருமணம் முடியும். தூக்கமின்மை, ஹார்மோன் கோளாறு நீங்கும். மாணவ&மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட கோர்ஸில் சேர சிலரின் சிபாரிசை நாடவேண்டி வரும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப் பாருங்கள். வியாபாரிகளே! தாராளமாக முதலீடு செய்து, விசாலமாக கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டது தான் மிச்சம். 

இனியாவது ஆழம் தெரிந்து கால் வையுங்கள். வியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். வேலையாட்களால் ரகசியங்கள் கசியக் கூடும். அரசு விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகளும் எதிர்ப்புகளும் வந்து நீங்கும்.  உத்யோகஸ்தர்களே! நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள்.

 உங்களுக்காக பரிந்து பேசிய உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். புது வாய்ப்புகளும் பொறுப்புகளும் சற்று தாமதமாகி கிடைக்கும்.  அரசியல்வாதிகளே! வீண் வறட்டு கௌரவத்திற்காக கை காசை தண்ணியாக இறைக்காதீர்கள். கட்சி மேலிடம் உங்களின் செயல்களை உற்றுநோக்கும். கலைத்துறையினர்களே! 

விமர்சனங்களையும் வதந்திகளையும் தாண்டி வெற்றி பெறுவீர்கள். உங்களின் படைப்புகளை போராடி வெளியிடவேண்டிவரும். 
விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த தரமற்ற உரங்களை பயன்படுத்தாதீர்கள். லோன் தாமதமாகி கைக்கு வரும்.
இந்த சனி மாற்றம் செலவுகளிலும் பிரச்னைகளிலும் சிக்க வைத்தாலும் கடின உழைப்பாலும் சமயோஜித புத்தியாலும் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.
பரிகாரம்:
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகிலுள்ள மொரட்டாண்டி எனும் ஊரில் அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் பஞ்சலோக சனீஸ்வரரை பரணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

Sani Peyarchi Palan 2011 - Kumba

குப்பை, கூவம், ஓடை, ஆறு எல்லாம் வந்து கலந்தாலும் கொஞ்சமும் உவர்ப்புத் தன்மை மாறாத கடலைப்போல இழப்பு, ஏமாற்றம், தோல்வி, துக்கம் என எது வந்தாலும் ஏற்றுக் கொள்பவர்களே. இதுவரை உங்கள் ராசிநாதனான சனி
பகவான், ராசிக்கு 8ல் அஷ்டமத்துச் சனியாக நின்று கொண்டு உங்களை ஆட்டிப்படைத்தாரே. எல்லோரிடமும் கெட்ட பெயரையும் ஏச்சு, பேச்சுக்களையும் சம்பாதித்ததுடன், பல பிரச்னைகளிலும் சிக்க வைத்தாரே. 

இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் 9ம் வீட்டில் உச்சம்பெற்று வலுவாக அமர்வதால் ‘நமக்கேன் வம்பு’ என்று ஓரமாய் ஒதுங்கியிருந்த நீங்கள், இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். தோல்வி பயத்தால் துவண்டு இருந்த உங்கள் மனதில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர்விடும். உங்கள் ராசிநாதன் யோக வீட்டில் வலுவாக அமர்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். 

இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து நிம்மதி இல்லாமல் போனதே, இனி ஓரளவு வாஸ்து, வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். வார்த்தையால் வடிக்க முடியாத கஷ்டங்களை எல்லாம் அனுபவித்தீர்களே! மனதிற்குள் நிம்மதியில்லாமல், எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாமல் எப்போதும் ஏதேனும் ஒரு கவலை உங்களை வாட்டி வதைத்ததே! உங்களைவிட தகுதி குறைந்தவர்களுக்கெல்லாம் கைகட்டி பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருந்தீர்களே! இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். 


கணவன்&மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.  உங்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தயங்கினீர்களே! 

இனி எதிலும் முன்னிலை வகிப்பீர்கள். நீண்டகால லட்சியமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்றிருந்தீர்கள் அல்லவா, அது இப்பொழுது நிறைவேறும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்னை தீரும். ஆனால் தந்தைக்கு ரத்த அழுத்தம், முதுகு, முழங்கால் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். 


பிதுர்வழி சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். பணம் வந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பருமனாக இருந்த நீங்கள், பார்ப்பதற்கு அழகாவீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் இனந்தெரியாத கவலை, ஏமாற்றம், பொருள் இழப்பு, வாகன விபத்து வந்து செல்லும். 
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கான அதிபதியும், ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் கம்பீரமாகப் பேசி காரியம் முடிப்பீர்கள்.  புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி வரும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். 

தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். தாய்வழியில் ஆதரவு பெருகும்.     
9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், இக்கால கட்டத்தில் நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை 
மாற்றுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். திருமணத்தடை நீங்கும். வேற்றுமதத்தினர், நாட்டினர் உதவுவார்கள். 


12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் தனாதிபதியும்&லாபாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் இழுபறிநிலை மாறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். 

ஷேர் மூலம் லாபமடைவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 3ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, வாகன வசதிகள் பெருகும். சனிபகவான் உங்களின் 6ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். 

புது சொத்து சேரும். நிலுவையிலிருந்த வழக்கு வெற்றியடையும். சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அத்தை, மாமா வகையில் ஆதரவு பெருகும்.
இல்லத்தரசிகளே! வருங்காலத்தை மனதில் கொண்டு தங்க ஆபரணங்களை வாங்கிச் சேர்ப்பீர்கள்.  மாமனார், மாமியாருடனான கருத்து மோதல்கள் நீங்கும். அலுவலகம் செல்லும் பெண்களே! நிரந்தர வேலையில்லாமல் அடிக்கடி மாறிக் கொண்டிருந்தீர்களே! இனி பணியில் நிரந்தரமாக்கப்படுவீர்கள். 

கன்னிப் பெண்களே! வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு சில வேதனைகளை சந்தித்தீர்களே! அந்தநிலை மாறும். தன்னுடன் படித்தவர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்டதே! நமக்கு எப்போது முடியுமோ என்று கலங்கினீர்களே! இனி விரைவிலேயே கெட்டி மேளம்தான். கசந்த காதல் இனிக்கும். மாணவ&மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள். 

வியாபாரிகளே! மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டீர்களே! இனி சந்தை நிலவரம் அறிந்து புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். தடைபட்ட ஒப்பந்தங்கள் தேடிவரும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். வங்கியில் வாங்கியிருந்த கடனை ஒருவழியாக கட்டி முடிப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாசுமதி அரிசி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு. 

உத்யோகத்தில் எந்த மதிப்பும், மரியாதையும் இல்லாமல் ஒரு அடிமையைப்போல் வேலை பார்த்தீர்களே! உங்களின் பணியில் திருப்தியில்லை என்று அடிக்கடி உயரதிகாரி புலம்பித் தள்ளினாரே, இனி உங்கள் கை ஓங்கும். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். உங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் விலகும். புது வாய்ப்புகள் தேடிவரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும். சக ஊழியர்களின் தொந்தரவுகள் விலகும். 

அரசியல்வாதிகளே! மாநில அளவில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தலைமையின் வாரிசுகள் உங்களுக்கு தனிப்பட்ட வகையில் உதவுவார்கள்.  கலைஞர்களே! ஏச்சுப் பேச்சிலிருந்து விடுபடுவீர்கள். வீண் வதந்திகளும் அவப் பெயர்களும் நீங்கும். புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.விவசாயிகளே! நிலத் தகராறால் கோர்ட், கேஸ் என்று போனால் வெற்றி உங்களுக்குத்தான். மகசூல் பெருகும். கூட்டுறவு வங்கி கடனுதவி கிடைக்கும். இந்த சனி மாற்றம் உங்களை தலை நிமிர வைப்பதுடன், நீண்ட நாள் ஆசைகளையும் நிறைவேற்றுவதாகவும் அமையும். 
பரிகாரம்:
விழுப்புரத்திலி ருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையிலுள்ள கல்பட்டு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாந்த சனீஸ்வரரை, புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். வாழ்வில் வளம் பெருகும்.

Sani Peyarchi Palan 2011 - Makaram

செடி கொடியில் பூத்துக் குலுங்கும் பூவைக்கூட பறிக்காமல் ரசிக்கும் மென்மையான மனம் கொண்டவர்களே! தோல்வித் தீயில் 
சாம்பலாகாமல் பீனீக்ஸ் பறவை போல உயிர்த்தெழுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்ந்து, உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்னைகளாலும் மனக் கவலைகளாலும் கலங்கடித்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள கால கட்டங்களில் 10ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும்.

 ‘கரியவன் காரியத்தில் அமர, காரிய பங்கமடா’ என்று பழைய நூல் சொன்னாலும் உங்கள் ராசிநாதனாக சனிபகவான் வருவதாலும் உச்சமாகி யோகாதிபதியான சுக்கிரனின் வீட்டில் அமர்வதாலும் யோக பலன்களையே தருவார். இனி நீங்கள் விஸ்வரூபமெடுப்பீர்கள்.திறமை இருந்தும் சரியான சந்தர்ப்பங்கள் அமையாததால் முடங்கிக் கிடந்தீர்களே! பல இடங்களில் அவமதிக்கப்பட்டீர்களே! தந்தைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உருவானதுடன், அடிக்கடி மருத்துவச் செலவுகளும் வந்ததே! வெளியில் சொல்ல முடியாத பல கஷ்டங்களை அனுபவித்தீர்களே! 

சிலர் தந்திரமாகப் பேசி உங்களை ஏமாற்றினார்களே! இனி அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். தொட்டது துலங்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தினருடன் நிலவி வந்த மனப்போர் நீங்கும். கணவன்&மனைவிக்குள் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் தீரும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்வார்கள். தந்தையார் குணமடைவார். அவருடன் இருந்த மோதல்கள் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைகளில் பல சிக்கல்கள் இருந்ததே, இனி முடிவுக்கு வரும். 

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு அங்கீகாரமில்லாத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தீர்களே, இனி அந்தப் பணமெல்லாம் கைக்கு வரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில் கடன்  கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பேசாமல் இருந்து வந்த சகோதரர் இனி பேசுவார். 
குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியருக்கு அழகிய, அறிவுள்ள குழந்தைப் பிறக்கும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை ஒதுக்குவீர்கள். 

கைமாற்றாக, கடனாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதை கிடைக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 9ம் வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் வீண் விரயம், பணப்பற்றாக்குறை, தந்தையுடன் மனத்தாங்கல், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.      
       
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:உங்கள் சுகாதிபதியும்&லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பணவரவு அதிகரிக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். ஆனால், செவ்வாய் பாதகாதிபதியாக வருவதால் அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டு மற்றும் முழங்கால் வலி வந்து நீங்கும். அசைவ, கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 

வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். மனைவியின் உடல்நலம் பாதிக்கும். மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பழைய கடன் பிரச்னைகள் ஓயும். 

நாடாளுபவர்களால் உதவியுண்டு. சிலர் இடவசதியுடன், கற்றோட்டமுள்ள குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த அயல்நாட்டிற்கு சென்று வருவீர்கள். 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் மூன்றாம் ராசிக்குரிய அதிபதியும் விரயாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் தைரியம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். 

புது முயற்சிகள் யாவும் வெற்றியில் முடியும். கோயில் கும்பாபிஷேகத்தை சொன்னபடி நடத்தி முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. சொத்து சேர்க்கை உண்டு. விலையுயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்துபோகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். 


சனிபகவான் உங்களின் 4ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். சனிபகவான் உங்களின் 7ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கர்ப்பப்பைக் கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். 

ஆனால் வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12ம் வீட்டை பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் 
ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள். இல்லத்தரசிகளே! உற்சாகமே இல்லாமல் சோர்வாக இருந்தீர்களே! இனி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். அதற்குக் காரணம் கணவர் பல விஷயங்களை உங்களுடன் கலந்தாலோசிப்பார். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! உங்களின் நிர்வாகத் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயரும். சம்பளம் அதிகரிக்கும்.

 கன்னிப்பெண்களே! காதலில் குழப்பம், கல்வியில் தோல்வி, கல்யாணத்தில் தடை என அடுக்கடுக்கான பிரச்னைகளால் நிலைகுலைந்து போனீர்களே! இனி உங்களுக்கு நல்லதே நடக்கும். வீட்டில் பார்க்கும் வரனே 
முடியும். மாணவ&மாணவிகளே! விளையாட்டால் படிப்பில் நாட்டமில்லாமல் போனதே! இனி படிப்பில் ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளே!  போட்டிகளை முறியடிப்பீர்கள். பழைய கடையை புதுப்பித்து விரிவுபடுத்துவீர்கள். 

வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சில விளம்பர யுத்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள். உத்யோகஸ்தர்களே! ராசிக்கு 10ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உயர்வு உண்டு. அநாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். 


முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். மேலதிகாரி உதவுவார். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். முக்கிய பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. என்றாலும் சாதகமாகவே அமையும். புது சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு.     அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் நல்மதிப்பைப் பெறுவீர்கள். 


கலைஞர்களே! முன்னணி கலைஞர்களுடன் அடிக்கடி மோதல் போக்கும் ஏற்பட்டதே! இனி அவற்றிலிருந்தெல்லாம் விடுபடுவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். விவசாயிகளே! கடன் தொல்லையால் நிம்மதி இழந்தீர்களே! பயிரைத் தாக்கிய பூச்சித் தொல்லை இனி இருக்காது. பக்கத்து இடத்தையும் வாங்குமளவிற்கு மகசூல் பெருகும். இந்த சனி மாற்றம் குடத்தில் விழுந்த விளக்காய் இருந்த உங்களை கோபுர விளக்காய் ஒளிர வைக்கும். 
பரிகாரம்:
விழுப்புரத்திற்கு அருகேயுள்ள பரிக்கல் நரசிம்மரை, சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். வசதி பெருகும்.

sani Peyarchi Palan 2011 - Dhanusu

எவ்வளவு சம்பாதித்தாலும் அலட்டிக் கொள்ளாதவர்களே. உயர்ரக வாகனம், விமானம் என மாறி மாறி பயணித்தாலும் பழைய மிதிவண்டி பயணத்தை மறக்காதவர்களே.இதுவரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்ந்து உத்யோகத்தில் பிரச்னைகளையும் புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். இதுவரை எந்த வேலையை எடுத்தாலும் முழு மனநிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்தாரே!

 உழைப்பு உங்களிடத்தில் மட்டும் இருக்கும். ஆனால் அதற்கான பாராட்டும் பயனும் மற்றொருவருக்கு போய் சேர்ந்ததே! வேலை பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசி கெட்ட பெயர் எடுத்தீர்களே! நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்களே! பணம், காசு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தியதே! இனி இவையெல்லாம் மாறும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனதில் தெளிவு பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். 

பணவரவுக்கு இனி குறைவிருக்காது. சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்படும். நாடாளுபவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன்&மனைவி இருவரும் கலந்து பேசி குடும்பச் செலவுகளை குறைக்க முடிவெடுப்பீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு வாங்குவீர்கள். மருந்து மாத்திரை என்று சதா சாப்பிட்டும் பிரயோஜனமில்லாமல் போன தம்பதியருக்கு இனி குழந்தை பாக்யம் கிடைக்கும். 

மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணத்தை முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும்.  மனைவி வழியில் மதிப்பு, மரியாதை கூடும். சகோதரர்கள் நெருங்கி வருவார்கள். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். இயக்கம், சங்கம் இவற்றில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாய்வழி விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். 

அத்தை, மாமன் வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அக்கம்&பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் அமர்வதால், இக்கால கட்டத்தில் உத்யோகத்தில் வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, ஏமாற்றம் வந்துபோகும். 

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்கள் பூர்வ புண்யாதிபதியும்&விரயாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சகோதரிக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களை எதிரியாக நினைத்த பலர், இனி உங்களின் நல்ல மனசை புரிந்துகொண்டு நட்பு பாராட்டுவார்கள். 

வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். பாதி பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் பிள்ளைகளால் அலைச்சலும் டென்ஷனும் வரக்கூடும்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பெரிய திட்டங்கள் தீட்டி வெற்றி பெறுவீர்கள். வேற்று மதத்தவர், மாநிலத்தவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டில் குடிநீர், கழிவுநீர் பிரச்னைகள் தீரும். உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.    

12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் ராசிநாதனும்&சுகாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டங்களில் தடைபட்ட திருமணப் பேச்சுவார்த்தை கைக்கூடும். கல்வியாளர்கள், தொழிலதிபர்களின் உதவி கிடைக்கும். ஷேர் பணம் தரும். அரசாங்கத்தால் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள் வாங்குவீர்கள். 

பெரிய பதவிகள் தேடி வரும். அவ்வப்போது பெரிய நோய் இருப்பதைப் போன்று இருந்த பயம் விலகும். சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்னைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். 

குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் உங்களின் 8ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வாகனத்தை இயக்கும் போது அலைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. சாலையை கடக்கும்போது கவனம் தேவை. இல்லத்தரசிகளே! விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் சேரும். கணவர் உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பார். நாத்தனாருக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும். 

அலுவலகம் செல்லும் பெண்களே! தேங்கிக் கிடந்த பணிகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! நீண்டநாள் கனவுகள் நனவாகும். கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். உங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். மாணவ&மாணவியர்களே! எத்தனை முறை படித்தாலும் மண்டைக்குள் எதுவும் தங்கவில்லையே! இனி கற்பூரமாய் பற்றிக் கொள்வீர்கள். 

அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். வியாபாரிகளே! தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர்களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். 

இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறு வனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்.    
உத்யோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமை கூடும். 

புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி புகழ்வார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கணினி துறையினர்களே! பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.
அரசியல்வாதிகளே! கட்சிக்குள் இருந்த மௌனப் போராட்டம் ஓயும். சகாக்களுக்கு மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.  


கலைஞர்களே! இழந்த புகழை ஈடுகட்ட வேண்டுமென்று பெரிய வாய்ப்புக்காக காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்துசேரும்.விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த மாற்றுப் பயிர் செய்யுங்கள். வாய்க்கால்&வரப்புச் சண்டை தீரும். இந்தச் சனிப்பெயர்ச்சி திக்கித்திணறி தவித்துக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் திடீர் திருப்பத்தையும், புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைப்பதாக அமையும்.
பரிகாரம்:
திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளை, அஸ்தம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 80 கி.மீ. தொலைவும் காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பாலுசெட்டி சத்திரத்தில் இறங்கியும் கோயிலுக்குச் செல்லலாம். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

Sani Peyarchi Palan 2011 - Vrichigam

மனதில் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசும் நீங்கள், அன்புக்கு அடிமையாவீர்கள். சட்ட திட்டங்களை சரியாக பின்பற்றும் நீங்கள், வரம்பு மீறி பழக மாட்டீர்கள். இலவசமாக எதையும் பெறமாட்டீர்கள்.இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப்புழக்கத்தையும் எதையும் முடித்துக் காட்டும் வல்லமையையும் தந்த சனிபகவான், இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள கால கட்டங்களில் விரயச் சனியாக, அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் வருகிறார். 

ஏழரைச் சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இதுவரை லாபவீட்டில் நின்றிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு எதையும் தரவில்லை. உங்கள் ராசிநாதனான செவ்வாய்க்கு பகைக் கோளாகிய சனி
பகவான் ராசிக்கு 12ல் சென்று மறைவதால் தடைபட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள். 
ஏழரைச் சனி தொடங்குகிறதே என்று பதற வேண்டாம். 

இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான் மனதில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தையும் எதிலும் ஈடுபாடற்ற நிலையையும் மன உளைச்சலையும் தந்தாரே. நம்பிக்கையின்மையால் துவண்டு போனீர்களே! குடும்பத்தில் சின்னச் சின்ன வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய் முடிந்ததே! எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாமல் அடுத்தடுத்து வீண் செலவுகள் செய்து கொஞ்சம் கடனும் வாங்க வேண்டி வந்ததே, ஆனால் தற்சமயம் விரய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். 

இதுவரை உங்கள் ராசி மீது விழுந்த சனியின் பார்வை இனி விலகுவதால் கம்பீரமாகப் பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன்&மனைவிக்குள் இருந்த பிரச்னை நீங்கும். 
பிள்ளைகளை கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். சனிபகவான் 6ம் வீட்டை பார்ப்பதால் வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். 

தாய்வழி சொத்து வந்து சேரும். மறைமுக எதிரிகளை இனங் கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். தடைபட்டகுலதெய்வ பிரார்த்தனையை தொடருவீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். யாருக்கும் விலை உயர்ந்த பொருட்களை, ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். நீங்களும் இரவல் வாங்க வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்காதீர்கள். நீதிமன்றம் செல்லாமல் முடிந்தவரை பிரச்னைகளை பேசி முடிக்கப் பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கு முன் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. 

சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் இக்கால கட்டத்தில் திடீர் யோகம், பணவரவு, வீடு, வாகன வசதி, வி.ஐ.பிகளின் அறிமுகமெல்லாம் உண்டாகும். வீட்டில் நல்லது நடக்கும். தியானம், யோகா இவற்றில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். வீடு, பூமி சேர்க்கை உண்டு. சிலர் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவார்கள்.          

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம் உங்கள் ராசிநாதனும்&சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் உடல் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கோபத்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.அரசு காரியங்கள் விரைந்து முடியும். வெகுநாட்களாக வராமலிருந்த பணம் இப்போது கைக்கு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். 

பெரிய பதவிகள் தேடிவரும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் திடீர் பயணங்கள், வீண் டென்ஷன், பாகப் பிரிவினையால் பிரச்னைகள் வந்து செல்லும்.9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் புதிய நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். 

உங்கள் பேச்சில் பக்குவம் தெரியும். லோன் மூலம் புது வாகனம் வாங்குவீர்கள். வெகுநாட்களாக அயல்நாடு செல்ல திட்டமிட்டிருந்தீர்களே, இப்போது விசா கிடைக்கும்.   உங்கள் பூர்வ புண்யாதிபதியும்&தனாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உள்ள காலகட்டங்களில் தொட்ட காரியம் துலங்கும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்யம் கிட்டும். 

குடும்பத்தில் நல்லது நடக்கும்.  விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் சேரும். பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள்.  குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள். வீடு கட்ட லோன் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 2ம் வீட்டை பார்ப்பதால் பணம் வரும். ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்தும். பேச்சால் பிரச்னை, பார்வைக் கோளாறு வரக்கூடும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள். சனிபகவான் உங்களின் 6ம் வீட்டை பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். 

சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சுவலி, கை, கால் அசதி வந்து நீங்கும். வெளிமாநில புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.   இல்லத்தரசிகளே! விசேஷங்களுக்கு போய் வரக்கூட நகை நட்டுமில்லாமல் அடகில் இருந்ததே! இனி அவற்றையெல்லாம் மீட்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. அலுவலகம் செல்லும் பெண்களே! உடல்நலக்குறைவால் அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிட்டதே! இனி ஆரோக்யம் கூடும். புதிய பொறுப்புகள் தேடி வரும். 
கன்னிப் பெண்களே! உங்கள் காதலின் உண்மையான ஆழத்தை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். வாடி வதங்கியிருந்த உங்கள் உடலும், முகமும் இனி மலரும். திருமணம் கூடும். 


மாணவ&மாணவிகளே! வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனியுங்கள்.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். மருந்து, கமிஷன், மர வகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும். 

உத்யோகஸ்தர்களே! சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள்.  வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையை தேடி வரும். சக ஊழியர்களுடன் சலசலப்பு உண்டு. உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு. கணினி துறையினர்களே, பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவீர்கள்.


அரசியல்வாதிகளே, உங்களை பதவியிலிருந்து நீக்குவதற்கே கட்சிக்குள் சிலர் முயற்சி செய்து வந்தார்களே! அதற்கு பதிலடி கொடுப்பீர்கள். மக்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு உயரும். கலைஞர்களே! உங்கள் படைப்புகள் பட்டி தொட்டியெல்லாம் பரவும். சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள். விவசாயிகளே! விளைச்சலை அதிகப்படுத்த நவீனரக உரங்களுடன் இயற்கை உரங்களையும் பயன்படுத்துங்கள். அடகிலிருந்த பத்திரங்களை மீட்பீர்கள்.
இந்த சனி மாற்றம் வேலைச்சுமையையும், கொஞ்சம் அலைச்சலையும் தந்தாலும், வருங்கால முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
பரிகாரம்:
ஆரணி&படவேடு தடத்தில் ஏரிக்குப்பம் எனும் ஊரில் வீற்றிருக்கும் யந்திர சனீஸ்வர பகவானை, மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விதவைப் பெண்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.